தொலைத்ததும் .. கிடைத்ததும் ..!
- Wednesday, August 21, 2013, 5:10
- இலக்கியம், தொடர்கதை
- Add a comment
ஜெயஸ்ரீ ஷங்கர்
யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் .
“அதுக்கென்ன இப்போ?”
என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு…
“ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….” என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,
“ஒனக்கு சந்தோஷப் படவே தெரியாதா?”
சிடு சிடுத்து விட்டு தனது சுடிதாரின் துப்பட்டாவை ஓங்கி உதறி சரி செய்து மேலுக்குப் போர்த்திக் கொண்டபடியே அடுக்களைக்குள் நுழைகிறாள் மலர்விழி.
அவளது வனப்பில் அவளுக்கே கர்வம் உண்டு.
இறைவன் அவளது குடும்பத்தில் ஏழ்மையைக் கொடுத்த அதே அளவுக்கு அவளிடம் அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.
“எம்மாவ் …உப்பு ஜாடிய நீ எங்கிட்டு வெச்சிருக்கே…இங்கன ஒரே இருட்டாவுல்ல இருக்குது…..வெச்சவுங்களுக்குத் தானே இருக்குற எடம் தெரியும்…நீயே வந்து எடேன் ….அலிபாபா குகை மாதிரி ஒரு அடுக்களை….இதுல எதுக்குள்ளார என்ன இருக்குமுன்னு எனக்கு சோசியமாத் தெரியும்…”
ரெண்டு நாளு முன்னாடி ரேசன் கடைக்கிப் போயி சீமத்தண்ணி ஊத்தறாண்டு சொல்லி அம்பது ரூவாவ புளி வெச்சிருந்த ஜாடிக்குள்ளார போட்டு வெச்சிருக்கேன் எடுடீண்டு சொன்னே….அதுக்குள்ளார கைய விட்டா…..அப்பா ஓடியாந்து எடுக்காதே…எடுக்காதேன்னு ஒடியாந்தாரு ….என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா அதுக்குள்ளார அம்பது
ரூபா குவாட்டர் பாட்டிலா மாறிக் கெடந்துச்சு…..இதெல்லாம் நீ கண்டுகிடவே கண்டுகிடாத…..ஆமா…..நீயா தண்ணியடிக்கிற? என்று எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள் மலர்.
அடி கூறுகெட்ட சிறுக்கிடி நீ….ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லுவ.. உன்கிட்ட எதுனாக் கேட்டுப்புட்டு எனக்கு உடனே கேட்டது கிடைச்சுருமா? கரண்டு இருந்தா நான் என்னாத்துக்கு இப்படி ஆட்டுக்கல்லாண்ட மல்லுக் கட்டி நிக்கப் போறேன். கிரைண்டர்ல போட்டு ஆட்டிக்கிட மாட்டேன். வந்துட்டா..குவாட்டரையும் ..இருட்டயும் பத்தி பேச…என்று எழுந்திருக்க முடியாமல் ரொம்பக் சங்கடத்தோட கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து….யம்மா… இன்னும் ரெண்டு இட்டிலி போடுன்னு கேட்டு வாங்கித் தின்னத் தெரியும்….இட்டிலிக்கி எதை எப்படி ஊறப் போடுறதுன்னு கூடத் தெரியாது..என்னிக்காச்சும் சமயக்கட்டுப் பக்கம் வந்து நின்னாத் தானே…அப்படி வீட்டுக் குள்ளார ஒரு ரூம்பு இருக்கறதயே நீ கண்டுக்கிட மாட்டே….முனகியபடியே உப்பை எடுக்க சமையல் கட்டுப்பக்கம் போனாள் மங்களவல்லி. கூலி வேலைக்கு போறவரு அலுப்பு சலுப்பு நீங்க ரூபாய எடுத்த எடத்துல வாங்கி வந்தத வெச்சிருக்கும். அவுகளுக்குத் தான் புத்தியில்ல…..கேக்குற உனக்குமா இல்ல…..பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப் பாரு. தண்ணியடிக்கிறியா…? தண்டால் எடுக்கிறியாண்டு…!
யம்மா…நான் மேல் படிக்கப் போறேன்….டீச்சர் டிரைனிங் ஒரே வருஷம் தான்….அதுக்கு நான் காலேஜுல சேரணும் …ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேணும் என் ஃபிரண்டு சரோஜா சேர்ந்துட்டா..சேத்தியார்தோப்புல இருக்குது காலேஜு….இங்க சீர்காழில இருந்துக்கிட்டு வயலு வரப்ப பார்த்துக்கிட்டு அதுவும் நமக்கு சொந்தமில்லாததை, யாருக்கோ கூலிக்கி மாரடிச்சுக்கிட்டு ஒரு வசதியும் இல்லாமா இருக்குறத விட ….பேசாம நாம கூட வேற எங்கியாச்சும் நல்ல டவுனு பக்கமாப் பார்த்துப் போயிறலாமா ?
நல்லாக் கேட்டியே ஒரு கேள்வி…பொறந்து, வளர்ந்து, வாக்கப்பட்டு, உழைக்கிற பூமிடி இது…இத்த உதறிப்புட்டு எங்கன எங்கள வரச் சொல்லுற ? நீ என்னமோ பெரிய தொரசாணி வீட்டம்மா கணக்கா பேசிபுட்டா ஆயிரிச்சா…..நான் அன்னிக்கி அடிச்சிகிட்டேன்…அடுத்த வூட்டுக்குப் போயி கரண்டி பிடிக்கிற கையி…இதுக்கு எதுக்கு பெரிய படிப்புன்னு….?உங்கப்பாரு கேட்கலை…நீ எங்க கேக்க வெச்சே…..காலேஜு படிப்பு படிக்கிறேன் ன்னு ஒத்தக் காலுல அடம் பிடிச்சி அறுவடைப் பணத்த அம்புட்டயும் அள்ளிக் கொண்டுட்டு போயி அந்த பாளாப் போன கடடுடத்து கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!
எம்மா…அது படிக்க பீசு ….அன்னிக்கு அம்புட்டு கொடுத்ததாலத் தான இன்னிக்கி நானு ஒரு கிராஜு வேட் ன்னு பெருமையா சொல்லிக்கிட முடியுது. இனிமேட்டு நான் பி.எட் படிச்சிட்டா அம்புட்டுத்தேன்…..ஒரு டீச்சர் ஆகிப்புடுவேன். அதுக்குப் பெறவு நான் ஏன் உன்கிட்ட மேல படிக்கிறேன்னு கெஞ்சிக்கிட்டு நிக்கப் போறேன்.
அன்னிக்கி என் தம்பிய கட்டியிருந்தீனா இன்னிக்கி கையில புள்ளயோட நீயும் துபாய் போயிருக்கலாமில்ல, கூறு கெட்டவளே..! நல்ல சான்சை நளுவ விட்டுப்போட்டு இப்பக் கெடந்து அலபாயுற. நீ என்னாத்தப் படிச்சா எவன் கேட்குறான்….கலியாணம் பண்ணி புள்ளையப் பெத்தமா போய் சேர்ந்தமான்னு நிக்காம…இவ படிச்சி ஊருக்குச் சொல்லிக் கொடுத்து பயபுள்ளைய சீமைக்கு அனுப்பப் போறியாக்கும்….? திருட்டுப் பயலுவ நடமாடற ஊருடி இது….எங்கிட்டுப் பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா நடக்குது. கலியாணம் தாண்டி பாதுகாப்பு. வெளங்கிச்சா?
எம்மா …எம்புட்டு சொல்றது. உம்ம மூளைக்கு முண்டாசு தான் கட்டோணம்.சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது பிரச்சனை தான் வந்து பொறக்கும் …எம்புட்டு சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டே.. கூறப் பத்தி நீ என்கிட்டப் பேசுறியா?
மவ படிக்கிறாளே….நெறையப் படி…நான் தான் ஸ்கூல் போகலை நீனாச்சும் பெரிய டீச்சரா வரணும்டு சொல்ல முடியல உன்னால….துபாயில மாமா என்னா வேலை பாக்குது தெரியாதா? வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து உன்கிட்ட ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா அவுரு பெரிய சீமைத் துரையா ? கொடுத்த் ரூபாய்க்கு இங்கனயே உக்காந்து ஆட்டுக்காலு சூப்பு வெய்யின்னு சொல்லி குடிச்சே கழிச்சுட்டு போயிருவாரு…நீயே தெனம் சொல்லிகிட்டே தானே இருப்பே. இப்ப நான் படிக்கோணும்..அதுக்கு வழி சொல்லு. உன்னோட வெளங்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்னால ஆவாது.
அடிப் போடி…வழக்குக்குப் பொறந்தவளே….என்னால இனிமேட்டு உன்னிய உக்கார வெச்சி படிக்க வெக்க முடியாது..நீ எங்கிட்டும் போக வேண்டாம்…பேசாம என்னோட சேர்ந்து மாயவரம் மார்கெட்டுல பூ வாங்கி கட்டி வைத்தீஸ்வரன் கோயில்ல விக்கிறதுக்கு உதவி பண்ண முடியுமாண்டு போளப்பப்பாரு போ.
அதுக்கு நீ வேற ஆளப் பாரு…! சொடக்கென சொல்லிவிட்டு எழுந்து கொல்லப்புறம் சென்று விட்டாள் மலர்விழி.
அடியாத்தி……இவளுக்கு வாரக் கோவத்தப் பாரேன்…இதையே அவ மாமியா கையில சொல்லியிருந்தா என்னத்துக்காவுது….ஊசி நூலு வெச்சி தெய்ச்சிருவாக. என்னியுமில்ல கிழி கிழின்னு கிழிச்சிருவாக. வாயில கோர்ட்டை வச்சிக்கிட்டு நிக்கிறா. என் சரக்க இப்படி வெச்சிக்கிட்டு நான் எவ கிட்ட என் மவளுக்கு மாப்பிள்ளை தேட. தெரிஞ்சவன் ஒரு பய கட்ட வரமாட்டான். தெரியாதவன் சிக்க நான் தெருத் தெருவாவுல்ல நடந்தாகணும். ஆட்டுக் கல்லோடு சேர்ந்து இவளது எண்ணமும் அரைந்து கொண்டிருந்தது.
முதல்ல சென்னை பட்டணத்துக்குப் போகணும்ன்னு தான் சொல்லுவா அப்பால சினிமால எவனோ நடிக்க கூப்புட்டான்னு சொல்லி அப்படியே …ஓடிப்போயிருவே. இம்புட்டு வயசானவ நானே இன்னும் மெட்ராசுக்குப் போனதில்ல தெரியுமா?
உனக்கு கேக்குது…அதுக்குத்தான் படிக்கவே வைக்கக் கூடாது ..
அரசு சலுகையில் ரொம்ப சுலபமா படிச்சிப்புடலாமுன்னு இருந்தேன்….இந்தம்மா இப்படி முரண்டு பிடிக்கிறாங்க….அப்பா வரட்டும்…..கெஞ்சி அளுதுப்புட வேண்டியது தான். அப்பவாச்சும் கேப்பாக. அம்மா முரண்டு தெரிஞ்சது தான.
கரண்ட்டு இல்லாத சீர்காழி மெல்ல மெல்ல இருண்டு இருண்டு ஊரே இருக்குமிடம் தெரியாமல் இருளில் அமிழ்ந்து போனது. சென்னையில பூரா வெளக்கும் எரிஞ்சு சும்மா ஜிகு ஜிகுண்டு இருக்குமாம்ல.
ஷீலா நேத்துக் கூட போன்ல சொல்லிச்சு. எப்படியாச்சும் சென்னைக்கு போயி ஒரு நாலு காசு சம்பாதிச்சிட்டு வந்திறணம். ஒரு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிச்சா……..போதும் போதும்…..எப்படியாச்சும் டீச்சர் ஆயிறலாம். கண்ணுக்குள் நினைவுகள் பள்ளிக்கூடம் எழுப்ப அப்படியே மயக்கத்தில் உறங்கிப் போனாள் மலர்விழி.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
இன்னாம்மா ஷீலா…நீ இன்னாமோ நாலஞ்சு பொண்ணுங்கள வேலைக்கி இட்டாரேன்னு சொன்னியே…இன்னாச்சு? அதுங்க எப்போ வருதுங்க ? இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி? அதட்டினார் மானேஜர் ஆறுமுகம்.
ஊருல சொல்லிருக்கேன் சார்…எப்பிடியும் வந்துருவா..ஒருத்தி கண்டிப்பா வரேன்னு சொல்லிருக்கா. சம்பளம் சொன்னீங்கன்னா..என்று தயக்கத்துடன் இழுத்தாள் ஷீலா.
அது இன்னா வந்து என்னாட்டமா மேனசர் உத்தியோகமா பாக்கப் போவுது? மீனுல முள்ளு எடுக்குற வேல தான…எல்லாம் தருவோம்…இப்போ நீ எம்புட்டு துட்டு வாங்குற?
ஒரு நாளிக்கி ஓ.டி எல்லாம் சேர்த்து முந்நூறு ரூபா வாங்கறேன் சார். இன்னும் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுங்களேன் சார்..என்று சந்தடி சாக்கில் தன்னுடைய பெட்டிஷனை தயங்கி தயங்கி சொல்கிறாள் .
ம்ம்ம்..அதும் வந்து ஓ.டி பாக்கச் சொல்லு முந்நூறு ரூபாய் கெடைக்கும்..சரியா….இன்னா படிச்ச புள்ளையா? நீ ஒரு பத்து உருப்படி பிடிச்சிக் கொடு. கமிஷன் எதாச்சும் போட்டு வாங்கிக்க.
சரிங்க சார்.ஆமா பி.எஸ்.ஸி முடிச்சிருக்கு…டீச்சர் ஆக ஆசை…பி.எட் படிக்க பீஸு கட்டத் தான் இங்கன வேலைக்கு வாரேன்னு சொல்லிச்சி.
அப்பால இன்னா ….கூட்டிட்டு வா…இன்னா படிச்சா இன்னா இங்கன எடுக்குறது முள்ளு தான..படிப்புக்கெல்லாம் கூட துட்டு கெடைக்காது சரியா?
இன்னும் ரெண்டு நாளுல வந்திருவா சார். வேலை கண்டிப்பா தரணும் …அவ சீர்காழி லேர்ந்து வரணும்.ரொம்பவும் கஷ்டப் படுற குடும்பம். கூலிக்கு விவசாயம் பண்ணுற குடும்பம்.
சரி தாயி….நீ அழைச்சுட்டு வா….பார்ப்பம்.
ஷீலா நிம்மதியோடு எப்படியாச்சும் தன்னுடைய கல்லூரித் தோழி மலர்விழிக்கும் இங்க ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நிம்மதியில் ஏறாலைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
மாலையில் கைபேசியில் மலர்விழியை அழைத்து விஷயம் சொல்லவும்….”டீ….மலரு…..வெரசாக் கெளம்பி பொழுதோட சென்னை வந்துருடி,,,,கிண்டில எறங்கிடு….நான் வந்து கூட்டிட்டு வந்துர்றேன்….நான் எதிர்பார்த்து காத்திட்டு இருப்பேன்..எங்க மேனேஜர் சார் கிட்ட சொல்லிட்டேன். வேலை போட்டுத் தாரேன்னு உத்தரவாதமா சொல்லிட்டாரு. நீ பத்திரமா கவலைப் படாமே வந்து சேரு. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கைபேசியை மூடியவள் தனது ரூமுக்கு விரைகிறாள்.
ஹாஸ்டல் ரூம் வாசலில் பாண்டியன் அவளுக்காகவே காத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள் மனசுக்குள் இன்னிக்கும் வந்து நின்னுடானே……வந்த என்னத்தை முகத்தில் காட்டாமல்….வாங்க வாங்க…..எப்ப வந்தீங்க…என்று கேட்டுக் கொண்டே எங்கிட்டாச்சும் வெளிய போயி சாப்பிட்டு வரலாம் இல்லியா..? இங்க ஹாஸ்டல் ரூமுக்கு நீங்க இன்னிக்கு வர வேண்டாம்…வார்டன் அம்மா திட்டுறாங்க…என்கிறாள்.
சரி…ஷீலா…இன்னைக்கு இப்ப போன் .போட்டேன்..எங்கேஜா இருந்துச்சு…..யாருகிட்ட இம்புட்டு நேரம் பேசிகிட்டு இருந்தே? வேலை முடிஞ்சதும் நான் ஒருத்தன் காத்துக்கிட்டு இருப்பேன்னு நெனப்பே வர்லியாக்கும் இந்த சுந்தரிக்கி…சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தைக் கிள்ளியபடியே….சரி இன்னிக்கு எம்புட்டு துட்டு கெடச்சிச்சி …ஒரு அமௌண்ட வெட்டு…நான் பாட்டுக்கு போயிட்டே இருக்கேன்….சரக்கடிக்கிற எடத்துக்கு நீ இன்னாத்துக்கு?
நீ ரூம்புக்கு போயி தின்னுட்டு தூங்கு…நாளிக்கு “சிங்கம்” படத்துக்கு அளச்சிட்டு போறேன்….என்னான்கறே..சரி தானே புள்ள?
அடச்சீ……உன்னையல்லாம் எனக்குக் காதலன்னு சொல்ல வெச்சிட்டியே…எங்க ஊருல என்னோட வீட்டுக்கு தெரிஞ்சா என்னிய கண்டந்துண்டமா வெட்டி கூரு போட்ருவாக. மருவாதியா இனிமேட்டு என்கிட்டே காசு கேக்குற வேலைய விட்று. நான் இன்னா உனக்குக் கொடுக்கவா ராவில்ல பகலிலன்னு கையி வலி புடுங்க மீனு முள்ளு எடுத்து பாக்கிங் பண்ணிட்டு வாரேன். கஷ்டப் பட்டு உழைக்கிற காசை உன் போதைக்கு செலவு செய்ய என்னால ஆவாது. அதுக்கு நீ வேற எவளையாவது பாரு. நம்ம கையில உன்னோட நாட்டாமை இனிமேட்டு நடக்காது. எனக்கு சிங்கமும் வேண்டாம் எந்த அசிங்கமும் வேண்டாம்…நீ ஆளவிடு சாமி…இரு கையையும் சேர்த்து கூப்பி உனக்கு கோடி புண்ணியம்…போயிரு…என்கிறாள் ஷீலா.
அடியே….நீ இப்படிச் சொன்னா…..போயிருவோமா? அன்னிக்கு நீ தான் என் புருஷன்…..கட்டினா உன்னத் தான் கட்டுவேன்னு பேசின….அதுக்குள்ளாற நான் கசந்து போயிட்டேனா? வேற எவனாச்சும் லைனு போட்டானா? பொறம்போக்கு….இந்தாரு ஷீலா….
மனுசனுக்கு ஒரே பேச்சு….நான் பாட்டுக்கு போயிட்டு இருந்தேன்…நீ தானடி சிரிச்சே…..நீ தான உங்க பேரு என்னன்னு கேட்டுகிட்டு வந்து நின்ன..மறந்து போச்சா? நீங்க இப்படி சும்மா இருந்தவன கிண்டி கெளப்பி விடுவீங்க….நாங்க உங்க போதைக்கு ஊறுகாயா இருக்கணுமாக்கும்? உங்களுக்குப் பிடிச்சா நாங்க காதலன்….பிடிகாட்டிப் போனா அப்பால களட்டி விட ம்ம்ம்…..பிளானு…சம்பாதிக்கிற ஏத்தம்….பல்லை நற நற வென்று கடித்தபடி மெல்லிய குரலில் .சொல்லிக்கொண்டே தனது பாண்ட் பைக்குள் கையை விட்டு “இந்தாரு…ஷீலா….இதுக்குத் தான் நானும் கையோட மஞ்சக் கயிறு வச்சிக்கிட்டு அலையிறேன்…ஹாஸ்டல் வாசல்னு கூட பார்க்க மாட்டேன்……வார்டனை கூப்பிட்டு முன்னால வெச்சி உன் களுத்துல இத்தக் கட்டி இறுக்கிருவேன்…..என்று ஆவேசத்தோடு நெருங்குகிறான் அவன்.
இந்தா…நிறுத்து….நான் என்ன உங்கள கலியாணம் கட்ட மாட்டேன்னா சொன்னேன். குடிக்க காசு தர மாட்டேன்னு தான் சொன்னேன்.
அதுக்கு இம்புட்டு சிலம்புறே…இந்தா….பிடி நூறு ரூவா….எங்கியோ டாஸ்மாக்குல போயி பிறாண்டு…….இப்ப நீ ஆள விடு….அவன் கையில் ரூபாயைத் திணித்து விட்டு…இப்படிப் போயி மாட்டிக்கிட்டேன்….பார்க்க ஜீன்சும் டீஷர்ட்டும் போட்டுக்கிட்டு தனுஷ் மாதிரியே இருந்தான்…..நான் போற வாற எடத்துக்கு கூடவே பின்னாடி வந்துக்கிட்டு இருந்தான்…..நல்லவராத் தெரிஞ்சான்…….நாலு மாசத்துல ரௌடித் தனத்த காமிக்கிறான்…புலம்பியபடியே தன அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திவிட்டு ….பாயில் படுத்தவள் தலையணையில் முகம் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்தாள். மனத்துக்குள் ” இவனிடமிருந்து தப்பிப்பது எப்படி ?” என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மயிலே….மயிலே…இறகு போடுன்னு சொன்னா இவளுகளுக்கு ஏறாது…..எல்லாம் நம்ம ரூட்டுல பேசினா அப்டியே இளகிறுவா…இவளைத் தெரியாதா? என்று சொல்லிக் கொண்டே நானா என்னிய காதலின்னு சொன்னேன்….நீயா வந்து மாட்டிக்கிட்டே.
சொல்லிக் கொண்டே தனது சைக்கிளில் ஏறி…..”இரவினில் ஆட்டம்…..ம்ம்ம்ம்ம்……. பகலினில் தூக்கம்….ம்ம்ம்ம்ம்…….இது தான் எங்கள் .உலகம்..எங்கள் உலகம்…..” என்று பாடிக் கொண்டே டாஸ்மாக் கடையை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் பாண்டியன்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
அப்பாவின் காலைப் பிடித்ததில் அவர் மனம் இறங்கியதும் அவர் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு அப்பா….ன்னா அப்பா தான்…..என்று குதித்து ஓடி விரைவில் ஒரு தகரப் பெட்டிக்குள் உடைகளை திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் மலர்விழி.
புலம்பிக் கொண்டிருந்த அம்மாவிடம்…..எம்மா…..போயிட்டு கை நிறைய துட்டோட வந்து நிப்பேன் பாரு…அப்பச் சொல்லுவே….என் ராசாத்தி….நீ டீச்சரா வாரா மாதிரி கனவு கண்டேன்ன்னு…..கொஞ்சம் சிரிச்சாப்புல தான் என்னிய அனுப்பி வையேன்…என்று மங்களவள்ளியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மலர்விழி …சிணுங்குகிறாள்.
சொன்னாக் கேக்காத மவளை நான் எப்படி போயிட்டு வாடின்னு சொல்லுவேன். உனக்கு உங்கப்பாரு கொடுக்குற செல்லம். போயிட்டு வா…நீ நம்புற உலகம் உனக்கு பாடம் எடுக்கும். அப்பறமேட்டு தெரிஞ்சிட்டுப் போவுது.
சீர்காழி பஸ் நிலையம்.
“சிதம்பரம்…..கடலூர்…..பாண்டி……திண்டிவனம்…..சென்னை…..ஏறு…..ஏறு….ஏறு….”
மலர்விழியின் காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது அந்தக் குரல்.
அப்பா நான் வரேன்….என்று கையசைத்து விட்டு…பஸ்ஸில் ஏறி ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.
“சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கையை நீட்டினா……காசு மழை கொட்டணும்…
குடிக்கிற தண்ணி …..காசு….
கொசுவை விரட்ட …..காசு…”
பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.
“ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு.
பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.
“ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு
எங்கிட்டு எறங்கோணம்….கோயம்பேடு தானா?
…..என்னது……கோயம்பத்தூர் இல்லீங்க….கிண்டி……கிண்டி போகுமில்ல..? குழப்பத்துடன் கேட்கிறாள் மலர்விழி….கண்களை மலர்த்தி கொண்டு .
அட….ஊரு பேரு தெரியாத புள்ளைங்க எல்லாம் வம்பை வெலக்கி வாங்கபஸ் ஏறி சென்னைக்கு டிக்கெட் கேக்குதுங்க….! முணு முணு த்துக் கொண்டே இருநூறு ரூபாய் எடு…. டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்து விட்டு…. மலர்விழியை ஓரவிழியால் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்கிறான்.
இதை எதையும் கண்டு கொள்ளாமல் மலர்விழி பஸ்ஸில் பாடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி அதில் ஐக்கியமாகி ரசித்தபடியே கண்களை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் அப்படியே ஜன்னல் கம்பியோடு தன் முகத்தை சாய்த்துக் கொண்டு வந்த காற்றில் அப்படியே உறங்கிப் போகிறாள்.
0 0 0 0 0 0 0 0
இந்தா.பாப்பா……கிண்டி…கிண்டி…..வந்திரிச்சி…….எந்திரி….எந்திரி……நீள விசில் அடித்து பஸ் ஸ்டாண்டில் உறுமிக் கொண்டு நின்றது.
திடுக்கிட்டு விழித்த மலர்விழி அவசர அவசரமாக அவளது தூக்கிக் கொண்டு இங்கவும்……போலாம்…ரைட்….என்ற குரலுக்கு அடங்கி பஸ் கிளம்பியது.
சென்னையில் இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்ததன் அடையாளமாக ரோடெல்லாம் ஈரம்….சகதி. மெல்ல மெல்ல காலை வைத்து நடைமேடையில் ஏறி நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள், எங்காவது தோழி ஷீலாவின் முகம் தெரிகிறதா….?
என்று.
ரோட்டின் அடுத்த பகுதியிலிருந்து கையை ஆட்டியபடியே…..வந்த ஷீலா …”ஏய்….மலரு…..நான் இங்கிட்டு இருக்கேன்…. நீ அங்ஙனயே நில்லு நா வாரேன்…..என்றவள் நீண்ட நாட்கள் கழித்து மலரைக் கண்ட மகிழ்வில் வேகமாக ஓடி வருகிறாள்.
அடியே…..நடு ரோட்டுல இப்படி ஓடி வராதடி…எவனாவது இடிச்சி தள்ளிட்டு போயிருவான்…பதற்றத்தில் மலர் அங்கிருந்தபடியே கத்துகிறாள்.
அதற்குள் அருகில் வந்துவிட்ட ஷீலா….மலர்விழியை அப்படியே கட்டிக் ..கொண்டு.நல்ல வேள புள்ள…சொன்னபடிக்கி ..நீனாச்சும் வந்த…..நம்ம லதா, வாணி, கீதா, மாரியம்மா, அந்த கோண மூக்கி கோவிந்தம்மா அது கூட வரல தெரியுமா? என்று ஆதங்கத்தோடு படபடத்தாள்.
சரி விடுடீ …என் வீட்டுலயும் உனக்குத் தான் தெரியுமே….என் அம்மா விடவே இல்லை….எப்படியோ எங்கப்பா காலைப் பிடிச்சி காக்கை பிடிச்சேன் ஒருவழியா ஒத்துக்க வெச்சேன், அவுக மனசு மாறக்குள்ள பெட்டியை கட்டிப்புட்டேன்…என்று தனது சாமர்த்தியத்தை சந்தோஷத்துடன் ஷீலாவிடம் சொல்லிக் கொண்டே நடந்தாள் மலர்.
திடீரென்று திரும்பிப் பார்த்த ஷீலா…உடனே சரிடி..நாம சீக்கிரமா வேலைக்குப் போவணும் …கொஞ்சம் வெரசா நடக்கிறியா…இந்தா அந்தப் பொட்டிய என் கையில கொடு என்று சொல்லி வலுக்கட்டாயமாக மலரின் கைகளிலிருந்து பெட்டியை இழுத்தவளின் அவசரத்தைக் கண்ட மலர்….இந்தாடி…..இவனுங்களுக்கெல்லாம் நீ ஏன் இம்புட்டு பயப்படுறே…..நானும் கவனிச்சேன்…கிறுக்கன்….அப்பமேட்டு நம்ப ரெண்டு பேத்தையுமே நோட் பண்ணிக்கிட்டு நிக்கான். கொஞ்சம் பொறு நான் வேணா போயி ரெண்டு வார்த்தை கேட்டுபுட்டு வரவா? என்று கேட்ட மலரின் கைகளை இருக்கப் பற்றிய ஷீலா, வேற வம்பே வேண்டாம்…..நீ ஒண்ணு …அது என் ஆளு தான்…பேரு பாண்டியன். நான் எங்கிட்டு போனாலும் அதுக்கு மூக்குல வேர்க்கும் போல…வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடும். நீ வார விசயத்தை சொல்ல வேணாமுன்னு ரகசியமா வெச்சிருந்தேன்…எப்படியோ மோப்பம் புடிச்சி வந்து நின்னுடிச்சி…நீ கண்டுகிடாதே. என் பக்கத்திலயே நட….பல்லைக் கடித்தபடியே மெல்லிய குரலில் சொல்லி முடித்த ஷீலாவை அதிசயமாகப் பார்க்கிறாள் மலர்.
இன்னாடி சொல்லுறே ஷீலா….உன் ஆளா…..நீ லவ்வு பண்றியா? பட்டணத்துக்கு வந்ததும் உடனே இதுவும் வந்துருமா? ஆனா எனக்கு இதுக்கெல்லாம் தகிரியம் இல்ல…அதுக்கு உண்டான மூஞ்சியும் இல்லை….என்று அலுத்துக் கொள்ள…
யாரு சொன்னா? என் மூஞ்சிக்கே ஒருத்தன் கிடைக்கும் போது ….உன்ன மாதிரி அழகிக்கு….அடியே மலரு…நீ ரொம்ப அழகு தெரியுமா?
ஷீலா மலரைப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறாள். பிறகு ஆமாம் நீ கொள்ளை அழகு…அதான் உன் அம்மா உன்னைப் பொத்தி பொத்தி வெயக்குது ….என்று முடிக்கிறாள்.
மலர்விழிக்கு எங்கிருந்தோ ஒரு கர்வம் வந்து அவள் தலையில் ஒரு மலர்கிரீடம் வைத்து விட்டுப் போனது. மனத்தில் எழுந்த சந்தோஷ உணர்வுகளுக்கு வார்த்தைகளைத் தேடித் தவித்தவள்…….ஒன்றும் புரிபடாத நிலையில், “அழகெல்லாம் முருகனே…அருளெல்லாம் முருகனே….தெளிவெல்லாம் முருகனே…தெய்வமும் முருகனே…தெய்வமும் முருகனே…”என்று பாடியபடியே இன்னும் எத்தனை தூரம் போவணும் நீ குடி இருக்குற வீட்டுக்கு? என்று கேள்வியும் கேட்கிறாள்.
ம்ம்ம்…வீடில்லை…ஹாஸ்டல் ரூம்பு…ஒரு மாசம் தங்கறதுக்கு மூவாயிரம் ரூபாய். கட்டிலு மெத்தை எதுவும் கிடையாது..வெறும் பாயும் தலையணையும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..இந்த சென்னையில இங்கன தான் இம்புட்டு சீப்பா ரூம்பு கிடைச்சுச்சு. வேறேங்கேனா போனா நாம சம்பாதிக்கிற அம்புட்டையும் அவுங்க கிட்ட தந்துட்டு மானத்தப் பாத்துட்டு சிரிச்சிகிட்டு நிக்கோணம். இதோ இந்த கட்டடம் தான் ஹாஸ்டல்….பாத்தியா பேர …”சாந்திக் குடில்”. உனக்காச்சும் இங்க எங்கிட்டாவது சாந்தி கெடைக்குதா பார்க்குறேன். என்று ஷீலா சொல்லிக் கொண்டே உள்ளே நுழைகிறாள்….மெல்ல வா அந்த கதவுல ஒரு ஆணி நீட்டிக்கிட்டு கெடக்கு…உன் கையை இல்லாத போனா உன் துப்பட்டாவை கிழிச்சி தொலைக்கும். பார்த்து வா..என்று கொண்டே வராண்டாவில் காலடி எடுத்து வைக்கவும்.
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….கிழிஞ்சிடுச்சிடீ…!மலர் அழாத குறையாக அலறவும்.
நான் தான் பார்த்து வான்னு சொல்லிட்டே இருக்கேன்ல….போனாப் போவட்டும்..வேற வாங்கிகிறலாம். டி .நகர் போவோம்ல அங்கன வாங்கிறலாம் .
போடி இவளே..நான் இங்க வந்து துப்பட்டாவைக் கிழிச்சுப்புட்டு வேற வாங்கவா வந்தேன்….போனாப் போவட்டுமாம்…ஆளப் பாரு…உன்னுது கிழிஞ்சிருந்தா வலிச்சிருக்கும்…என்று சொல்லிக் கொண்டே ஷீலாவைத் தொடர்ந்து நடக்கிறாள் மலர்விழி.
ஏண்டி….உனக்கு இந்தப் பொறாமை…..எல்லாம் எனக்கும் நாலஞ்சி வாட்டி கிழிஞ்சி போச்சு. அதான் உனக்குச் சொன்னேன். ம்ம்…இதான் ரூம்பு…என்று தன் கர்சீப்பில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த பித்தளைச் சாவியை எடுத்து திறக்கிறாள்.
மூன்று நான்கு தடவை மாற்றி மாற்றி போட்டபின் பூட்டு க்ளிக் திறந்து அதே வேகத்தில் அந்த மரக்கதவும் படால் என்று திறந்து கொண்டு இவர்களுக்கு வழி விட்டது.
உள்ளே நுழையும் போதே ஒரு முடை நாற்றம்…..வந்து மலர் முகத்தை சுழித்துக் கொண்டாள் .
ஏண்டி……இவளே…..! இதுவா…..இங்கனையா….நானும் தங்கணும்….! நம்ப வீட்டு மாட்டு கொட்டாய் கூட இத்த விட சொகுசா இருக்குமே….கருமம்…கருமம் ..என்னமோ நாறுது…என்று சொன்னதும் ஷீலாவின் முகம் சுண்டிப் போனது.
நான் வரும்போதே நெனச்சேன்…..இம்புட்டு அசிங்கமா குப்பையும் கூளமுமா சின்னச் சந்துல கூட்டிட்டு போறாளே…ரூம்பு எப்பிடி இருக்குமோன்னு ..நான் நெனச்சது ரைட்டாத் தான் இருக்கு.
இதுக்கும் மேலே இந்த சென்னையில உனக்கும் எனக்கும் தங்குறதுக்கு எடம் கெடைக்காது…நாம என்ன அம்பானி பரம்பரையா….?
இதுக்கே நான் எப்பிடி அவஸ்தை படுறேன் தெரியுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…காலீல வேலைக்குப் போனா ராத்திரிக்கித் தான் இங்க வருவோம்…சில நாள் ஓ .டி பார்த்தால் வரவே மாட்டோம்….புரிஞ்சிச்சா.
சரி..அப்ப நான் எங்கன எப்புடி .குளிக்கிறது?
ஐயோ….சர்தான் போடி நீ சீமைத்துரை வீட்டு துரைசாணி..இனிமேட்டு எத்தப் பத்தியாச்சும் கேட்டே…கொண்டேபுடுவேன்…….! என்று கண்களை உருட்டிக் காண்பிக்கும் ஷீலாவைப் பார்த்து மலர் சிரிக்கிறாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில்…..இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு தங்களை அலங்காரப் பதுமைகளாக அலங்கரித்துக் கொண்டு “நாங்க வேலைக்கு கிளம்பியாச்சு ” என்று பொதுவாக வார்டன் அம்மாவிடம் சொல்லிவிட்டு….சரட் ….சரட் ….என்று செருப்பு சத்தம் கேட்க ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே கம்பெனியை நோக்கி நடக்கிறார்கள்.வெற்று ஹாண்ட்பாக் ஒன்று அவர்களின் தோளில் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டே வந்தது.
தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யப் போவதாக கற்பனை கண்டபடியே நடக்கிறாள் மலர்.
கூவம், குப்பை,கூளம், சாராயக் கடை, சகதி , முட்டுச் சந்து…..மூத்திர சந்து எல்லாத்தையும் கடந்து நாற்றம் வரவேற்க ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்து செல்லும் பார்த்து ” இது மட்டும் என்ன ஓவியமா…? இதுக்கு அந்த ரூம்பு தேவலை…” என்று வாய் விட்டு சொன்னவள், ” அம்மா….நான் தப்பு பண்ணிட்டேன்……நீ எம்புட்டு சொன்னே….சென்னையில ஒரு நல்ல எடம் கூட இல்லம்மா..இந்த ஊருல எப்படி ரஜினி, கமல்,விஜய்,அஜித்,சூர்யா…..ஹாங்…..நயன்தாரா…..இவுங்க எல்லாம் இருக்காங்க…அத்துக்கிட்டு ஓட வேணாமா? என்று மனத்துக்குள் கேட்டுக் கொள்கிறாள்.
கனத்த கனைப்பு சத்தம் கேட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்கும் போது அங்கு ஷீலா அவரிடம் “இவ தான் சார்….மலர்விழி” என்று கையைக் காட்டி கையோடு …நம்ப மானேஜர் சார் இவர் தான்…அவருக்கு குட் மார்னிங் சொல்லு..என்கிறாள்.
மலருக்கு……தான் திடீரென்று தனது வீட்டின் முன்பு வாரா வாரம் வந்து காசுக்காக வித்தை காட்டும் குரங்காட்டியின் குரங்கு தான் நினைவுக்கு வந்தது. தான் இப்படி வந்த அன்றே குரங்காகிப் போனேனா…என்று சிறிது கவலையோடு குனிந்து ஒரு முறை தன்னையே பார்த்துக் கொண்டாள்.
பிறகு தயங்கியபடியே “குட் மார்னிங்” என்று சொல்லுகையில் முதல் முதலாக ஒரு ஆங்கில வார்த்தையை வெளி மனிதரிடம் பேசும் சந்தர்ப்பம் கிட்டியதற்காக மகிழ்ந்தாள் மலர்.
அவளை வைத்த கண் வாங்காமல் விழுங்கும் பார்வையில் கணக்குப் பண்ணிப் பார்த்த மனேஜர் “உன் பேரு என்னம்மா?” என்று குழையும் குரலில் கேட்டதும்.
மலர்விழி…!
ஆஹா…..அருமையான பேரு தான் போ….மலரு….என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டே…எம்மா …ஷீலா…இவளையும் உன் கூடவே வேலைக்கு வெச்சுக்கோ….வேலை சொல்லிக் கொடு..முதல்ல ரிஜிஸ்டர்….என்று கறாராக சொல்லிவிட்டு….மலர்விழியின் கன்னத்தைத் தடவி விட்டுப் போகிறான்.
விருட்டென்று முகத்தை பின்னுக்கு இழுத்தவள்…..என்னாடி இவன்……என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு….எங்க…என்ன வேலை…சொல்லுடி…என்று ரெஜிஸ்டரில் கையெழுத்தைப் போடுகிறாள்.
மனசு……வேலை கிடைச்சிருச்சி என்ற சந்தோஷத்தில் நிம்மதி அடைந்தாலும்…….”இந்த முதலையோட வாய்,கண்,கை…..எல்லாத்தையும் கட்டிப் போடணும்….” என்று முடிச்சுப் போட்டது.
மீண்டும் அந்த மானேஜர் இவளை நோக்கி அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே வந்து கொண்டிருந்தான்.
நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.
உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.
இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.
பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.
தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .
பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.
அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..
இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.
குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.
எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .
என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .
அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .
என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.
வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..
“ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”
(என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)
டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)
அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.
இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.
இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.
அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.
அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”
.அப்படியா..? எப்படி
நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.
அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.
இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?
எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?
நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.
குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.
சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.
“கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.

தனக்கு முன்னால் நடக்கும் இதையெதையும் அறியாத மலர் “பாவம் ஷீலா” எம்புட்டு கஷ்டப் பட்டு எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கு.இந்த உதவிய என் உசுரு இருக்குமுட்டும் மறக்க மாட்டேன்.
என்றெண்ணிக் கொண்டாள்.
திடீரென்று அவள் விரலில் ஆழமாகக் குத்திய முள்ளை வெளியே பிடுங்கி எடுக்கவும்….”ரத்தம் குபுக் கென்று முத்தாக வெளியே தெரியவும்…”ஸ்ஸ்ஸ் ….ஆஆஆஆ…ஷீலா முள்ளு குத்திருச்சுடி…” என்று தன்னையறியாமல் கத்துகிறாள்.
என்னாச்சுடி மலரு......? ஷீலா, தானிருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள் .
முள்ளு குத்திருச்சு, லேசா வலிச்சுச்சு.. அவ்வளவு தான்...வேற ஒண்ணுமில்ல...மலர் சொல்லும்போது ஷீலாவின் ஆளு....பாண்டியன் ஜன்னல் பக்கமாக வந்து நின்று இவளைப் பார்த்து சிரித்துவிட்டு, இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவுடன் .... "ஷ்...ஷ்...மலர்விழி, அந்தப் பிள்ளை .ஷீலாவை கூப்பிடு." என்கிறான்.
இவள் திரும்பி வேறு யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், ஏய்...ஷீலா உன் ஆளு..இங்கன வந்து நின்னு உன்னிய கூப்பிடுது..என்னான்னு கேளு.
ஷீலா வாயெல்லாம் பல்லாக அவனைப் பார்த்து சிரித்தபடியே ஜன்னலருகில் போகிறாள்.சிறிது நேரம் பேசிவிட்டு, மலர் இருக்கும் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக தன் இடம் நோக்கி செல்கிறாள்.
ஏமாற்றமடைந்த மலர்விழி, ம்கும்.....எதுனா நல்ல விஷயமாயிருக்கும். அதான் சிலுப்பிகிட்டு போறா. அவன், சொல்லாதேன்னு சொல்லியிருப்பான். இப்ப அவளுக்கு காதலன் தான் கண் கண்ட தெய்வம்....நான் யாரு? என்று மனத்துக்குள் நினைத்தவள். நானும் மெல்ல அந்த மேனேஜர் சொன்னாரே வேற இடம் ..பாக்கிங் செய்யிற இடத்துக்கு மாத்தி விட்டுர்றேன்ண்டு அங்கனக்குள்ள கேட்டுக்கிட்டு போயிறலாம். இங்கன இந்த சாவுக் கிராக்கி வந்து வந்து நின்னு தொல்லை பண்ணிக்கிட்டே கெடக்கும் போல.. வீணா எனக்கு எதுக்கு இவிங்க வம்பு? சடக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவளாக காரியத்தில் கவனமாயிருந்தாள் மலர்.
நேரம் செல்லச் செல்ல வேலைகள் முடிந்ததற்கான அறிகுறிகள் ஆரம்பமாயின. ஒவ்வொருவராக கிளம்பி கணக்குப் பிள்ளை டேபிளின் முன்பு கூடி நின்றனர். மெல்ல மெல்ல குசு குசு வென்ற பேச்சுக்கள் நேரமாக நேரமாக மீன் மார்க்கெட் லெவலுக்கு சத்தம் எகிறுவதைப் கேட்டதும், மேனஜர் அங்கு வந்து நின்று கொண்டார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....அம்புட்டு பேரும் ஒண்ணாக் குமியாதீங்கன்னு சொன்னாக் கேட்க மாட்டீங்களா? காதை வாடகைக்கு விட்டிருக்கீங்களா ?...இல்லாட்டி களட்டி வெச்சிட்டீங்களா....? க்யூல வாங்க.....க்யூல வாங்க...என்றபடி கையை ஆட்டியபடியே அதட்டிக் கொண்டிருந்தான்.
அவனது கண்கள் தப்பாமல் மலரை 'மொய்த்த பார்வையில்' அவளுக்குப் 'பலானது' புரிந்தது.
சீ.....நாயே....உன் மோப்பத்துக்கு வெக்கிறேண்டி ஆப்பு...! என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். முதல் வாரச் சம்பளம் வாங்கற சந்தொஷத்தையே கெடுக்கிறான்..தூத்தேரி..!
இன்னிக்கு சம்பள நாளில்லியா ..அதான் அதுக்கு மூக்குல வேர்த்துப் போச்சு என் ஆளுக்கு..அதாண்டி மலரு..பாண்டியனுக்கு. பார்த்தியா....ஓடியாந்திருச்சி ...இப்படித்தான் ஓடியாந்துரும்...வாங்குற துட்டில் கொஞ்சமாச்சும் வெட்டனும் அதுக்கும்..இல்லாங்காட்டி எகிறி எகிறி ஏசும்.
உனக்கு இது தேவையாடி..? அவிங்கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறே.
தவிக்கலைடி ...செலசமயம் அதும் மருவாதி தான். எனக்குண்டு ஒரு ஆள் இருக்குற நெனப்பு...அது ஒரு கிக்குதான்டி. அதெல்லாம் உனக்கு இப்பத் தெரியாது...உனக்கும்......ஷீலா குசு குசு வென்று மலரின் காதில் கிசு கிசுத்தாள்.
செருப்படி...! என்று பல்லைக் கடித்துக் கொண்டே தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு ஷீலாவைப் பார்த்து முறைத்து விட்டு க்யூவில் சேர்ந்து நின்று கொண்டாள். என்கிட்டே இது மாதிரி ஒரு ஆள் மாட்டினா...அம்புட்டுத்தான்.....சும்மாப் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்....! பொட்டச்சி சம்பாத்தியத்துல வக்கணையா என்ன வாழ்வு வேண்டிக்கெடக்கு கசமாலத்துக்கு. நான் மட்டும் டீச்சர் ஆனால், அம்புட்டுப் பசங்களுக்கும் எப்பிடி வாழனும்ண்டு சொல்லித் தரோணம்..அம்புட்டுப் பிள்ளைகளையும் நல்லாப் பெரிய பெரிய படிப்பு படிங்கடாண்டு சொல்லிக் கொடுப்பேன். வளரும் போதே நல்லதைச் சொல்லிக் கொடுத்துப்புட்டா இந்த மாதிரி புல்லுருவிங்க வளராது. எதை எதையோ
நினைத்தபடியே கியூவுக்கு அருகில் வந்தவள்...மனக் கணக்கு போட ஆரம்பித்தாள் ."ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வீதம் ஒரு வாரத்துக்கு எவ்வளவு?" முந்நூற எழாலப் பெருக்கினா எம்புட்டு வரும்....விரல்களை ஒவ்வொன்றாக எண்ணி விட்டவள், இருபத்தி ஒண்ணு ...அப்டின்னா இரண்டாயிரத்தி நூறு ரூபாய்....ஹம்மாடியோ..அம்புட்டு ரூபாயா இப்ப நான் சம்பாதிச்சது. கையில் வரப்போகும் பணத்தை எண்ணி வாய் பிளந்தவளாக உள்ளமெல்லாம் தள்ளாட கணக்குப் பிள்ளை டேபிளின் எதிரே நின்றாள் .
என்ன பேரும்மா.....? நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கேட்கும் அவரிடம்.. பணிவாக மலர்விழி....புதுசா இந்த வாரம் தான் சேர்ந்தேன் ஐயா...தயக்கத்துடன் சொல்கிறாள்.
ம்ம்...ம்ம்....இங்கன ஒரு கைநாட்டு வைய்யி..என்று லேட்ஜரைத் திருப்புகிறார்.
ஐயா ...நான் கையெழுத்துப் போடுவேனுங்க..என்றவள் "பேனா..." என்று இழுக்கிறாள்.
நிமிர்ந்து பார்த்தவர், இந்தா...இங்க போடு என்று பேனாவை அவள் பக்கம் நகர்த்துகிறார்.
நாலாயிரம் ரூபாய்க்கான வவுச்சர் அது. அதில் கையெழுத்தை போட்டவள்...அவர் தந்த பணத்தை எண்ணிப் பார்த்தபடியே..ஐயா எனக்கொரு டவுட்டு..என்கிறாள்.
அதெல்லாம் முதலாளிட்ட கேளு..இப்ப எடத்தக் காலி பண்ணு...ம்ம்...நேரமாயிட்டுப் போகுது..அடுத்தது யாரும்மா வா வா..கொடுக்குற துட்ட வாங்கிட்டு காட்டுற இடத்துல கைநாட்டப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்...டவுட்டாம்...டவுட்டு......!
மலர்விழி ஒரு அடி கூட நகராமல் அங்கேயே நின்றிருந்தாள் .
இந்தாம்மா....நகுரு...கொஞ்சம் குரலில் கறாருடன் சொன்னார் கணக்குப்பிள்ளை.
எனக்கு நீங்க இரண்டாயிரம் மட்டும் தான் கூலி தந்தீங்கய்யா. கெயெழுத்து மட்டும் நாலாயிரத்துக்கு வாங்கிக் கிட்டீங்க...அது ஏன்..? அப்டீண்டா இன்னும் அந்த ரெண்டாயிரத்தையும் தந்துடுங்க அதானே நியாயம்.
உனக்கு முன்னாலயே ஏதும் சொல்லலியா. இங்க இப்படித்தான். நீ வேணா உன் வீட்டாண்ட ஆயிரம் தான் இந்த வாரம் சம்பளம் கொடுத்தாங்கன்னு சொல்லிக்க. பிடிச்சா வேலையில இரு..இதுக்கு மேல ஒரு கேள்வி கேட்ட நாளைக்கு வேலை இருக்காது. ஆமா சொல்லிப்புட்டேன். இந்தாம்மா நீ வா..என்று மலருக்குப் பின்னால் நின்றிருதவளைப் பார்த்து அழைக்கிறார் அவர்.
திருட்டுப் பசங்க...கொள்ளையடிக்கிறாங்க. கால் கடுக்க கை வலிக்க வேலை பார்க்கிறது நாங்க...நோகாம நொங்கெடுக்க இதுங்களா...? காதுல கெண்டைய மாட்டுதுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நானும் உங்க அத்தனை பேர் காதுலயும் ஜெயிலு மணியை மாட்டித் தொங்க விடலை...என் பேரு மலரு இல்லை. மனம் வீரத்துடன் சபதம் போட மெளனமாக நகர்ந்தாள் அவள்.
இதுங்கள எல்லாம் யாருடா பிடிச்சாந்தது.....பத்து குறத்திய வெச்சு செஞ்சு முடிக்க வேணடிய வேலைய இதுகளுக்கு என்னாத்துக்கு கொடுக்கணம்....இப்படி கேள்வி கேட்கவா..? அந்த மேனஜர் எங்க? இந்தப் பிள்ளைய கணக்கு முடிஞ்சிருச்சின்னு சொல்லி வெளிய அனுப்பச் சொல்லு.நான் சொன்னேன்னு சொல்லு...இப்ப வரிக்கும் என்னியப் பார்த்து ஏதாச்சும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்குமா ? டவுட்டு கேக்குற மூஞ்சியப் பாரு..! கோபத்தில் கணக்குப் பிள்ளை கத்திக் கொண்டிருந்தார்.
பணப் பட்டுவாடா முடிந்து அனைவரும் கலைந்த நிலையில், மனேஜர் அருகில் வந்து..."ஏம்மா மலரு...இத்த அந்த ஷீலா உன் கையில சொல்லலியா? சரி விடு...இங்கன இப்படித் தான்..ஆனால் அந்த பாக்கிங் ஆபீசில் இப்படி கெடையாது..உன்னிய நாளைக்கு அங்கன போட்டுர்றேன். சரியா.நீ பொழக்கத் தெரியாத பிள்ளையா இருக்கியே. இதே உன்னோட கூட்டாளி என்ன சொன்னாத் தெரியுமா? அந்த அமீர் பெட் ஆஞ்சநேயலு ஊறுகாய் கம்பெனில விளம்பரப் படத்துல நடிக்க ஒத்துக்கிச்சி..ஒரு படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். சும்மால்ல ...அவரு உன்னியத் தான் இதுக்கு கூப்பிட்டாரு..ஷீலாட்ட நான் தான் உன்கிட்ட சொல்லச் சொன்னேன்...
பட பட வென்று அடித்துக் கொள்ளும் இதயத்தோடு ஷீலா என்ன சொல்லியிருப்பா என்று கேட்கும் ஆவலுடன் அவரது முகத்தைப் பார்க்கிறாள் மலர்.
அது என்ன சொல்லிச்சி தெரியுமா...? நான் தான் சீனியர்...இந்த விளம்பரத்துல நானே நடிக்கிறேன்...மலர் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிருச்சி.
ஷீலாவா அப்படிச் சொன்னாள்...? ஆச்சரியத்தில் விரிந்தது மலரின் விழிகள்.
பின்ன..நான் என்ன பொய்யா சொல்றேன்...நீ வேணாக் கேட்டுப் பாரு..ஆனா...நல்ல வேளை , உனக்கு வேற ஒரு வேலை வந்திருக்கு..அதாவது, ஒரு டிவி சீரியல்ல நடிக்கிற சான்ஸ்...வேலையே இல்லை..சும்மா ஒரு வீட்டில் இருக்கோணம்..அங்கிட்டு ஒரு இருபது பொண்ணுங்க கூட இருப்பாங்க.அம்புட்டுப் பேருமே நடிக்க உன்னிய மாதிரி வந்தவங்க தான். சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் அங்கனயே கம்பெனி பார்த்துக்கும். தெனம் வந்து ஷூட்டிங் பண்ணிட்டுப் போவாங்க...ஒரு வாரம் ஐயாயிரம் சுளையா அள்ளித் தந்துடுவாங்க...டிவி இருக்கும், ஏஸி எல்லாம் இருக்கும். உனக்கு இஷ்டம்னா இப்பமே சொல்லிடு..இல்லாட்டிப் போனா இந்த சான்ஸும் போயிறும். ஆசை காட்டினான் அவன்.
நான் எதுக்கும் ஷீலாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க கிட்ட பதில் சொல்லிர்றேன்..ஆனா அந்த வீட்டில் இருக்குற இருபது பொண்ணுங்களுக்கும் என்ன வேலை இருக்கும்? என்னத்த படம் பிடிப்பாங்க? மெல்ல எழுந்த சந்தேகத்தை அவளையும் அறியாமல் கேட்டு வைக்கிறாள்.
அப்டிகேளு....இந்த டிவி ல வார "டாடி எனக்கொரு டவுட்டு.." ன்னு கொமட்டுல குத்துறாப்பல இருக்குது உன் கேள்வி. எதோ ஒரு டிவி சீரியல் வருதாம்....அதுல ஒரு ஊறுகாய் கம்பெனில வேலை பார்க்கிறா அந்த நடிகை. இப்படி கதை போகுது. அந்த ஊறுகாய் கம்பெனி தான் அந்த வீடு....அங்க ஊறுகாய் பாக்கிங் பண்ணுற பொண்ணுங்க நிறைய பேரு வேலைக்கு இருக்குறாப்பல அதுங்களோட அந்த நடிகையும் பாக்கிங் பண்ணுறாப்பல படம் பிடிப்பாங்க. இந்த ஷூட்டிங் வெறும் ஒரு வாரம் மட்டும் தான்.அதுக்குத் தான் அம்புட்டு துட்டும், சொகுசும்...என்ன இருந்தாலும் சீரியல் படம் இல்லையா..?
இப்பச் சொல்லு நீ வாரியா...வரலியா? அவளைக் கேள்வி கேட்டு மடக்குகிறான் அந்த மேனேஜர். ஷீலா மட்டும் உன்னைய கேட்டுகிட்டா என்கிட்டே வாரேன்னு சொல்லிச்சு. பெறவு நீ மட்டும் ஏன் அந்தப் பிள்ளையைக் கேட்கோணம் ...?
அப்டீங்களா.....அவள் மனத்துக்குள் அவள் ஷீலாவிடம் தங்கியிருக்கும் அறையில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது. மேலும் இந்த மீனில் முள்ளு எடுத்து அலம்பும் வேலையை விட வேறு வேலை கிடைத்தால் நல்லது தானே....என்றும் யோசித்தவள், சரீங்கய்யா...நானும் வரேன்...என்கிறாள் மலர்விழி.
ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா... வேண்டாமா... என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா...ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள்.
என்னாச்சுடி...சம்பளம் வாங்கிட்டியா?...சந்தோசத்தப் பாரு..ம்ம்...சொல்லு...எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.?
தெரியுமாடி உனக்கு...? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்...அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற மலர் பெருமையுடன் சொன்னவள் ஷீலாவிடம்.....ஆமா..அந்த மேனஜர் என்னிய பாக்கிங் ஆபீஸ்ல ஒரு சீரியல்ல நடிக்க அழைச்சாரு . ஒரு வாரத்துக்கு அஞ்சு ஆயிரமாம். நான் போகலாமுன்னு முடிவு செய்து வாரேன்னு சொல்லிப்புட்டேன். அதான் உன்கிட்டயும் சொல்லிப்புட்டு செய்யலாமே...என்று இழுக்கிறாள்.
அது எங்கிட்டு டீ .....இவளே....எனக்கு சொல்லவேயில்ல. நானும் வருவேனில்ல. அந்தாளு ஏதோ கேம் ஆடுதுன்னு தோணுது. சாக்றதயா இருடி..
ம்மம்ம்...என்று சொன்னவள் ,சிறிது நேரம் யோசித்து , என்ன உன் துட்ட அந்தப் பாண்டி பிடுங்கிடுச்சா..? என்று கேட்கிறாள்.
அம்புட்டும் நான் தரல.ஒரு முன்னூறு கொடுத்தேன். அம்புட்டுதான். எல்லாம் என் நேரம்டி. அலுத்துக் கொள்கிறாள் ஷீலா.
சரி வா...நாம போகலாம். நடக்க நடக்க ரோடு நீளமாவது போலிருந்தது மலருக்கு. பெரிய பெரிய கட்டிடங்கள் பயமுறுத்தியது. அங்கங்கே குழி தோண்டி வேலைகள் செய்து கொண்டிருக்க பக்கத்திலேயே கார்கள் பெருத்த ஹாரன் ஒலியோடு செல்லும் போது காதைப் பொத்திக் கொண்டு பயந்து நின்றாள் . தலைக்கு மேலே பெரிய பாலம் ஓட...அதற்கு பக்கத்தில் இரும்புக் கூண்டுகளோடு மனிதர்கள் நின்றிருப்பதை பார்த்து...இது என்ன சர்க்கஸ்ன்னு சொல்லுவாங்களே அதுவாடி.......!
....சீ.சீ.....அது ஒண்ணும் இல்லடி..இது மெட்ரோ ரயிலுக்கு வேலை நடக்குது. கீழ எடம் இல்லாங்காட்டிக்கு மேல கூட ரயிலு விடுவாங்களாம். பாண்டியன் தான் சொல்லுச்சு.
அப்போது பயங்கற சத்தத்துடன் சத்தத்துடன் "ஸ்பைஸ்ஜெட்" பறந்து இறங்கிக் கொண்டிருந்தது....!
அய்யே.....அய்யே....இதோ அங்கிட்டுப் பாரேன்.....விமானம்....விமானம்.....நான் இப்பத் தான் முத முத வாட்டிப் பாக்கறேன்.....எப்டி பறக்குதுடி..எங்கம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் பட்டுகிடும்.. விமானம் எல்லாம் பார்த்திருக்காண்டு. ம்ம்ம்....என்று ஷீலாவை இடிக்கிறாள்.
டி....இரு...இரு...கொஞ்சம் நிதானத்துக்கு வா....காலு கீழ தானே இருக்குது...என்று குனிந்து மலரின் காலைப் பார்க்கிறாள்.
அடிப்போடி என்று வெட்கப் பட்டவள்....நாம இன்னைக்கே ரூம்ப காலி பண்ணீடலாமா..?
அது அம்புட்டு சுலபமில்ல...முதல்ல நீ வேணா கெளம்பு. அப்பால நான் காலி பண்ணிக்கறேன்.
மனசுக்குள் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த கரப்பான்பூச்சி ரூம்புலேர்ந்து முதலில் தப்பிச்சால் போதும் என்றது அவளது மனம்.
அதோ பாருடி..அந்தப் பையன் சோளப்பொறி விக்கிறான்...வாங்கலாமாடி...மலர் துள்ளுகிறாள் ..எனக்கு வவுறு திங்கக் கேக்குது.
அது சோளப்பொறி இல்லடி.....பாப்புகானு ....! இங்கிட்டெல்லாம் அப்படித்தான் சொல்லுதுங்க.
அதென்ன பாப்புகானோ...நூர்ஜகானோ....எனக்கு ஒரு பாக்கெட்டு வாங்கு. எம்புட்டு இருக்கும்.
பத்து ரூவாடி....!
அடிப்பாவி....எங்கூர்ல ரெண்டு ரூவா தாண்டி..இங்கிட்டு கொள்ளையடிக்கிரானுவ...இத்தினிகாண்டு சோளம்...பொரிச்சா பொங்கீட்டு வரப்போவுது..அதுக்கு இம்புட்டு துட்டு எதுக்கு..? சரி வாங்கித் தொலை.
இதுக்கே இம்புட்டு இழுக்கறியே .....இம்புட்டுக்காண்டி வேகவெச்ச சோளத்தைக் கொடுத்து இருபத்தஞ்சு ரூபா கேட்ப்பான்...அத இன்னும் நீ பார்க்கலைன்னு வெளங்குது. ஒரு நாளு பாண்டியோட பாண்டிபஜார் போயிட்டு வந்தால் அம்புட்டும் வெளங்கும் .
அதென்னாடி ...பாண்டிக்கு தனியா பஜாரு கூட அதும் பேருல இருக்குதா? நீ பெரியாள்டி .
மண்ணாங்கட்டி.......மொதல்ல அது ஏதாச்சும் வேலை வெட்டி பார்க்காதான்னு நான் கெடந்து தவிக்கிறேன்.
ஆமா...உன் ஆளு பாண்டிக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? அதான் சும்மாச் சும்மா இங்கிட்டே சுத்தி சுத்தி வராப்பல. அவனப் பாத்தா நல்லவனாவே தெரியல. எதுக்கும் தள்ளியே வெய்யி. இவன்லாம் உன் கழுத்துல தாலி கட்டி...நீ குடும்பம் நடத்தி......வாயில் பாப்கார்னை போட்டுக் கொண்டே 'சவக் சவக் ' என்று மென்று கொண்டே பேசிக் கொண்டு நடக்கிறாள் மலர்.
அடி....பார்த்து வாடி எரும மாடு...! என்று ஷீலா மலரின் கைகளைப் பற்றி இழுக்கிறாள் .
எருமை மாடு ஒன்று நடந்து இவர்களைக் கடந்து சென்றது.
நீ என்னமோ என்னியத் தான் சொல்லுறேன்னு நெனைச்சு சுள்ளுன்னு எனக்கு எகிறிச்சு பாரு...!
பழையபடி குப்பைகளைக் கடந்து அந்த இருட்டு ரூம்புக்குள் நுழைந்து , தப்பித்தால் போதும் என்று தனது பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய மலர்விழி, அப்ப நான் அந்த மேனஜரை பார்த்து பேசி அந்தாளு எங்கிட்டு அழைச்சிட்டுப் போகுதோ அங்கன போய் இருக்கேன். இன்னும் பத்தே நாளு தான்..எம்புட்டு கெடைச்சாலும் எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து போயிடுவேன். அடுத்த மாசம் இந்நேரம் காலேஜுடி .
அந்தாளு முன்னமே சொல்லிருந்தா இந்த வாரமே அஞ்சாயிரம் அள்ளிருக்கலாம். அதென்னடி..எப்பப் பாரு நம்மளப் பார்த்து ஈ ன்னு இளிச்சுக்கிட்டே நிக்குது.
போட்டும் விடு மலரு. நா வேணா கூடத் தொணைக்கு வரட்டாடி ஷீலா கேட்கிறாள்.
வேணாண்டி...எனக்கே வளி தெரியிது. நீ பாவம்..போய் படு. நா வாரேன்.
மூச்சிரைக்க நடந்து வந்து ஆபீஸ் வாசல் படியில் பெட்டியை வைத்து விட்டு அங்கேயே மூச்சு வாங்க உட்காருகிறாள்.
அந்த அறைகுள்ளிருந்து ஜன்னல் வழியாக அவளது கண்கள் எட்டிப் பார்க்கிறது. இந்தாளு பாண்டிக்கு இங்கிட்டு என்ன வேலை....? அப்படி என்ன தான் பேசுறாரு மேனேஜர் சாரு இவன்கிட்ட..அதும் ஷீலா இல்லாத போது ..? எழுந்து நின்று காதைத் திட்டுகிறாள். மனசு சொல்கிறது அடியே...ஒட்டுக் கேட்க்குறது தப்புடி ....! மனசாட்சி சொல்லுகிறது....கவனமா கேளு...அதுங்க என்ன பேசுதுங்கண்டு...மண்ணாந்தையா நிக்காதேன்னு.
மனசாட்சிக்கு செவி சாய்த்து சுவரில் சாய்கிறாள் மலர்விழி.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
ஏண்டா....பாண்டி..நீ எப்பப்பாரு வந்து வந்து நிக்கறியே..வேலை வெட்டி ஒண்ணுமில்லியா? உத்தியோகம் புருச லட்சனம்டா..தெரியுமில்ல. மேனஜரின் கட்டைக் குரல் இவளின் காதை அடைத்தது.
எல்லாம் தெரியும்பு....வேலை இல்லாமலா சுத்துறோம்.....திருவான்மியூர்ல தீயடைப்பு இருக்குல்ல அங்கனக்குள்ள தான் இருக்குறேன்.
நமக்கு வேலை மென்னியப் பிடிக்கிறது தீவாளி சீசனப்பத்தான். எனக்கு தெனம் வேலை வேணும்முண்டா தெனம் எங்கிட்டாச்சும் தீ புடிச்சி எரியணும் . அது ஆவுற காரியமா...? அதான் அங்கிட்டுருந்து இப்படி ஒரு நடை வந்துட்டுப் போவேன்.
அப்ப அந்தப் புள்ள ஷீலா....சும்மானாச்சும் டாவடிக்கிறியா?
அய்யைய .....நான் கட்டிக்கப் போற பொண்ணுங்கன்னா...அது. நான் கழட்டி விட்டுட்டு போக பளகல. புரிஞ்சுக்கிடுங்க.
அடப் போப்பா.....இந்தக் காலத்துல பொண்ணுங்களே அப்படிப் பளகறதில்லை. காசப் பாத்ததும் கழண்டுகிடுங்க.
என்ன நீ ஒரு இருபதாயிரம் மாசம் தேத்துவியா..?
அம்புட்டு எங்கிட்டு...! நல்லாக் கேட்டீங்க போங்க..! நான் அஞ்சுக்கும் பத்துக்குமே முழி பிதுங்கி நிக்கிறவன்.
அப்ப ஒண்ணு செய்யி....நான் ஒரு அருமையான தொழில் சொல்லித் தரேன்...கமிஷனே களை கட்டும்....ஒரே வருஷத்தில .நீ எங்கிட்டோ போயிடுவே. எங்கன உனக்கு வேலையே இல்ல..பூரா பூரா வடக்குல தான். செல் போன் ல தான் பிசினெஸ் நடக்கும். நம்ம அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான் முதலாளி. மாட்டிக்கிடாம, மாட்டிவெக்காம காரியம் பண்ணி முடிச்சா...பணம் மூட்டைல வந்து எறங்கும் . இல்லாங்காட்டி...
இல்லாங்காட்டி.....?
நீயே பொணமா மூட்டைக்குள்ளார கட்டிவெச்சி கூவத்துக்குள்ளார எறங்கும்.
அப்படி என்ன புதுசா கெடைச்சிருக்கா 'மகாலட்சுமி.."..? பயமுறுத்துற லட்சுமி.
இப்ப ஷீலா உங்கிட்ட மாட்டிச்சு பாரு, அதை அப்படியே மெதுவா நம்ப வெச்சு கிண்டி கூட்டியாந்துடு. அங்கிட்டிருந்து அப்படியே ஆந்திரா தள்ளி உட்றலாம் . அங்க நம்ப ஆளு இருக்கான். எப்டியும் அம்பது தேறும்.
ச்சே......இதெல்லாம் ஒரு பொளப்பா ....? இதுக்கெல்லாம் தான் பேரு இருக்கே. நான் இந்தப் பாவம் பண்ண மாட்டேன் ஆள விடுங்க.
பாண்டியனின் குரலில் நெகிழ்ந்தாள் மலர்விழி.
இதெல்லாம் உனக்கு செட் ஆவாதுடா...தள்ளி விட்டுட்டு காசை எண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருப்பியா...பாவம்...புண்ணியம்னு பேசிக்கிட்டு...அலுத்துக் கொண்டான் மனேஜர்.
இந்தா....என்று டேபிளின் மீது தொப்பென்று விழுந்தது பணக்கட்டு. வேலையே பண்ணாதே....வெச்சுக்கோ அட்வான்ஸ்.இருபதாயிரம்..
கட்டைக் குரல் பேரம் பேசியது. அதே சமயம் இங்கிட்டிருந்து உசுரோட போவமாட்டே என்று பயமுறுத்தியது.
ரத்தம் உறைந்து போய் நாவுலர நடுங்கியபடி நின்றிருந்தாள் மலர்.
அடுத்தது என்ன...யூகிப்பதற்க்குள்..
பாண்டியன் பணத்துக்குள் விழுந்தான்...!
அப்ப ...என் கணக்குல ரெண்டு அயிட்டம் எழுதிக்கிருங்க....முதல்ல ஷீலா. பெறவு மலரு.
வெளியில் நின்றிருத்த மலருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் அசட்டு தைரியம் நிற்க வைத்தது.
அப்டி வா வளிக்கி ..இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிரணம். அந்த ஷீலாவை ஆந்திராவுக்கு அனுப்பிடு. இந்தப் புள்ள மலரை பாம்பேக்கு தள்ளி விட்டுடு, எப்படியும் ஒண்ணத் தாண்டிடும் உன் கமிஷன். பாரேன்...ஒரே வாரத்துல நீ லட்சாதிபதி. ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்....ராத்திரி இங்கன வந்துருறா கம்பெனிக்கி.....டாஸ்மாக்கே அந்த பீரோக்குளாற தான் இருக்கு.மேலும் ஆசை காட்டினான். பாண்டியனின் மனது நாயானது.....ரொட்டித் துண்டுக்கு வாலாட்டி குழைந்து நாக்கைத் தொங்கப் போட்டது.
பாண்டி பணத்தை எடுத்து அழுக்கு கர்சீப்பில் கட்டிக்கொண்டு விசிலடித்தபடியே......'தலைவா .....சொன்னபடி நான் ஒரு வாரத்தில் லட்ச்சாதிபதி..' ஏமாத்திற மாட்டியே...!
நீ காரியத்த கவனிடா....உன்னிய நாங்க கவனிக்கிறோம்....வில்லனைப் போல சிரிக்கிறது கட்டைக் குரல் மேனேஜர் .
சரிங்கண்ணா.......அங்கிருந்து கிளம்புகிறான் பாண்டியன்.
அவசர அவசரமாக பையை எடுத்துக் கொண்டு தான் அப்போது தான் வந்தவள் மாதிரி உள்ளே நுழைகிறாள் மலர்.
அவளைப் பார்த்தவன்....."கும்பிடப் போன ...தெய்வம். ...குறுக்கே வந்ததம்மா...அடக் குறுக்கே வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா......"
என்று பாடியபடியே...புருவத்தை உயர்த்திப் பார்க்கிறான்.

இந்தா...வளியை விடு என்று அவனைப் பார்த்து ஏளனமாகச் சொன்ன மலர்விழி, சார்....பாக்கிங் ஆபீசுக்கு அளைச்சிட்டுப் போறதாச் சொன்னீங்களே....அதான் ரூம்பைக் காலி பண்ணீட்டு வந்தேன். இப்பவே அங்கன போயிரலாமா..என்று தனது பையை டேபிளின் மீது தொப்பென்று வைத்தாள் .
அதுங்கையிலே....சொல்லிட்டியா...? கர கரத்தது மேனஜரின் குரல்.
..ம்ம்ம்......! சரின்னிச்சு.
அப்பச் சரி. கெளம்பு....என்றவர், எட்டிப் பார்த்து, ஏல பாண்டி....நில்லு..! நீயும் கூட வா. நானே அளச்சிட்டுப் போறேன்,
அது எதுக்கு சார் அந்த எடத்துக்கு ? ஒண்ணுமே தெரியாதவள் போலக் கேட்டாள் மலர்.
.ம்ம்ம்ம்ம்.....உங்களோட சேர்ந்து கும்மியடிக்க...! எரிச்சலுடன் சொன்னவர், நொய்யி...நொய்யின்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப் படாது. வாயை மூடிட்டு வா....என்றவர் கதவைப் போட்டுவிட்டு பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.
இதைப் பார்த்த மலர், சிரித்து விட்டாள் .
ஏம்புள்ள ....என்னாத்துக்கு இந்தச் சிரிப்பு...?
ஏன்...சார்.....பூட்டுல போயி நீங்க இந்தத் தொங்கு தொங்கிப் பார்க்கறீங்களே .....உங்க கனம் தாங்காமே.....அது அப்படியே களண்டு விழுந்துச்சின்னா....! அத்த நினைச்சித் தான் சிரிச்சேன்.
பல்லக் களட்டீருவேன் .....சாக்கிரத..!
அம்மாடியோ...பொய் கோபத்துடன் கூடவே நடந்தாள் .
தூரத்தில் பாண்டி, புகை பிடித்தபடியே புகைவளையம் விட்டபடியே இவளைப் பார்த்தபடியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். 'இந்தப் புள்ள நல்ல அளகி தான்....அந்த ஷீலாவைக் காட்டியும்....அத்தத் தள்ளி விட்டுட்டு இத்தக் கட்டிக்கிட்டாப் போச்சு.....டேய் பாண்டி நீ சூபெர்டா....என்று தனக்குத் தானே தட்டிக் கொள்கிறான்.
அவனைப் பார்த்தவள் ,லச்சாதிபதி கனவு காணறியா? பின்னால லத்தில வாங்கும் போது புரியும்...! மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் மலர்விழி.
மூவரும், மூன்று விதமாக நினைத்தபடி டெம்போ வண்டி ஏறி பாக்கிங் ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள். வந்திறங்கிய இடத்தைப் பார்த்து சற்றே பயந்து போனாள் மலர்விழி.
பெரிய பெரிய கிரானைட் கற்களை சிமெண்டில் புதைத்து ஆறடி உயரத்தில் எழுந்து நின்றது நீளமான காம்பௌண்ட் சுவர். அதன் உயரத்தையும் மீறி கூர்மையான கண்ணாடித் துண்டுகள் புதைக்கப்பட்டு அதுவும் போதாதென்று இரும்பு முள் வேலி வேறு அவளை பயமுறுத்தியது.
இரும்புக் கதவுகள் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்ர் க்றீச்......கனமான இரும்புக் கதவைத் திறந்த அறுவாள் மீசை இவளை ஒரு மாதிரி பார்த்து மிடறு விழுங்கியது. மேனேஜருக்கு விறைப்பாக நின்று சலாம் போட்டது.
தரையில் நேராகப் பாதை முழுதும் கரடு முரடாக கூழாங்கற்கள் பதிக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. அதன் இரண்டு பக்கமும்
அடர்த்தியாக பஞ்சுப் பொதிகளாக பச்சைப் புல்வெளி....அழகாக மிரட்டியது .
பால் வெள்ளை நிறத்தில் பல அடுக்கு மாடி வீடுகள், ஜன்னல்கள், பால்கனிகள், பூந்தொட்டிகள் என்று ரம்மியமாக இருந்த அந்தக்
குடியிருப்பை அதிசயமாகப் பார்த்தபடியே மெல்ல நடந்து வந்தவள்..கருப்பு கிரானைட்டில் 'ஆஞ்சநேயுலு ப்ளாசா" என்று தங்க எழுத்துக்களாக மின்னிக் கொண்டிருந்தது. அதைப் படித்தவளுக்கு 'அமீர்பெட் ஆஞ்சநேயுலு ' கண் முன்னே வந்து போனார்.
எத்தனை அபலைப் பெண்களின் கண்ணீரும், வயிற்றெரிச்சலும், போட்ட சாபங்களும் இப்படி இவன் மனது போல செங்கல்லும்,கூழாங்கல்லும்.கிரானைட் கல்லுமாக மாறி கட்டிடமாய் எழும்பி நிக்கிதோ...? படு பாவி.....உன்னைப் பார்த்தால் ஏதோ ஆஞ்சநேயர் கோயில் பூசாரி மாதிரி இருந்துக்கிட்டு, இப்படி அட்டூழியம் பண்றியே ....அந்த ஆஞ்சநேயருக்கே பொறுக்கலை....! அதான் என் மூலமா வந்திருக்காரு. இத்தோட உன் ஆட்டம் க்ளோஸ்..! அமீர்பெட் ஆஞ்சநேயுலு...... உன் முகத்திரை கிழியப் போகுதுலு ....! எண்ணிக்கொண்டே நடந்தாள்....நடந்தாள் ...!
பல வண்ண நிறத்தில் கார்கள் வரிசையாக நின்று வரவேற்றது போலிருந்தது இவளுக்கு.
அதையும் கடந்தார்கள்.
பாண்டி தான் சொன்னான்....! பார்டி பல்லானதா...இருக்கும் போல்ருக்கு ...! சும்மா சினிமா சூட்டிங்கு நடக்குற எடத்துக்கு போறாப்புலல்ல இருக்கு. இங்க லட்சம் எல்லாம் ஜுஜூபி...! கண்ணா.....கோடி எண்ண ஆசையா...? என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
வாங்குவ....வாங்குவ...!அதுக்கும் மேலே கொடுப்பாங்க.....அத்தனையையும் எண்ணிட்டு கம்பியையும் எண்ணு ...! இவளும் சொல்லிக் கொண்டாள் .
அங்கங்கு தென்படுபவர்கள் ஒவ்வொருவரும் செக்யூரிட்டியாகவே இருந்தார்கள். 'இது நெசமாலுமே ஊறுகாய் பாக்கிங் கம்பெனி தானா...இம்புட்டு பெரிசா இருக்கு...? சந்தேகமாக மேனஜரைப் பார்த்து கேட்டு வைத்தாள் .
நீ...உன் வாயை வெச்சுக்கிட்டு சும்மாலுமே வரமாட்டியா..? இங்கன வா....ஒரு பட்டனைத் தட்டுகிறார்.
புள்ளிப் புள்ளியாக சிகப்பு விளக்குகள் கீழ் குறியிட்டு மின்னியது. சிறிது நேரத்தில் லிஃப்ட் வந்து நின்றது.
உள்ளார வா....மாடிக்கு இட்டுண்டு போகும்....சொல்லியப்படியே உள்ளே நுழைந்து கொள்ள...கதவு மூடப் போகிறது...அதைத் தடுத்த பாண்டி....ஏய்....ஏறு என்று அதட்டுகிறான்.
இதென்னது..? மேலேர்ந்து ரூம்பு வருது....? பயந்து போனவள் நான் இதில வரலை....மாடிக்கி நான் மச்சு வளியா வரேன்....அடம் பிடிக்கிறாள்.
சீ .....உள்ளார வா..என்று அவளது கைகளைப் பிடித்து இழுக்கப் போக, வேறு வழியில்லாமல் உள்ளே அவளே நுழைந்து கொள்கிறாள்.
லிஃப்ட் மேலே ஏறும் போது , திகிலுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறாள். அங்கிருந்த பெரிய கண்ணாடியில் ஆச்சரியமாக தன்னை பல கோணங்களில் பார்த்துக் கொள்கிறாள். கூடவே அந்த இரண்டு பேரும் தன்னை கவனிக்கிறார்களா..? என்றும் பார்த்துக் கொள்கிறாள்...மலர்.
ஆறாவது மாடியில் சென்று இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் கீழிறங்கும் லிஃப்டை கண் கொட்டாமல் பார்த்தவள், திடீரெனத் திரும்ப அங்கு யாரையும் காணாமல் திடுக்கிட்டு....சுற்றும் முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அந்த பெரிய கண்ணாடி போல பள பளக்கும் நீண்ட கரும் பச்சை மார்பிள் தரையில் காலை வைத்ததும், சொய்ங் ...என்று வழுக்கத் தடுமாறியவள் சுதாரித்துக் கொண்டு மெல்ல மெல்ல கைகளால் அப்படியும் இப்படியும் பாலன்ஸ் செய்து கொண்டே நடக்கிறாள்...
தனிமை, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, மூடிய கதவுகளும் ஜன்னல்களும்,நிசப்தமான சூழல் இவையாவும் அவளைத் திகிலடையச் செய்தது.
பா.....பா....பா....ண்டி .....பாண்டீஈஈஈஈ....என்று தட தட வென்று ஓடி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரென்று வழுக்கி விழுந்ததும்......யம்மாஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.......என்று கண்களை இறுக்க மூடிக் கொள்கிறாள்.
இவள் விழுந்து கிடப்பதைக் கண்டு கல கல வென்று சிரித்தபடியே அவளுக்கு உதவ பாண்டி ஓடி வருகிறான்.
ஏய்...மலரு.....இப்படியா.... அந்தல சிந்தலையா விளுந்து கெடப்பே.....சரி சரி எந்திரி, மேனேஜர் உன்னைய அழைச்சிட்டு வரச் சொன்னாரு....எந்திரிச்சி வா....அடி கிடி பட்டிடிச்சா...?
இல்லண்ணே.....லேசா காலு மடங்கிடிச்சி....இரு எந்திரிக்கிறேன்.
கூடப் பிறந்த பிறப்புகளைப் பற்றி எதுவுமே அறியாத பாண்டிக்கு அண்ணே....என்று அவள் அழைத்ததும், மனசுக்குள் எதுவோ என்னவோ செய்தது அவனுக்கு. இருந்தாலும் மலரை முறைத்துத் திட்டினான்.
என்னா ....புதுசா அண்ணே....நொண்ணேன்னு உறவு கொண்டாடுற....ஒங்கூடப் பொறந்தவனா நானு....ஓய்யாரத்தப் பாரு...அதட்டினான்.
ஓட்டிக்கிட்டுப் பொறந்தாத் தான் அண்ணனா....ஆபத்துல வந்து உதவினாக் கூட அண்ணேன் தான். பின்ன எதுக்கு இப்ப ஓடியாந்தியாம்.? பாத்துப்போட்டு கண்டும் காணாத மாதிரி போயிருக்க வேண்டியது தான...இவளும் அவனை விடவில்லை. பேச்சில் மடக்கி விட்டதாக நினைத்தாள் .
போயிருப்பேன்...ஆனா எனக்கு உன் மேல ஒரு இது..?
எது....?
அதான்...சொல்லத் தெரியல புள்ள.
உனக்குச் சொல்லத் தெரியல...நான் சொல்லிப்புட்டேன்....அண்ணேன்னு...! அவள் தனது முத்து மாலையை கைவிரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிக் கொண்டே சொன்னாள் . ஷீலா கூட என்கிட்டே அப்படித் தான் சொல்லிச்சு....பாண்டி உனக்கு அண்ணன் முறையினிட்டு.. மலர் அவன் முகத்தை ஆராய்ந்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .
சரி...ஒண்ணும் பேசாமே வா....அந்த ரூம்பு வந்திருச்சு.
ரோஸ் வுட்டில் வழ வழப்பாக பாலிஷ் போட்ட கதவின் வெண்கலக் கைபிடியில் கை வைத்ததும் அது திறந்து கொண்டது. உள்ளே, யாரோ ஒருவன் கம்பீரமாக சாய்ந்து கொண்டு சுழல் நாற்காலியில் உட்காந்தபடி முன்னும் பின்னும் ஆடியபடி தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.
மலருக்கு, அவன் ஏதோ ஒரு படத்தின் வில்லனாக நடிக்கிறவர் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள் .
அருகில் மேனஜர் தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி இவர்களைப் பார்த்து, மெதுவா..மெதுவா..என்று கண்களால் சமிக்சை செய்து கொண்டிருந்தான்.
அட மானேஜரே நடுங்குறாரு.....ஆச்சரியமானாள் மலர்.
லேசாக நொண்டி நொண்டி உள்ளே வந்தவள்....புரியாத ஒரு மொழியில் அந்த வில்லன் பேசியது கண்டு திகைத்து சிலை போல நின்றாள் .
ஏ சோக்கிரி கோ இதர் க்யா காம் ஹை ...? கிதர் ஸெ ஆரே ...? க்யா நாம் ? ஓ ஆத்மி கௌன் ஹை ..?
(இந்தப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை? எங்கேர்ந்து வருகிறாள்? பெயர் என்ன? அவன் யார்?)
அது மலர்விழி....அமீர்பெட் ஆஞ்சநேயுலு சொல்லலியா..?என்று மேனேஜர் கேட்டதும்,
இந்த வில்லனோட பெயர் என்னவாயிருக்கும்..? மலர் யோசிக்கலானாள்.
சொல்லிச்சு...சொல்லிச்சு..பஹுத் அச்சா ஹை ...பஹுத் சுந்தர் திக்ரா....! என்று கனைத்தது வில்லன்.
(ரொம்ப நல்லா இருக்கு....ரொம்ப அழகா இருக்கா பார்க்க...!)
மேனேஜருக்கு வாயெல்லாம் பல்லாக இளித்தார்.
அபி தூ ஜா...! என்ற வில்லன், தனது கைபேசியை எடுத்து புத்தகத்தைத் திறப்பது போலத் திறந்து கைகளால் மெதுவாகத் தட்டிக் கொண்டே, லேகே ஜாவ் , தோனோங் கோ...!
(இப்ப இந்த இரண்டு பேரையும் அழைத்துச் செல்..)
பாண்டி நினைத்துக் கொள்கிறான்.....ஹிந்தி நாயா...? தலையில டர்பன் கட்டிருவான்...! இவங்கிட்ட நம்ம டீலிங்கு செல்லாது. இதுங்க முதலைங்க..! பெரிய திமிங்கிலங்க கிட்ட அயிர மீனுக்கு என்ன வேலை...? களண்டுக்கடா பாண்டி...! உள்ளுக்குள்ளிருந்து அபாயமணி ஓங்கி அடித்தது. அப்ப பாவம் மலரு..அவன் இதயம் எதற்கோ அவளுக்காகத் துடித்தது.
எலே பாண்டி...நாம வந்த எடம், அம்புட்டும் படம் புடிக்கும்....பேசுறதெல்லாம் கூட கேட்கும்.அம்புட்டையும் நமக்கு முன்னாடியே அவரு அதான் பாஸ்...பார்த்துருவாரு. நீ இருவதாயிரம் வாங்கி இருக்கே....தைரியமா இரு...என்று கூடவே எச்சரித்தபடி.....
ஏய் மலரு இங்க என்ன நடக்குதுண்டு மூச்சு விடக் கூடாது யாருக்கும். ஏதாச்சும் போன் மூலமாச் சொன்னே...அம்புட்டு தான். ஊரு போய் சேர மாட்டே..! இங்கனக் குள்ளாரயே தீர்த்துக் கட்டீருவாங்க. இப்பமே சொல்லிப்புட்டேன்.
இவள் உறைந்து போனவள், மனத்துக்குள் "பேச்சியம்மா, முத்து மாரியம்மா, படை வீட்டு பகவதியம்மா, பாடைகட்டி மாரியம்மா...." அம்புட்டு பேரும் ஓடியாந்து என்னியக் காப்பாத்தி, இங்கிட்டு தவிக்கிற என்னிய மாதிரி புள்ளங்களையும் காப்பாத்திரும்மா தாயீ ....நான் வந்து மாவிளக்குப் போட்டுப் படைக்கிறேன் தாயீ ....உசுரோட நான் திரும்பிருவேனா..." தப்பு கிப்புப் பண்ணீட்டேனா ....இங்கிட்டெல்லாம் பணத்துக்கு ஆசைப் பட்டு வந்திருக்கப் படாதோ...அம்மா எம்புட்டு சொல்லிச்சு..பாவி மவ நான் பெரியவுக பேச்சைக் கேக்காமப் பொறப்பட்டு வந்தேனே...! நல்லா மாட்டிக்கிட்டேன்.....! பயம்ன்னா இப்படித் தான் இருக்குமா..? வவுத்தை பிணைஞ்சு வலிக்குது...முதுகுத் தண்டுக்குள்ளார ஜிவ்வுன்னு ரத்தம் ஏறுது .....தொண்டை உள்ளுக்குள்ளார இழுக்குது.....தொண்டைத் தண்ணி வத்திப் போவுது....நெஞ்சுக்குள்ள கிடு கிடுங்குது....தொடை கூட நடுங்குது...இம்புட்டும் ஒண்ணாச் செஞ்சா பயமா..? அப்ப .....நான் இவனுங்களுக்கு பயப்படுறேனா...? நடுங்கினாள் மலர்விழி.
உள்ளுக்குள் எழுந்த பயத்தை விரட்டி அடிக்கும் வழி தெரியாமல், இங்கன எங்கிட்டு காமெரா வெச்சுருப்பானுங்க...என்று நோட்டம் பார்த்துக் கொண்டே பூனை போல நடந்தான் பாண்டி. நான் ஏதாச்சும் பேசப் போக அதும் பாட்டுக்கு ஓரமா இருந்துகிட்டு போட்டுக் கொடுத்துடுச்சின்னா , பெறவு இங்கிட்டிருந்து வெளியேற முடியாதாமே..! மனது எச்சரித்தது.
மலர்விழி மனத்தோடு தைரியம் சொல்லிக் கொண்டாள் .நான் டீச்சராக ஆகப் போறவ...எதுக்கும் .பயப்பட மாட்டேன்...!
அச்சமில்லை...அச்சமென்பதில்லையே,,,,
உச்சி மீது ஃபேன் விழுந்து
மண்டை உடைந்த போதிலும்
அச்சமில்லை..அச்சமில்லை....
அச்சமென்பதில்லையே.."
சின்ன வயதில் பாரதியார் பாடலைத் தலைகீழாகப் கேலி செய்து பாடிச் சிரித்ததை நினைவு படுத்தியபடி, இப்போதும் பயத்தை மீறி சிரித்துக் கொண்டாள். இவள் தனக்குள் சிரித்துக் கொண்ட போது பயம் விலகி நின்றது.
திடீரென ஒரு கதவு திறக்கப் பட்டு அழகான வாலிபன் இவர்களைப் பார்த்து "வெல்கம்'...என்றவன்....ப்ளீஸ். கமின்..என்றான்.
தயங்கிய பாண்டி உள்ளே நுழைந்ததும் , அவனைப் பின் தொடர்ந்தாள் மலர்விழி. விழுந்ததனால் ,கால் நரம்பு சுளுக்கி வீங்கிக் கொண்டு நடக்க விடுவேனா பார்...! என்று அவளைப் பிடித்து இழுத்தது.பாண்டிண்ணே, காலு ரொம்ப வலிக்கிது, என்று முனகினாள். அவன் கொஞ்சம் கூட அதைக் கண்டுகொள்ளவில்லை. அவன் பயம் அவனுக்கு.
