ஹைக்கூ கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைக்கூ கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மே, 2012

கவிதையொலி.....

 


நாணத்தினால்
தாமரை...
வண்டுகள் வரவு..!
--------------------------------
நீ சூடிய மல்லிகை..!
நறுமணம்...
எனைத்தேடி..!
------------------------------
விற்கும் வரை மட்டுமே.. 
ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
செருப்பு...!
----------------------------------------
வளைந்த வில்லும்
நீந்தும் கெண்டையும்..
உன் முகத்தில்..!
-------------------------------------------
நிறைகுடத்தை
சுமக்கிறாள்
கர்ப்பிணி..!
---------------------------------------
கால் வலிக்காதா..
சோர்வே வராதா,,..?
கடலலைகள்.
---------------------------------------
கனல் கொண்டு பறக்கும்
புதுமைப் பெண்..
மின்மினி...!
----------------------------------------
சொன்ன வாக்கு பலிக்குது...
வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!
--------------------------------------------
மூடிய விழிகளுக்குள்
வண்ணச் சித்திரம்..
கனவு..!
--------------------------------------
கட்டித்தொங்கப் போட்டாலும்
சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள் 
சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!
----------------------------------------------
சருகாகும் மலர்களே...
வரம் வாங்கி வந்தீர்களா..
சந்ததி வேண்டாம் என்று..!
---------------------------------------------------
கண்டெடுத்தேன்..
புதையலை..
உன் மனம்..!
------------------------------------------------
மௌனமாய்...
உயிர் போராட்டம்..
எறும்புகள்..!
-------------------------------------------------
உடலுக்குள்ளே...
என்றும் குழந்தையாய்..
மனம்..!
------------------------------------------------
திருமணம்..
இருமனக் கனவின்..
அரிச்சுவடி..!
----------------------------------------------------
கர்ப்பத்தை கலைகாதீர்..
விதையோடு பழங்கள்..!
வயிற்றிலா விதைப்பது..?
---------------------------------------------------
பாதத்திற்கு பாதுகாப்பு
கைகளுக்கும் தற்காப்பு
செருப்பு..!
-------------------------------------------------
நாளைய நெல்லுக்கு..!
நாற்று நடவு...இன்று..
பட்டினியோடு..!
--------------------------------------------------
உதிர்ந்த பூக்களை
வாரி அணைக்க
தென்னங்குச்சிகள்..!
-----------------------------------------------------
முகம் காட்டும் கண்ணாடியே..
என்ன கோவம்..என்மேல்..?
எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை....!
---------------------------------------------------------
உடலுக்குள்ளே..
விஷமருந்து ..
உயிரோடிருந்தது..
பட்டாசு..!

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நிஜங்கள்.....


இடுக்கண்
வரும்வரையில்
நிமிர்ந்து நிற்கும்...
அகந்தை..!
-------------------------------
வாழ்ந்து வீழ்ந்த
பசுமைகள்....
சருகுகள்..
-----------------------------------
போகுமிடம்
அறியாமல் நாம்..!
வாழ்க்கைப் பயணம்..!
------------------------------------
 


இனிய இல்லறத்தை
நகலாய்க் காட்டும்..
ஆலமரம்..
------------------------------------
தள்ளாடும் மனதோடு
நிமிர்ந்து நிற்கின்றான்..
காவலன்...
------------------------------------
ஆயிரம் கவலைகள்..!
ஒரே வடிகால்..
கண்ணீர்..
--------------------------------
ஆயுதங்கள்
தேவையில்லை
வார்த்தைகள் போதும்..
---------------------------------------
அகமும் புறமும்
அடுத்தவர்க்கு காட்டிடும்
பூதக்கண்ணாடி ..!
முகம்..!
-----------------------------------------
உன் நினைவுகள்
மின்சாரம் இல்லாமல்
என் அறிவை நிரப்பிடும்
அச்சு எந்திரம் ..!
-----------------------------------------
பெண் மனம்..!
எப்போதும்
தூங்கும் எரிமலை..!
--------------------------------------------
ஊடல்..
அடிக்கடி எரியுது
சொக்கபனை..!

புதன், 11 ஏப்ரல், 2012

காதல் எனும் மூன்றெழுத்து..!



இதயத்தை.....
உணர்த்திடும்
காதல்...!
--------------------------
உள்ளத்தை 
உரைகல்லாக 
காட்டிடும்
காதல்..!
---------------------------
உயிருக்கும்
உயிர்...தரும்
காதல்..!
----------------------------
இதயத்தின்..
இருப்பிடம்
காதல்..!
------------------------------
ஆயுசு
வளர்க்கும்
காதல்...!
-------------------------------
அஹிம்சையை
அழிக்கும்
காதல்..!
--------------------------------
மனதை
செதுக்கும்
காதல்...!
--------------------------------
நரம் பூ மலர
நீர்விடும்
காதல்..!
--------------------------------
காமத்தை 
பொசுக்கிடும்..
காதல்..!
-------------------------------------
தனியுலகு
படைத்திடும்
காதல்...!
-------------------------------------
உணர்வை
உணவாக்கும்
காதல்..!
---------------------------------------
இதயத்துள்...
உதய நிலவு 
காதல்...!
---------------------------------------
கயவனையும்
கண் துடைக்கும்
காதல்..!
__________________________
காமக்கடலை..
தென்றலாக்கும்
காதல்...!
------------------------------------------
விழிகளுக்கு
நகை போடும்
காதல்..!
-------------------------------------------
பாலுள் 
மறைந்த  நெய்....
காதல்..!
-------------------------------------------
பூகோளத்தை
பூக்கோலமாக்கும்..
காதல்..!
----------------------------------------------
மலர் மனத்தின் 
நெருஞ்சிமுள் 
காதல்..!
------------------------------------------------
மௌனமாய்
ஆர்ப்பரிக்கும்
காதல்..!
------------------------------------------------
இரும்பு இதயத்தை
இளகும் பாகாக்கும்
காதல்..!
-----------------------------------------------
தனிமையை
துரத்திடும்
காதல்..!
-------------------------------------------------
ஜீவனுக்கு
சூட்சுமம் 
காதல்..!
--------------------------------------------------
இயற்கையோடு
இணைந்தது
காதல்..!
----------------------------------------------------
இறந்த பின்பும்..
வாழ்வது
காதல்..!
----------------------------------------------------
துணிவைத் 
தருவதும்
காதல்..!
----------------------------------------------------
தன்னையே
மறக்கும்
காதல்..!
---------------------------------------------------
இதயத்தின்
புதையல்
காதல்..!
----------------------------------------------------
ஆறடியின்...
ஆணிவேர்..
காதல்..!
----------------------------------------------------
வாழ்க்கையின்
முதுகெலும்பு
காதல்..!
-----------------------------------------------
இறையவன்
தூது....
காதல்..!
--------------------------------------------------
உயிருக்கு
உற்ற நண்பன்
காதல்..!
-------------------------------------------------
இளமைக்கு
விருந்து...
காதல்...!
---------------------------------------------------
இளமை காக்கும்
மருந்தும்
காதல்..!
--------------------------------------------------
ஆறாவது..
பூதம்...
காதல்..!
---------------------------------------------
அண்டமே... அழிந்தாலும் 
நிலைத்திருக்கும்.....
காதல்...

சனி, 7 ஏப்ரல், 2012

மணம் ...தாங்கும்... பூக்கூடை ..!

மணம் ...தாங்கும்... பூக்கூடை ..!
ஹைக்கூ கவிதைகள்: ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி: திண்ணை.





மணம் கரைந்து….
உலர்ந்து உதிர்ந்தது …
செடியில்…பறிக்காத
மல்லிகை..!
——————————————
சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்..
மணத்தாலும்…விதவை தானே…
மல்லிகை…!
—————————————–
இரும்பென…. கருவண்டு..
காந்தமாக… மகரந்தம்….
பாவம்….தாமரை…!
———————————————
சேற்றில் நான்…!
வேலியாய்..நீ ..!
நான் மட்டும் பூஜைக்கு..!
தாமரை..!
————————————————
பூக்காட்டில் பாம்பு…!
நெருங்க மறுக்கும் அவள்…
கருநாக… ஜடையில்
என் நர்த்தனம்..!
தாழம்பூ..!
———————————————
ஈராறு ஆண்டுகளாய்…
காத்திருந்தது… தென்றல்… !
முதல் குறிஞ்சியின்…
வாசம் பிடித்து
தூது சொல்ல..!
————————————————
மழை கரைக்காமல்
குடை கொண்டு
மகரந்தம்…..காக்கிறது
நாகலிங்கம்…!
————————————————
சந்திரனைத்
திருடிக் கொள்ள
கண் திறக்கும்..
குளத்து அல்லி..!
————————————————-
வண்ண இதழில்லாமல்..
மகரந்தம் தாங்காமல்..
நானும் மலர்ஜாதி…
சாதித்தது.. மரிக்கொழுந்து..!
———————————————
நிறங்களில்…
ஏதுமில்லை..
வருந்தியது..
காகிதப்பூ..!
————————————–
ஆதவனைச்…
சரணடைந்ததால்…
கோவிலுக்குள்….
அனுமதியில்லை…
சூரியகாந்தி..!
——————————————–
இங்கும்..சிகப்பு விளக்கு…
தென்றலோடு…களிக்க…
இரவில் மலர்ந்து மணம்
வீசி அழைத்த மலர்….
இரவு ராணி..!
——————————————–
தத்துவம் சொல்லி
ஐந்து விரல் விரித்து…
உன்னதத் மகரத்
தண்டை..உயர்த்தியது…
செம்பருத்தி..!
———————————————–
மனம்.. மகிழும் நேரம்…
இதழ் விரித்து..சிரிக்கும்
நகைக்கும்… அணியாய்…
மணக்கும் மகிழம்பூ..!
———————————————–
முள்வேலி தாண்டி
நூல்வேலி தேடும்..
பட்டு ரோஜா..!
———————————————–
அன்றவள் வீசிய பூங்கொத்தில்..
அன்றலர்ந்த மலராய்…
சருகுகளிடையே….
வாடாமல்லி..!
—————————————————
பச்சைக்கடலுள்
நீல சிப்பிகள்…
வெண்சங்குகள்…
சங்குபுஷ்பங்கள்..!
—————————————————
மலர்களுக்குள்
நித்தம் தர்க்கம்..
யாரவள்…?
செந்தூரப்பூ…!
—————————————————–
மலர் நான் புனிதமே..
விதையில்.. ஏனோ…விஷம்..
அரளிபூக்கள்..!
———————————————–
நித்தம்… பூமிக்கு ..
சேலை…விரிக்கும்..
பவழமல்லி..!
———————————————–
என்னைப்போல்..
தூய்மையா?
உன்னிதயம்..!
நந்தியாவட்டை..!
———————————————-
நிறைகுடமாக..!
அரும்பி… மலர்ந்ததும்
ராஜவீதியில்..
ஜாதிமல்லி..!
——————————————
வெட்கத்தில்..
கன்னம் சிவந்தாள்…
பூத்தது…
குங்குமபூ..!
—————————————
அடர்வனத்துப்
புதையலோ…
பொன்மலர்
செண்பகப்பூ..!
——————————————
கார்மேகம் ..கலைந்தாலும்
மரம் சொரியும் பூ மழை..!
வீதியெங்கும் விரித்து
மணக்கும்..வெள்ளைமழை..!
————————————————
மலர்களின்..
வானவில்….
தேன்மலர்…!
————————————————–
பூக்களைப் பறிக்காதே…
ஏய்….பட்டாம்பூச்சி…!
எங்கே பாக்கற..?
உன்னைத்தான்…!