திங்கள், 10 செப்டம்பர், 2012

அடித்தாரைச் சொல்லி அழு!

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

தூங்காத குழந்தை:

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

1 கருத்து:

 1. அழகான அந்தக்காலத் தாலாட்டுப்பாட்டு. பாராட்டுகள்.

  //யாரும் அடிக்கவில்லை! - என்னை
  ஐவிரலும் தீண்டவில்லை!
  பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
  பாசமுள்ள தாயாரே!//

  இந்த வரிகளைத் தாங்களே சேர்த்துள்ளது தான் சூப்பரோ சூப்பர் :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு