சோகமான...சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோகமான...சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சோகங்கள்...


 

இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப்  பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================
இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக  அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப் பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடலுக்கும் ....எனக்கும்..!




கடற்கரையோரம்...
பாறை மனம்...
பளுவோடு..
அடுக்கு சோக 
சிந்தனையில்
அக்கறை வரை 
அடித்து செல்ல 
ஆறாத ரணங்களை 
இழுத்து..ஆற்றுவாயோ 
அலை அன்னையே..!

தனிக்கடல் தான் 
நானும்...
யாருமில்லை 
எனக்கும்....!
சோகங்களை 
கேட்டு செல்லு..
என் மனதை 
தேற்றி சொல்லு..!

அவரைப் போல் 
கால் நனைத்து..
மணல் வீடு 
கட்டியாடி...
காதலை 
கொட்டி விட்டு..
காற்று மட்டும் 
வாங்கி கொண்டு..
தவிக்க விட்டு 
சென்றிடாதே..

என் மனதும் 
கொஞ்சம் கேளு..
இங்கும்  இதயம் 
கொஞ்சம் பாரு..
ஏக்கம் 
கொஞ்சம் தீரு..!
கண்ணீர் விட்டழுதே...
உப்புக்கடலான 
கதை கேளு..!

எல்லை தாண்டாமல்
எனக்குள் 
அமிழுகின்றேன்....
தவிப்பதும்..துடிப்பதும்....
கண்களில் 
கொண்டு செல்..!
பாம்பறியும் 
பாம்பின் கால்....
நீயறியாயோ...
என் மகளே..!

அடித்துச் 
சொல்லிச் சென்றது
சிற்றலைகள்...
காலடியில்...
சீறி பாய்ந்து 
சென்றது பேரலைகள்....
முகத்தடியில்...
பாசத்தோடு தடவி 
சொன்னது
மெல்லியலைகள் ..!
கதறி சொன்னது 
காதோடு...
சோக அலைகள்...!

பாறை மனம்...
அலையோசையில் 
மோதி சிதற..
பாரம் குறைந்து
பாரம் குறைத்து..
பாரம் ஏற்றி..
போராட்ட வாழ்வின்
அலைகள் மிக சிறிதாய்..
தன் பங்காய் 
இருசொட்டு
உப்புக்கடலுக்கு...
தானமாய்..!

திரும்பி நடந்த
சுவடுகளை தூரத்து 
அலையொன்று..
பாசத்தோடு அழிக்க..
எங்கிருந்தோ 
ஒரு அலைகை 
விழிநீரைத் 
துடைத்த திருப்தி...
கடலுக்கும் எனக்கும்..!
------------------------------
--------------------------------------