புதன், 28 மார்ச், 2012

அன்புக்கு இல்லை தூரமும் தொலைவும்....



ஐம்பதாயிரம் யோசனை தூரத்தில் உள்ள மழை முகில் கண்டு மயில் நடனமாடும்.. நூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சூரியன் முகம் பார்த்து தாமரை இதழ் மலரும். அதற்கு இரண்டு மடங்கு தூரத்தில் உள்ள சந்திரனைக் கண்டு சிவப்பு ஆம்பல் பூக்கள் மலர்ந்திடும். எனவே...எங்கிருந்தாலும் அன்புடையவர்கள் இதயத்தால் மிக நெருக்கமாகவே இருப்பர். அன்பு கொண்ட உள்ளங்களைத் தூரம் பிரிப்பதில்லை.