ஆழ்கடல் மனதோடு அன்பு கடைந்த நுரைமனம்
பொங்கும் ஆசையை அள்ளி த் தொடுத்த இறைமனம்
பந்தம் நிறைந்த ஏகாந்தம் என்றும் அவள்வசம்
ஏந்தும் பொற்கிழியாய் பூரிக்கும் தாய்ப்பாசம்
கண்ணுக்குள் மரகதம் நெஞ்சுக்குள் மாணிக்கம்
கைகளிலோ மணிவயிரம் வாயாரப் பாயிரம்
உண்ணும் மணித்துளி உறங்காதே கருமணி
எண்ணும் மடிநிறை கண்மணிக் கனவுகள்
சுழலும் பூமியினுள் ஓயாத உள்ளொளி
தாராள அன்பினுள் ஏகுதோ ஏகாந்தம்
ஆதாரமே தாய்மை காணீரோ குமுதமனம்
ஈன்றெடுத்த நித்திலம் பெண்மையின் இரத்தினம்
சித்தம் நிறை வளர் பாவை
நித்தம் குறை கண்டாலும் போகும்
எத்துணை போற்றிப் படைத்தாய்
யாருளர் மேதினியில் இணையாய் துணை?
கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ
அகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ
ஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ
புத்துலகம் காணும் சேய்க்குத் தாயே பரிசு....!