ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதியவள்...!


வாழ்கையின் ஓரத்தில் அவள்....
தயங்கியபடி நிற்கிறாள்...
இன்னும் ஒரே நாள் தான் 
இருக்கு அவள் கணக்குக்கு....
உயிர் விட..

அவளது வாழ்வில் ஆளுக்கொரு .
பரிசை அள்ளிக் கொடுத்து 
அவரது நினைவுப் படுக்கையில் - 
உல்லாசமாய் நிறைந்தவள்...!

உலகத்துக்கு ஒரு அடையாளமாய் 
தன்னைத் தந்து விட்டு தனக்கென 
எதையும் எடுத்துக் கொள்ளாமல் 
திரும்புகிறாள் அவள்..!

வந்த இடம் தெரியாது,,
செல்லும் இடமும் தெரியாது.
இரண்டு நாட்கள் நிமிடங்களாய்
கரைந்தது அவள் கண்களில் ..
.
ஆண்டாண்டுகளாய் நடக்கும் 
நாடகத்தில்...அவளை விரட்ட 
ஆயிரம் வெடி வாலாக்கள்....
அன்றொருநாள் அவளின் வருகைக்காக 
வெடித்துச் சிதறிப் பொன்மழை தூவிய 
புஸ்வான வானம்....! 

விட்டுச் செல்ல மனமில்லாமல் 
அந்த இறுதி நிமிடத்தில் 
வலுக்கட்டாயமாக தள்ளிவிடப் பட்டவள் 
போல.....அவள் உயிர் அடங்கியதும் ..
கதாநாயகியாய்க் காலடி எடுத்து 
வைக்கிறாள் புதியவள்...!

2 கருத்துகள்: