வியாழன், 7 ஜூன், 2012

கலப்படக் கனவுகள்..அறியாத பருவத்திலே...
சில்மிஷக் கனவுகளில்..
கண் படும்  விஷயம் கூட
நிறைவாய் தோன்றும்....

 
 
திறமை கண்டு பெற்றவர்கள் .
பெருமையாய் எடுத்துக் கூற..
இவளாய் வருவாய்..
அவளாய் வருவாய்....

ஆசை தூபம் அரங்கேற..!
ஆயிரம் கனவுகள் கும்மி..!
நெஞ்சம் யாவும்..
யௌவன கர்வம்...

நாற்பதைத் தாண்டினால்..
இப்படி  இருப்பேனோ..?
அப்படி  இருப்பேனோ..?
கற்பனை குதிரைகள்....
நாலுகால் பாய்ச்சலில்

இருபதில் கண்ட கனவுகள் 
இறக்கையும் முளைத்தது
காலும் பறந்தது...
இளமை வீச்சில்...!

கண்டகனா ஏதும் ..
நாற்பதைத் தாண்டியும்
நடக்கவே இல்லையே...
பகல்கனவு கூட பலித்திருக்கும்

நான் கண்ட கனவில் ஒன்று 
கூட பலிக்கவில்லை...!
அன்று நான் கண்ட 
கனவிலுமா கலப்படம்..?!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக