-
வெற்றுக் காகிதம் தான்
பல உணர்வுகளின்
வேர்கள் எங்கும் பரவி
ஒப்பந்தக் கையெழுத்திட்டு
குழந்தையாய் பயந்து
இளமையாய் வெட்கி
கம்பீரமாய் நடந்து
தன்னம்பிக்கைச் சின்னமாகி
உருவத்தின் முகவரியாய்
வசீகர காந்தமாய்
அனுபவ காலங்கள்
கடந்து கிழிந்து
கிறுக்கல் காகிதமாகி
இளமையைக் கடந்து
இயலாமையில் தவித்து
தனிமையில் துவண்டு
குறுகிக் குனிந்து
வெளிச்சத்திலும் தடுமாறி
உருமாறிப் போனதாய்
நெஞ்சோடு உறவாடி
தைரியம் குலைந்து
மௌனத்தை மொழியாக்கி
மனத்தை ஊமையாக்கும்
மனித முகங்கள்....!
வெற்றுக் காகிதம்தான் மனித முகங்கள் என்பதன்
பதிலளிநீக்குபல்வேறு உணர்வுகளை வரிக்கு வரி சொல்லி, அந்த
வெற்றுக்காகிதத்தையே இப்போது ஒரு
வெற்றிக் காகிதமாக மாற்றியுள்ள
படைப்பாளி ’ஸ்ரீ’ அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம்.