வியாழன், 6 மார்ச், 2014

ஆயிரம் காலப் பயிர்


அவள் முறுவலித்தாள் ....
புன் சிரிப்பால் பூ வைத்தாள் ...
ஓரக் கண்ணால் பேசினாள் 
சுட்டும் விரலை நீட்டினாள்

பூமி பந்து கால் நழுவ
சிறகு தந்து சென்றது
மேகப் பஞ்சும் அவனைக் 
கொஞ்சம் கொஞ்சி
விட்டுப் போனது

வான் வீதியில்
பூ மழை தூவ
அவளும் அவனும்
ஒன்றாக....வாழ்வின்
இன்பம் எங்கே
என்று தேடிடத் தேடிட
அப்பனும் அம்மையும்
தானாக...!

ஐந்துக்கும் பத்துக்கும்
பத்தாத பணத்துக்காகப்
பறந்து திரிந்து தொலைந்தாரே 
பிள்ளைகள் பாலுக்கும்
பள்ளிக்கும் பணம் வேணும்
ஒரே பேச்சும்
ஒற்றைப் பேச்சும்
பணம் வேணும்....என்றாக..1.

காதல் பேசிய காரிகை
பெண்ணியம் பேசவந்தாள்
அன்புக்கு அடிமை என்றவள்
பணத்துக்கு அடிமை என்றாள்

உன்னையே ஒதுக்கிய
என்னைக் கேட்க வந்த
மாமி யார் ? என்றாள் ..
முறுவல் முகத்தில்
இரவல் இளிப்பு...!

தாலியோடு தொப்புள்கொடியும்
தூக்கி எறிய தயாரானாள் ....!
இருப்பதில் இனித்த காதல்
முப்பதில் முற்றிப்  போச்சோ
ஆண்கள் நாம் மட்டும்
பெண்ணுக்கு இளைத்தவர்களா
கொண்டாடுவோம்
ஆடவர் தினம்...!

பெண்களால் கண்ட அநீதி
ஆண்களுக்கு அவமானம்..!
பெண்களே கடாசாதீர்கள்
உங்களின் தன்மானம்...!
இணைந்து வாழ்ந்த
இன்பம் அனைத்தும்
பிரிந்த போது
துண்டாய்ப்  போகும்...!

வாய்மை உனக்குள் இருக்க
நீயே வாழ்வை வெல்லலாம்...
சொல்வதெல்லாம் உண்மை
என மகளிர் கோர்ட்டு வாசல்
செல்ல வேண்டாம்...!

அன்பை மட்டும் விதை..
அறுவடையை அன்பைப்
பயிர் செய்யக் கற்றுக்கொள்.
ஆயிரம் காலப் பயிர்
ஆரம்பத்திலே கருகவிடாமல்
பெண்ணியத்தைக்
காப்பாற்று ....!
குடும்பத்தையும் நீ போற்று...!

















1 கருத்து:

  1. // வாய்மை உனக்குள் இருக்க
    நீயே வாழ்வை வெல்லலாம்... //

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு