ஹேவிளம்பி வந்ததே
வாசல் தோறும் தென்றலாய்
கோலமிட்ட கோதைகள்
மனம் நிறைந்த ஆவலில்
அவல் தேங்காய் பாயசம்
அத்தோடு மாம்பழம் கூட்டவே
மாங்காய் புளிப்பும்
தேனின் இனிமையும்
வேம்பின் பூ கசப்பும் கூட்டிட்ட
அறுசுவை பச்சடி
வளமைகள் சேர்ந்திடவே
சுவையாகச் சமைத்திடுவாள்
கொண்டவன் குழந்தைகள்
உறவினர் யாவர்க்கும் அன்புடன்
பகிர்ந்தளிப்பாள் - ஆசைகள்
தோன்றாத மனத்துள்
பல்லாண்டு இப்படியே
வாழ வைக்குமாறு
மனதார ஆசையாக
வேண்டிக் கொள்வாள்
நிறைந்த கனிகள்
குவிந்த பொற்காசுகள்
மணம் மிக்க மலர்கள்
முகம் காட்டும் கண்ணாடி
கண் திறந்தால் சௌபாக்கியம்
காலங்கள் கடந்தும்
இது ஒன்றே சாஸ்வதம்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
பதிலளிநீக்குகடவுள் கண் திறந்தால் சௌபாக்கியம் :)
சித்திரை முடிவதற்குள் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்து விட்டேன். ஹி ஹி ஹி ஹி
பதிலளிநீக்குஇறைவன் அருள் இருந்தால் என்றும் சௌபாக்கியம்.
வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