முல்லைப் பூவாக
சிரித்தவள்
வார்த்தை முள்ளாய்
குத்தும் போது
இதயம் எட்டி
நின்றது..
மனதும் விட்டுப்
பிரிந்தது...
முல்லையின் மொட்டு
இவள்
மல்லிகையாய்
என்னோடு ஒட்டிக்
கொண்டும் பற்றிக்
கொண்டும் விடாமல்
என்னைத்
தாயுமாக்கினாள்..!
மழை விட்டும் தூவானம்
விடாமல் மழலை
உந்தன் மொழி கண்டு..
நானும் தாயானேனே ,,
தன குருதி காக்கும்
கடமை தந்தைக்கும்
உண்டென உனைத்
தாங்கிக் வாங்கிக்
கொண்டேனே...
சுமந்தவளுக்கு
நீ சுமையாம்
வேலைக்கு நீ
ஒரு தடையாம்
நிறத்திலும்
உருவத்திலும்
நீ எனது
கண்ணாடியாம்
தாமரை இலைத்
தண்ணீராக
உனைத் தாரை
வார்த்து விட்டு
பெண்ணியம் பேசும்
பேதையவள் ...!
ஆண்களுக்கெதிராக
ஆயிரம் கொடி உயர்த்த
முதல் வஞ்சனையாக
பெண்சிசு பற்றிப்
பேச மேடை ஏறுகிறாள்
என்னையும் சேர்த்து
காற்றில் பறக்க விட..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக