வெள்ளி, 8 ஜூன், 2012

கண்களில் ஒளிகிறாய்....!

 
நீ.... இல்லாத  உலகினிலே....!
பாலை மணல் தொட்ட காலடியாய்..
பொசுங்கி போனது எந்தன் உள்ளம்...!
வறட்டு பூமியைப்போல் பிளந்து விடுவேன் 
என எச்சரிக்கிறது..எந்தன் இதயம்...!

பறையில் மோதும் அருவியாய்...
கண்ணீர் தாரை..நிலத்தை நனைக்கிறது..
ஒளியைத் தேடி..வைரக்கல்...
மீண்டும் பூமிக்குள்..கருத் துண்டாக...!

நீ.... இல்லாத உலகினிலே....!
தீக்குச்சியே  என்னுள் எரித்த  தனிமை...
பற்றி கருகுகிறது...மனம் முழுக்க...!
பகலும் வேண்டாம்..இரவும் வேண்டாம்...
இந்தப் பாழும் ..பெண்ணிற்கு...!

ஒளி இழக்கும்  கண்கள்...
உன்னை இழந்த வேளையிலே..
மௌனமாய் எரியும்..அடிமனத் தீயோ...
எஞ்சியது..மரணம் மட்டுமே..
என...கனன்று தலைதாவும்..!

நீ... உள்ள உலகினிலே...!
பற்றி எரியும்  பாலையில்..
சுண்டு விரல் பிடித்து 
நடக்கிறோம்..தவழ்கிறோம்..
பாதம் பட்ட இடங்களில் 
பங்கயங்கள்....உனதும் எனதும்..!

வியர்வைகள் வழிந்தோடி..
முத்துச் சிதறலாய்...!
நம் சுவடுகள்.. அலங்கரிக்க..
சித்திரக் கூடத்து சிற்பியாய் நீ....! 

என் சிந்தைக்கு விந்தை விருந்து 
உந்தன் அத்தனை எண்ணமும்..
கற்பனை வண்ணச் சிறகு விரிக்..
உலகமே..உருளாது நிற்கும்..!
நீ... உள்ள உலகினிலே...!
நாம் சந்திக்கும் காற்றும்..
காத்திருக்கும் பயிர்களோடு
கைகுலுக்கி சொல்லும்...
அவளை... அவன்..படிக்கிறான்...!

தவிக்கிறது உயிர்...
உருவங்களை அழித்து
ஒன்றாக்கும் வித்தை..
நீ கற்கவில்லையா என்று..?
---------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக