வியாழன், 7 ஜூன், 2012

அந்தரத்தின் ஜாலம்..!

வான் எழுதி தள்ளும் 
கவிதை மழை...!
பாதை மாறாமல்...
கவிதைக் கடலில் 
கலந்து அலையும்...!

என் எண்ணக் கடல்
பாதை மாறாமல்...
வான் மேகத்தோடு 
போட்டி போட்டு..
மிதந்து அலையும்...!

இளமை ஏக்கங்கள்...
மேகங்களைத் தொட்டதும்
மின்சாரமாய்...
மின்னல்....பிரவேசம்..!
பொறாமையோடு..ஈட்டி 
கொண்டு வருகிறது..
இடி கூடவே...!

கார் மேகம்..பாரம் 
தாங்காமல்...அழுகிறது...
சேர்த்து வைத்த 
தாகம்..யாவும்...
வீணாகி...வீழும்போது..! 

வானவில்லே...உனக்கேன்...
இன்று இவ்வளவு வெட்கம்..!
முகம் புதைக்க..இடம் தேடி....
எங்கே செல்கிறாய்..?

உன்னைக் காணும் 
நேரமெல்லாம்....
வர்ணங்களை 
மாலை கோர்த்து..
உன் கழுத்துக்கே
ஆரமாக்க...எடுத்து
வருவதற்குள்...
மறைந்து விட்டாயே..!


எதிரிகளாய்....அல்ல..
பிரியமுடன்...உங்களுக்குள் 
நடக்கும் இனிமையான 
இளமைப்  போராட்டம்.....
எப்போதும் எங்களுக்கு 
கொண்டாட்டம்..!
---------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக