வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாயும் சேயும் ...!


Image result for mother and child india



ஆழ்கடல் மனதோடு அன்பு கடைந்த நுரைமனம் 
பொங்கும் ஆசையை அள்ளி த் தொடுத்த இறைமனம் 
பந்தம் நிறைந்த ஏகாந்தம் என்றும் அவள்வசம் 
ஏந்தும் பொற்கிழியாய் பூரிக்கும் தாய்ப்பாசம் 

கண்ணுக்குள் மரகதம் நெஞ்சுக்குள் மாணிக்கம் 
கைகளிலோ மணிவயிரம் வாயாரப் பாயிரம் 
உண்ணும் மணித்துளி உறங்காதே கருமணி  
எண்ணும் மடிநிறை கண்மணிக் கனவுகள் 

சுழலும் பூமியினுள் ஓயாத உள்ளொளி 
தாராள அன்பினுள் ஏகுதோ  ஏகாந்தம் 
ஆதாரமே தாய்மை காணீரோ குமுதமனம் 
ஈன்றெடுத்த நித்திலம் பெண்மையின் இரத்தினம்

சித்தம் நிறை வளர் பாவை 
நித்தம் குறை கண்டாலும் போகும் 
எத்துணை போற்றிப்  படைத்தாய் 
யாருளர் மேதினியில் இணையாய் துணை?

கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ 
அகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ 
ஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ
புத்துலகம் காணும்  சேய்க்குத் தாயே பரிசு....!

3 கருத்துகள்:

  1. //கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ
    அகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ
    ஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ
    புத்துலகம் காணும் சேய்க்குத் தாயே பரிசு....!//

    சேய்க்குத் தாய் போல .... தாய்க்கும் சேயே பரிசு (இவையெல்லாமே
    அந்த சேய் ஒரு பத்துவயதுக் குழந்தையாய் இருக்கும்வரை மட்டுமே)

    பதிலளிநீக்கு
  2. ஜெயஸ்ரீ

    உங்கள் கவிதையில் என் மனம் மலரும் நினைவுகளாய் என்னை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.

    நிகழ்காலத்தில் இப்பொழுது என் மருமகளைக் காண்கிறேன்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய ஜெயஸ்ரீ ஷங்கருக்கு

    கவிதையில் நான் கண்ட பெருமைமிகு உயர் தாயின் உன்னத குணங்கள் யாவும் வரிவரியாய் வரைந்தளித்த படையலிது!

    உயிர்க்குடுவை அவள் சுமந்து உயிரதனை நமக்கு ஈந்து இப்பூமியிலே நம் வரவை தந்திட்ட நாள்முதலாய்...

    தொப்புள்கொடி உறவிதுவும் சொந்தங்களின் தலைமைபீடம்! இதற்கு இணை ஈடேயில்லை என்று எல்லோர் மனமும் சொல்லும்!!

    தவிப்பதனை.. தாய் சேயின் துடிப்பதனை.. நாடி நரம்பெல்லாம் ஓடிவரும் உள்ளப்பெருக்கை .. காணுகின்ற போதிலெல்லாம்..

    தாயே உந்தன் மடிதேடி ஓடிவர நினைக்கின்றேன் அம்மா.. அம்மா.. எங்கே நீ?

    வாழ்த்துக்களுடன்..
    காவிரிமைந்தன்

    பதிலளிநீக்கு