இவர்கள் உள்ளே நுழைந்த அறை முழுவதுமாக குளிரூட்டப்பட்டு ஜில்லென்று இருந்த போதிலும் மலருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வேர்தது. அவள் கண்கள் அதிசயத்தில் மிக மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களை ஆவலோடு பார்க்கிறாள்.
அத்தனையும் இறால் ஊறுகாய் பாட்டில்கள், விற்பனைக்குத் தயாரான நிலையில் அடுக்கி வைக்கபட்டிருந்ததைக் கண்டதும் மனத்துள் நம்பிக்கை கை நீட்டியது.இந்த இடத்தில் பயமில்லை என்ற நம்பிக்கை உணர்வு அவளுக்குள் விழித்துக் கொண்டது. இப்போது அவளை ஆட்கொண்ட பயம் விலகிச் சென்றது.அப்பாடா....இறால் படங்களைப் ஏதோ தன் உயிர் தோழியைப் பார்த்தது போல மகிழ்ந்தாள் அவள்.
இவளைப் போன்ற பல பெண்கள் கைகளில் பிளாஸ்டிக் பைகளை நுழைத்துக் கொண்டு, தலையை பிளாஸ்டிக் தொப்பியை கவிழ்த்தி மூடியவாறு மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு கைகள் பரபரத்தது. இங்கன இதே வேலை கெடைச்சா எம்புட்டு நல்லாருக்கும். இப்படி ஜிலு ஜிலு ரூமுக்குள்ளார இருந்தா நான் "சீர்காழி கோயில கோயிலச் சுத்திப் பார்க்க வர வெள்ளக்காரியாட்டமா ஆயிடுவேன்......பெறவு அம்மாவுக்கு அடையாளமே தெரியாது...மனசு ரெக்கை கட்டிப் பறந்தது.
அப்ப ...அந்த மேனேஜர் பாண்டிகிட்ட சொன்ன சமாச்சாரம்...?ஆழ் மனசு உசுப்பியது.
அதற்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த அறைகளில் அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
சுவர் முழுதும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு சுவர் போல இவளை உள்ளிருந்து வரவேற்றது.அடுத்த நிமிடம் அந்த அறையின் கதவு வெளிப்புறத்திலிருந்து சார்த்தப் பட்டது. அந்தப் பெரிய அறையில் பல பெண்கள் சோபாவில் சாய்ந்து கொண்டு, சேரில் அமர்ந்தபடி நகத்துக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகத்தில் வெள்ளையாய் மாவைப் பூசிக் கொண்டு, கண்களுக்கு பதில் வெள்ளரிக்காய் வில்லைகள் உருட்டி முழித்துக் கொண்டிருந்தது.
சிரிப்புதான் வந்தது அவளுக்கு. இது ..வீடா.? ஆபீசா? சினிமா சூட்டிங் எடுக்குற எடமா? சொர்கமா...நரகமா..? ஒண்ணுமே வெளங்கலையே...இந்தப் பாண்டி எங்கிட்டுப் போனான்...கதவை இழுக்கிறாள்..அது மெளனமாக இவளை அடக்கியது. திரும்பிப் பார்த்து ஒரு பெண்ணிடம் , நான் வெளிய போகணும்.....!
..............
நான் வெளிய போகணும்.......! இரண்டாவது முறையும் சொல்கிறாள்.
.
............
ப்ளீஸ்....நான் பேசறது உங்க காதுல யாருக்குமே கேக்கலையா....? நான்....வெளியே....போகணும்...! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சத்தமாகவே சொல்கிறாள். அந்த அமைதியில் இவளது குரல் எதிரொலித்தது.
அடுத்த சில நொடிகளில்....."எங்களுக்கும் தான்...." ஒரு பெண்ணின் முனகல் இவளருகில் கேட்டது.
மலர்விழியின் மூளைக்குள் மின்னல் வேகத்தில் ஏதோ செயல்பட்டது.
சட்டென்று திரும்பிய மலர்விழி 'நானும் இங்கியே இதுங்களோடவே இருந்துகிட்டு என்ன தான் ஆவுதுன்னு பார்த்துப்புடறேன்..' ஒரு ஓரமாக தொப்பென்று கீழே அமர்ந்து கொண்டாள் . ஆமா....நான் என் பொட்டிய எங்கன வெச்சேன்.....அதுக்குள்ளாறத் தான என் உடுப்பு, துணிமணி, இன்னும் போன வார சம்பள துட்டு கூட வெச்சிருந்தேன்....தொலைச்சுப்புட்டேனே...இப்ப நான் எப்படி தேடுறது? பாண்டி அண்ணே இருந்தாக் கேட்டுக்கிடலாம்..அவுரு எங்கன இருப்பாரு..? ஒண்ணும் தெரியலையே...போச்சுடா சாமி...அம்புட்டும் போச்சு.. உசுரு மட்டும் போகாமே உருப்படியா வீடு போயி சேரணம் தாயி திரிபுர சுந்தரி...! கண்கள் நனைய ஆரம்பித்தது.
அடுத்த சில நொடிகளில், அவளை இருவர் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி அழகு படுத்தி கண்ணாடி முன்பு கொண்டு நிறுத்தியதும் ..
நானா...? இது நானா இம்புட்டு அழகா..?..என்று கன்னத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தவள் அருகிலிருந்த பெண்ணிடம் எப்ப சூட்டிங்கு ? என்று கேட்கும்போது மனசுக்குள் '16 வயதினே' மயில் வந்திறங்கினாள்.
அடுத்தடுத்து நடந்தவை அவளுக்கே வியப்பாக இருந்தது. உயர்ந்த உணவு
வகைகள் தந்து அவளை உண்ணச் சொன்னதும் மகிழ்ந்தாள் மலர்விழி.
இந்த இடம் ரொம்ப சொர்கமாட்டம் இருக்குதே.இங்கனயே இருந்திடலாம் போல ..ஆனால் நான் ஊருக்கு எப்படிப் போவேன்? என்ற கலக்கமும் மனத்துக்குள் வராமல் இல்லை. இரண்டு மனம் அவளுக்குள் தவித்தது.
அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாக இருந்தது பார்த்து இவளுக்கே சந்தேகம். அவர்களது கண்கள் எதையோ பேசத் துடிப்பது மலருக்குப் புரிந்தது.
ஒருத்தியிடம் மெல்லக் கேட்கிறாள்…மலர்.
நீ எங்கேர்ந்து இங்க வந்தே..?
பெங்களூரு…
நீ…இன்னொருத்தியைப் பார்த்ததும்..
தும்…..! ஐம் ஃப்ரம் டெல்லி…
அரண்டுதான் போனாள் மலர்.
எனக்கு செல்ஃபோன் பேசணும்….! உங்க யார்கிட்ட மொபைல் இருக்கு?
இல்லை…இங்க சிக்னல் கிடைக்காது. ஃபோனும் கிடையாது. யாரும் இங்க பேசிக்கக் கூடாது. மெல்லிய முனகலில் வந்தது வார்த்தையாய் அடுத்தவளிடமிருந்து.
அப்ப….இங்க எல்லாரும் அடிமைங்க போல….மனசுக்குள் நினைத்தவள்,
யாருக்கு சுதந்திரம் வேணும்? சாடையில் கேட்ட மலரைப் பார்த்து, அவர்கள்
கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்.
இது மலருக்குள் ஒரு சவாலை உண்டு பண்ணியது. அதுவே ஒரு சின்ன நெருப்புப் பொரியாக கிளர்ந்து, ஜ்வாலையாக கொழுந்து விட்டு கனன்றது.
எப்பிடியாச்சும் நான் தப்பிச்சிப் போகணும்….இவங்களயும் காப்பாத்தியாகணும்.
அப்ப, இந்தப் பாண்டியண்ணன்……ஷீலா…இவங்களையும் இங்கனக்குள்ள வராமல் தடுக்க என்ன செய்ய…? மனம் முழுதும் ஒரே எண்ணத்தில் தவித்தாள் மலர்.
அடுத்தது என்ன…? என்ற அந்த ஒரே எண்ணமே அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.
அறயில் இருந்தவர்களை பிடித்து கன்னாப் பின்னாவென்று அடிக்க ஆரம்பித்தாள்…..ஒரே நாளில் தலைப்பின்னலை பிரித்துப் போட்டபடி, தனது துணிகளைக் கிழிக்கத் துவங்கியவள் சிறிது சிறிதாக அசல் பைத்தியம் போலானாள்.
சற்று முன் அழகாகக் காண்பித்த கண்ணாடி அவளை இப்போது பைத்தியம் போல் காண்பித்தது. மனசுக்குள் திருப்தி பட்டுக் கொண்டவளாக மலர் அருகிலிருந்தவளைப் பளார் என்று அரைகிறாள்.
அடுத்த சில நிமிடங்களில், அந்தக் கதவு திறக்கப் படுகிறது. திறந்தவன் பாண்டி.
அவனைப் பார்த்ததும் தான் மலருக்கு உயிரே வந்தது. இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல்….பைத்தியம் போலவே சுவரைப் பிராண்டிக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு போனான் அவன்.
அவர்களை, ஒரு பெரிய ஹாலுக்குள் நிறுத்தி வைத்த ஒருவர்…..
இவளுக்கு நாங்க ட்ரீட்மென்ட் தருவோம்….இங்க கையெழுத்துப் போட்டுட்டு விட்டுட்டுப் போ…என்றார்.
என்னா….சார்….நம்ம கையிலேயேவா? எப்பிடி இருந்த பொண்ணு சார்… அந்தப் பாளாப் போன மானேஜர் மட்டும் இப்ப என் கையில சிக்கினாண்டு வையி…..அவன் டா.....ரா....யிருவான். பாண்டியின் வெறி பிடித்த குரலுக்கு அவர் சிறிது தடுமாறியது தெரிந்தது..
எங்கள இப்ப இப்படியே விட்டா…நான் இத்த கூட்டீட்டுப் போயி அதும் வீட்ல விட்டுருவேன். இல்லாங்காட்டி……விஷயம் வேற மாதிரி போகும்….பரவாயில்லையா?
கட கட வென்று சிரித்துக் கொண்டே,,என்ன எலி மிரட்டுது..? என்று நமுட்டுச் சிரிப்புடன், கைபேசியைத் தூண்டினார் அவர்.
என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தியவன் கண்களால் ஜாடை காட்டியது இங்கிருந்து தப்பித்து ஓடு...என கட்டளையிட்டது போலிருந்தது அவளுக்கு.
அவனது கைகளை அழுத்திக் கடிப்பது போல பாசாங்கு செய்து விட்டு அவனை விலக்கித் தள்ளி அறையை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓடியவள் படிகளில் பதுங்கி பதுங்கி இறங்கி லிப்ட் வழியாக கீழிறங்கி அங்கு லோடு இறக்கிவிட்டுத் தயாராக நின்றிருந்த வண்டியின் கதவு சார்த்தப் படுவதற்குள் தாவி ஏறிக் கொண்டாள் .
அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த அட்டைப்பெட்டிகளின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஒரு முரட்டு உருவம்...இவளைப் பார்த்ததும், கையை ஓங்கவும், மலர்விழி அவனது காலடியில் விழுந்து நடுங்கினாள். காப்பாத்துங்க.....காப்பாத்துங்க அண்ணே....அவளின் குரல் உடைந்து போயிருந்தது.
சரி....சரி....உள்ளார போயி அந்த சின்ன ஜன்னல் பக்கமா குந்திக்க...நான் தான் வண்டிய ஓட்டுவேன்...பயப்படாதே.....குதித்து இறங்கியவன்
கதவைப் இழுத்துச் சார்த்தி பூட்டும் போடும் சத்தம் கேட்டது.
மலரின் குரங்கு புத்தி, இவனையும் சந்தேகமாகவே 'இவன் ஒழுங்கா வெளிய கொண்டு போய் விட்டு என்னைக் காப்பாத்துவானா....?
இல்ல.....எதற்கும் நான் தயாரா இருக்கனும் ...பாண்டி...ரொம்ப தாங்க்ஸ்ண்ணே..மானசீகமாக நன்றி கூறியவள் , வண்டியின் விரைவின் அதிர்வைக் ....கண்டு.நாம எங்கே போயிட்டிருக்கோம்.....ஆமா...ரோட்டைப் இந்த இக்கினிக்காண்டு துவாரம் வழியாப் பார்த்தா நமக்கு எடமெல்லாம் தெரிஞ்சிடுமாக்கும்....ஏதோ அந்தத் திரிபுர சுந்தரி தாயி எனக்கு ஆதரவாயிருக்கு.நல்ல வேளையா நாலு வேளைக்குத் தேவையான சோத்தைப் திங்கச் சொல்லிப் போட்டானுங்க. இல்லாங்காட்டி என் நெலமை....அம்பேல் தான்.
வியர்த்து வியர்த்து உடம்பு முழுதும் தொப்பமாய் நனைந்து போயிருந்தாலும், மூக்கை மட்டும் அந்தத் துவார சன்னலில் பதித்து காற்றை உறிஞ்சிக் கொண்டு வந்தவள், திடீரென வண்டி நின்று விட்டிருந்ததை உணர்ந்தவள், என்ன நடக்கப் போவுதோ....நெஞ்சம் முழுதும் திக் திக் திக் திக்...என அடித்துக் கொள்ள அந்த முரட்டு டிரைவர் கதவைத் திறக்கக் காத்திருந்தாள் .
இவள் நினைத்தது போலவே, கதவை டமார்...டிமீர் என்று பெருஞ் சத்தத்துடன் திறந்தவன்.....ஏ ...புள்ள....வெளிய வா.....என்று அதட்டலாகக் குரல் கொடுக்கவும்....
தயங்கியபடியே தலையை மட்டும் மெல்ல நீட்டியவளுக்கு.....வெளிச்சம்....சூரிய வெளிச்சம்.....கண்களுக்குள் பிரகாசமாக வீச, தென்றல் காற்று மெல்லத் ததும்பி வந்து இவள் தலையைக் கோதி விட்டது போல தெய்வங்கள் நேரே நிற்பது போலிருந்தது மலருக்கு.
அண்ணே.....ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா .....அந்த முரட்டு மனிதனின் காலில் விழுந்து குலுங்கினாள் .
கண்ணீர் மல்க நின்றவளைப் பார்த்தவன், 'தங்கச்சி.....நான் பாக்குறதுக்குத் தான் முரடு.....எம்புட்டுப் புள்ளங்கள நானும் காப்பாத்திருக்கேன்.....மூச்.....! வெளிய சொல்லிப்புடாத புள்ள....என்றவன், இந்தாக் கைச் செலவுக்கு....என்று இருநூறு ரூபாயைத் கையில் திணித்தவன்.....இது கோவளம் கூட் ரோடு.....சாக்கிரதையா போய்ச்சேரு....சினிமால நடிக்க, சீரியல்ல நடிக்கன்னு வந்து இவிங்க கைல மாட்டிக்கிட்டு சக்கையா சாக்கடையில் போய் விழறது....அம்புட்டும் தலைவிதி...சொல்லிக் கொண்டே அவன் முன்பக்கக் கதவைத் திறந்து குதித்து ஏறி, ஹாரன் அடித்தபடி...விருட்டென்று காணாப் போனான்.
பாறைக்குள்ளும் ஈரம் இருக்குமாம்...தேரைக்காக.....நீர்..! அம்மா தாயே...நீ தான் இந்த முரட்டு டிரைவரா வந்து என்னைக் காப்பாத்தினே......திரிபுர சுந்தரி....இன்னும் கூடவே வா...உன் கோயில் கோபுரம் பார்த்தே வளர்ந்த கண்ணு...உன் தெப்பக் குளத்து மீனுக்கெல்லாம் பொரி போட்டு அதுங்க தின்னரதப் பார்த்து பார்த்து சலித்துப் போன மனசு....ஏதோ சின்ன ஆசையில அந்த ஊரையே பழிச்சுப்புட்டு இங்கிட்டு ஓடியாந்தேன். பணக்காரங்களுக்குத் தான் இந்தச் சென்னை. தனியா வந்து நல்லா மாட்டிக்கிட்டேன். ஊரப் பார்த்தா ஜம்முன்னு தான் இருக்கு.....புத்துக்குள்ளார கை விடப் போற கதையா.....நான் இந்தப் பத்து நாள்ல நாய் படாத பாடு பட்டுப்புட்டேன்.
ஒரு கோயில் கோபுரமாச்சும் கண்ணுல பட்டுச்சா.....அதெல்லாம் எங்கிட்டிருக்குமோ ? எந்தப் பக்கம் திரும்பினாலும்.....குச்சி குச்சியா வீடுங்க.
எண்ணச் சங்கிலிகள் பஸ்ஸைக் கண்டதும் டக்கென்று அறுந்தது.
பஸ் நிறுத்துமிடத்தில் நின்றது பஸ், இவளைப் பார்த்ததும் கண்டக்டருக்கு மனக்குழப்பம். இவள் பஸ் ஏற வந்தவளா...இல்லை...பைத்தியக்கார வேஷம் போட்ட பிச்சைக்காரியா? பஸ்ஸே சிறிது தயங்கி நின்றது.
சீர்காழி......போகுமா.?
துட்டுகீதா....மே.....நூத்தி அம்பது ரூவா.....டிக்கிட்டு...! அதிகாரமாக வந்தது குரல்.
ம்ம்ம்.....இருக்குண்ணே .....ஒருவழியா ஏறிக் கொண்டாள் .
பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த அத்தனைக் கண்களும் அவளையே ஒரு நொடி பார்த்து விலகியது. சில பார்வைகள் அளவெடுத்து கதை எழுதிக் கொண்ருந்தது.
பஸ் நகர்ந்து வேகம் பிடித்தது.
ஜன்னல் வழியாக வீசிய அனல் காற்று கூட மலர்விழிக்கு சுகமான மயக்கத்தைத் தந்தது. இத்தனை நாட்களாக தனது மனத்துள் அடைத்துக் கொண்டிருந்த ஷீலா,மேனேஜர்,பாண்டி,இறால் மீன்கள்..அதோட முள்ளு...நாற்றம்.....என்று ஒவ்வொன்றாகத் தூக்கி ஜன்னல் வழியாக தூர விட்டெறிந்தாள் ....கூடவே சென்னையையும் ..!
என் பெட்டி, என் உழைச்ச காசு அம்புட்டும் போச்சு....அம்மா எம்புட்டு சொல்லிச்சு..கேட்டனா....நான் கேட்டனா...ஒரு பெரிய தேவத கணக்காத் திமிரா சம்பாரிக்கப் போறேண்டு கிளம்பினேன். இப்ப என்னாச்சு...? உள்ளதும் போச்சு....சம்பாரிச்சதும் போச்சு..!
எனக்கு நல்லா வேணும். பொறந்த ஊரையும், காப்பத்துற சாமிய, பெத்தவள அம்புட்டு பேத்தையும் குற சொல்லிப்போட்டு வந்துப்புட்டேன். அதான்.....! ஒவ்வொரு பேராசைக்குப் பின்னும் ஒரு பேராபத்தும் காத்திருக்கும் போல. ஆமா...நாம மட்டும் தப்பிச்சு வந்துட்டமே.....மத்த பொண்ணுங்க....அதுங்களும் மாட்டிகிட்டு முழி பிதுங்க நின்னுச்சுங்க பாவம்...!
கண் டிரைவர் சீட்டுக்குப் பின்னால் இருந்த தகர ஷீட்டில் எழுதி இருந்த திருக்குறள் வாசகத்தைப் படித்தது...படித்தது....படித்தது....
படித்தபின் அவளுக்குள் புரிந்தது...!
" சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது..."
இது என்னவாயிருக்கும்......? இதற்கும் இப்போது நான் தப்பித்து வந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ...? அவளின் களைத்த மனம் காரணம் தேடியது.
"ஒரு செயலைப்பற்றிய ஆராய்ச்சியின் முடிவு மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்.
அவ்வாறு துணிவு கொண்டபின் , அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.."
நான் துணிவோடு வெளியேறிட்டேன்...அதற்கு...என்னோட துணிவு என்னை காப்பாத்திச்சு.....சரி தான்....ஆனால்...அங்க இருக்குற ..மத்தவங்க....?
மனத்துள் எழுந்த வினாவுக்கு அடுத்த பகுதியில் எழுதி இருந்த திருக்குறள் பதிலானது.
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை "
மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது.
அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்..!
அப்படீன்னா...என்னால அவங்களையும் காப்பாத்த முடியுமா? கண்களும் மனமும் பஸ்ஸுக்குள் அலைபாய்ந்தது.
என்னைப் போலவே அங்கிருக்கும் அனைவரும் சுதந்திராமாக வேண்டுமே....நான் இப்போ என்ன செய்வது..?
திருவள்ளுவரின் படத்திற்கு அருகில் சிகப்புக் கலரில் வெள்ளை எழுத்துக்களோடு இருந்த ஸ்டிக்கர் கண்களைப் பறித்தது.
அதில் பதிவாகி இருந்த தொலைபேசி எண்ணைக் மனசுக்குள் குறித்துக் கொண்டவள், அடுத்த பஸ் நிறுத்ததிற்க்காக காத்திருந்தாள் .
மாமல்லபுரம் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நின்றது...பதினைந்து நிமிடங்கள் வண்டி நிக்கும்...சாபிற்றவிங்க எறங்கலாம்.....கண்டக்டர் இறங்கி நடந்தார்.
காத்திருந்த மலர்விழி வேகமாக இறங்கி..கண்டக்டரைத் துரத்தியபடி .இந்தப் பத்து ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா.?
..ம்ம்.ம்ம்ம்....இந்தா.....என்று கையில் திணித்த சில்லறையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள் .
அங்கிருந்த டெலிபோன் காயின் பாக்ஸ் டெலிபோன் அருகே நின்று...அவசரமா ஒரு ஃபோன் போடணும்.
எண்ணைச் சுழற்றி ரிங் டோன் வந்ததும் காசைப் போட்டு ஹலோ என்ற ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்து விஷயத்தை தனது மெல்லிய குரலில் பதட்டப் படாமல் சொன்னவள், கெஞ்சிய குரலில்....என்னிய மாட்டி விட்றாதீங்க...பாவம் அந்தப் பொண்ணுங்க...!
விஷயம் வெளியேறிவிட்ட நிம்மதியில் திரும்ப வந்து பஸ்ஸில் அமர்ந்தாள்.
பஸ் கிளம்பியதும் நிம்மதியில் உறங்கிப் போனாள் மலர்விழி.
சிதம்பரம் வந்ததும் .....கண்டக்டர் கொடுத்த நீண்ட விசில் சப்தம் காதைக் கிழிக்க, விழித்த மலர்விழி....அங்கிருந்த கடைப்பலகையில் ஊர் பெயரைக் கண்டு உயிர் வந்தவளாக இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சீர்காழி போயிருவேன்.....அம்மா..அம்மா....ஆச்சரியப்படுவாங்க.
அப்பா....அப்பா...என்னோட இந்தக் கோலத்தைப் பார்த்தால் ....நினைக்கவே வேதனையாய் இருந்தது அவளுக்கு.
இரவு மெல்ல மாலை நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.
நான் ஃ போன் பண்ணி சொல்லிட்டேனே,,,,இப்போ அவங்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருப்பாங்க...? இல்லை அவங்களும் ஏமாத்திர்வாங்களா ? நடராச மூர்த்தே....நீ தான் இதுக்குப் பொறுப்பு. நான் என்னால செய்ய முடிஞ்சத செய்தாச்சு. நானும் உன்னையத் தான் நம்பறேன். எல்லாத்தையும் காப்பாத்து. கைகூப்பி வேண்டிக் கொண்டாள் .
பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஒற்றைப் பாதையில் குலுங்கிக் குலுங்கி ஓடியது. அவளது மனோவேகம் அதற்குள் அவள் வீட்டு வாசல் படியை ஆயிரம் முறை தொட்டு வந்தது.
தன்னை இறுக்கியிருந்த அத்தனை சங்கிலியிலிருந்தும் விடுபட்டவளாக உணர்ந்தவள் சீர்காழி...சீர்காழி...சீர்காழி...என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
நீண்ட .விசிலுடன்......சீர்காழி....சீர்காழி....சீர்காழியெல்லாம் எறங்கு.....!
ஒரு கூடை மல்லிகைப்பூ தலைமேல் பூச்சொறிந்தது போல சிலிர்த்துப் போனவள் நாலுகால் பாய்ச்சலில் இறங்கி விடு விடுவென்று நடந்தாள் . சுளுக்கு வலி பறந்தது....செருப்பில்லாமல் .கல்லும் முள்ளும் கூட பூவாகிப் போனது போலிருந்தது...மலர்விழிக்கு.
தூரத்தில் தெரிந்த அவளது காரைவீடு....மாடமாளிகையாய் தெரிந்தது அவளுக்கு.
அம்மா....பசுவைத் தேடும் கன்று போல துள்ளித் துள்ளி ஓடினாள் மலர்விழி.
எதுவெல்லாம் அவள் அவளுக்குப் பெருமை என்று நினைத்து பொய்யான கௌரவம் பார்த்தாளோ....அதெல்லாம் அவளை விட்டு நகர்ந்து நின்று அவளை வேடிக்கை பார்த்தது.
வீட்டு வாசல்படியை மிதித்தும் பொன்மாரி பொழிந்தது போல உடம்பெல்லாம் சிலிர்க்க.....அம்மா.....அம்மா...அப்பா....அப்பா...!
நா....நா....நான்....மலரு.....வந்திருக்கேன்.
இவள் குரலுக்கே கதவு அகன்று திறந்தது. உள்ளே, பூக்களை பரப்பி வைத்துக் கட்டிக் கொண்டிருந்த அம்மா, டீயை ஆற்றிக் கொண்டிருந்த அப்பா இருவரும் முமுரமாக சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் , இவளைக் கண்டதும் திகைத்து ஆச்சரியத்துடன் விருட்டென எழுந்த அம்மா...
"யம்மாடி....மலரு ..என்னடி திடுதிப்புன்னு இப்படிச் சொல்லாமே கொள்ளாமே வந்து நிக்கிற.....எங்கடி போயிருந்த இம்புட்டு நாளு எப்பிடிம்மா இருக்கே...என்ன ஆனியோ...எங்கிட்டு இருக்கியோன்னு..துடியாத் துடிச்சிப் போனமேடி...என் செல்லமே...
இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்ணீர் மல்க, மறந்துட்டியேடி பாவி...அப்பாவின் கண்களில் தாரையாய் பாசம் வழிய....என்னடா ராசா ...
ஒரு தகவலும் இல்லாமே தவித்தவரின் கைகளில் நடுக்கம்..!
என்ன கோலத்தில் வந்து இப்படி நிக்கிற...என்னாச்சு? எதைத் தொலைச்சிட்டு வந்து இப்படி பயித்தியக் காரி மாதிரி வந்து நிக்கிற...நான் அப்பமே சொன்னேனே....பட்ணம் பாளாப் போகுதுன்னு போகுறியான்னு ...? அம்மா தளர்ந்து உட்கார, அவள் மடியில் முகம் புதைத்து குலுங்கியவளை ஆதரவாக முதுகைத் தடவிக் கொண்டே....
என்னாச்சுடி.....காத்துக் கருப்பு அடிச்சாப்புல...! என் அடி வவுறு ....கலந்குதுடி.சொல்லுடி....என்னாச்சு? எதைத் தொலைச்சே....? நீ கவலைப் படாதே.....என் தாலிக்கொடியை வித்தாவது உன்னிய நான் டீச்சர் படிப்புல சேக்குறேன்....நீ கவலைப் படாதே...நாங்க இருக்கோம்....இல்லீங்க...புள்ள எதையோ களவாணிப் பய ஊருல பணத்தை பொட்டிய களவு கொடுத்துட்டு வந்து நிக்குது..நம்ம புள்ளைய நாம படிக்க வெச்சிடலாம். சரீங்களா.....?
ம்ம்ம்...அதுக்கென்னாடா நாம பார்த்துக்கிடலாம்....இந்த வாட்டி நல்ல வெளைச்சல். நீ அளுவாத பாப்பா..!
டீவி யாருக்கோ செய்தி வாசித்துக் கொண்டிருந்தது.
"மர்மக் கும்பல் சிக்கியது....எங்கிருந்தோ வந்த தகவலின் பேரில் முற்றுகை இட்டதில் பெண்களைக் கடத்தும் பயங்கர மர்மகும்பல் சிக்கியது. நூற்றுக் கணக்கான இளம் பெண்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக ஆட்டிப் படைத்த வடநாட்டு மர்ம கும்பல் பலவித நாச வேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிந்து அவர்களை நமது தமிழக போலீஸ் கைப்பற்றி கைது செய்து புழலில் அடைத்தது. இளம் பெண்களைக் காப்பாற்றி உரிய இடத்தில் சேர்க்கும் முயற்சியில் தனியார் தொண்டு நிறுவனம் ஆவன செய்கிறது.
இந்த செய்தி காட்டுதீ போல சென்னையில் மக்களுக்குப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணீரென்ற குரல் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலுடன் தாயின் மடியை விட்டு எழுந்தவள் , தனக்கும் அந்தச் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல... அம்மா....நான் குளிச்சுட்டு கோயிலுக்குப் போயிட்டு திரிபுரசுந்தரிக்கி தீபம் போட்டுட்டு சூடம் கொளுத்திட்டு வாரேன் ..என்றாள்.
இப்பவாச்சும் சொல்லுடி....நீ எதைத் தொலைச்சே...? பணத்தையா....பெட்டியையா..? இல்ல....
ஷ்.....நான் தொலைச்சது.....இங்கன இப்போ கிடைச்சது....ரெண்டுமே......."நிம்மதி ' தான்.வேறொண்ணுமில்லை இந்த நிம்மதிக்கி முன்னாடி பணம் தூசி தான்மா....என்று நிம்மதி பெருமூச்சு விட்டுச் மென்மையாய் சிரித்தாள் மலர்விழி. அவள் மனசுக்குள் மகிழ்ச்சி பொங்கிப் பெருகியது.
மலர்விழியின் குடும்பமே இழந்த நிம்மதியை மீண்டும் பெற்றது.
--------------------------------------------------------------------------------------------------முற்றும் ---------------------------------------------------------------------------------------------------------------------------
(தொடரும் )