சங்க நாதமாய் பிரணவம் ஒலிக்க
அண்ட புவனங்களின் மௌனம்
கலைத்த இச்சா சக்தியே ஸ்ரீ ராஜமாதங்கி
மனோ மௌனமே சோடசக்கலையாய்
சங்கல்பசக்தி தரும் அஜபா சித்தியே ஸ்ரீ புவனேஸ்வரி
மனோன்மணியானவளே ரட்சிப்பாய்..!
கடைக்கண் ஈந்து லயத்தில் திளைத்த
பூமண்ணின் அசரீரி கண்ட ஸ்ரீ மூகாம்பிகே
சிந்தாமணி ஸ்வரூபமே பராசக்தி..!
திருமூலத்தில் மூலமானவளே ஸ்ரீ காயத்ரி
ஆதாரங்களைத் தாண்டி நிராதாரத்தின்
மூலாதாரமே ஸ்ரீ சாவித்திரி
தாம்பூல நாக்கில் துதி இயம்பும் வாக்தேவியே
வேணி என்னுள் ஷட்ரசம் எழுதும் ஸ்ரீ சரஸ்வதி
ஜோதிர் மண்டலத்தின் மரகதமணியே..!
சர்வமும் பவித்ரபர தேவியாய் பிரபஞ்சத்துள்ளே
ஞான ரூபமாய் நற்கதி அருளும் ஸ்ரீ காமாட்சி
பரமா காசத்தை இயக்கும் ஸ்ரீ பரமேஸ்வரி..!
சாரதா நவராத்திரி-தேவதாரு அடிநிழலில்
சித்தசுத்தி வரமருள்வாய் ஸ்ரீ காமதேனுவே..!
ஆதார ஆதித்யனே நின் பாதாரவிந்தம் சரண்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக