ஞாயிறு, 27 ஜனவரி, 2013

மந்திரக்கோல்






ஆற்றங் கரையைப் புரளச் செய்தது.
ஆழ்கடலை மௌன மாக்கியது
பகலவனை செந்நிற மாக்கியது
பால் நிலவைக் கருமை ஆக்கியது

மரத்தை ஓலை விசிறி யாக்கியது
மனிதனை மாணிக்க மாக்கியது
இறைவனைக் கல் லாக்கியது
தலைவனைத் தெய்வ மாக்கியது

தொண்டனை 'தலை'யாக்கியது
ஆர்ப்பாட்ட உலகில் தீ மூட்டியது
அகக் கண்களை விழிக்க வைத்தது
புறக் கண்களைக் குரு டாக்கியது 
என் மந்திரக் கோல் ! எழுதுகோல்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக