சனி, 21 ஜூலை, 2012

இதய கீதம்!

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
 

ஜான் லெனனன்,  பீட்டில்ஸ் பாடகர்.  (1940 - 1980)
ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்குள்! 
பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு! 
விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு!
எங்கோ உள்ளது என்னுள் ளத்தின் ஆழத்தில்! 
இங்கே காணேன் என்பதை அறிவேன்!
முன்னமே உள்ள தென்னுடை மனதிலே! 
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
எங்கெலாம் எனை இழுத்துச் செல்லினும்!
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
எப்போது நான் அழைக்கப் படினும்!
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
ஆம், இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்! 
ஓம் 


இந்தியாவே ! இந்தியாவே !
என் வேண்டுகோளை கேளாய் !
பொறுமையுடன் உன் திருவடிகளில் அமர்ந்துளேன். 
ஆற்றங் கரையில் காத்துளேன். ஆயினும்
எங்கோ என் நினைவில், இங்கி லாந்தில் 
இறக்கி விட்டேன், என்னிதயம் தன்னை 
விட்டுச் சென்ற என் காதலியுடன்! 
எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்,
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
எப்போது நான் அழைக்கப் பட்டாலும்,
என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
ஆம், இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம் 
இந்தியாவை நோக்கி!

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 5, 2007)]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக