புதன், 8 மே, 2013

வானமும் நானும்..!





மொட்டை மாடி அரண்மனை..!

நித்தம் வானக் கடலில்


மேக அலைகள் தவழ்ந்து அலையும்


நிலவுக்கும் எனக்குமான இடைவெளியில்


மெல்லப் புகுந்து இடை மறிக்கும்


இரவின் தென்றலோ வேறு லோகம்


எனை அழைக்கும்...!


நட்சத்திரப் பூக்கள்


எனைப் பறிக்க மாட்டாயா ?


என ஏங்கிச் சிணுங்கும்...!


அந்தரத்தில் சுதந்திரமாய்


அனைத்தும் மனத்தை அணைக்க


கீழிருந்து அம்மாவின் அசரீரி


கடங்காரி .....அந்த மானத்துல


என்னதான் இருக்கோ..?


என் மானத்தை வாங்காதே....


இறங்கி வந்து தொலை...!


கற்பனைகள் எனை விட்டு இறங்க


கோபம் குடியேறியது மனதில் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக