ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

.மனிதர்களை...மன்னியுங்கள்...!


வெண்ணிலவை எட்டிப் 
பிடிக்க ஏணிபோல்
உயர்ந்த தென்னைமரம்...!


தென்றலோடு கூடஆடிக்
களித்துக் கண்ணாமூச்சி
விளையாடும் தென்னங்கீற்று..!

குலை குலையாய்..
நீர் தாங்கி கைகளுக்கு
எட்டாது கவிஞர் மனதைத் திருடும்
தென்னத்தோப்பு மரங்கள்..!

புதிய மனிதா.....!
எவ்வளவு எளிமையாய்
என் உயரம் குறைத்தாய்..!

உயரத்தில் காய்த்த என்
தங்கங்களை..தரை நின்று தட்டி
வெட்டிப் பறித்தாய்...!

எனதுயரம் குறைத்து
உனதுள்ளம் சொன்னாய்...
வேதனையை தலை குனிந்தோம்..!

அன்று..தென்றலொடும் வான்
மதியோடும் விளையாடும்
எந்தன் முன் நீயே ...பாவமாய்..!

இன்றோ...உயரங்கள் காலாவதி
ஆகி காலாகிப் போன எங்கள்
முன்னே...நீயே ..பாவியாய்...!

எமை ஆட விடாது....அசைய விடாது..
தென்றலோடு கூட விடாது...குறுகிய
தென்னைகளே....
மனிதர்களை...மன்னியுங்கள்...!

"கிளிக்"

செல்லப் குழந்தை நீ...!
உனக்காகவே இத்தினம்...
மேகம் வானம் மறைத்தாலும்...
பள்ளி செல்ல ஆசை உனக்கு...
வண்ண ஆடையில் வேஷம்..!
திறமைகள் திரையிடாமல்
மேடையேறும் நல்வாய்ப்பு..!

கால் தவறினாலும்..மனம்
தளராமல் ஆடிவிட்டாய்...!
பலூனுக்கும் பஞ்சுமிட்டாயக்கும்..
அடம் பிடிக்கும் மனசு உனக்கு..!
மேடையில் அம்மா வேஷம்..
போட்ட குழந்தையம்மா நீ..!

நடக்கும்போது தலை நழுவி
விழுந்த ரோஜாவை அவசரமாய்
எடுத்துச் சொருகும் சமயோஜிதம்..!
தாமரைக்கு கால் முளைத்து
மேடையெங்கும் ஓடினாலும்..
சின்னக் கண்கள் என்னைத்
தேடித் தேடி...இமைக்கும் அழகு..!

உன் பெயர்..மேடையில் வாசித்து
சோப்பு டப்பா...நீ வாங்கியபோது..
என் மனம் எடுத்தது "கிளிக்"
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
குழந்தைகள் தினத்தில் எங்களுக்கும்
கிடைக்கும்.. இது போன்ற "கிக்"...!
===================================

பத்துமலை..!

முத்துக் குமரா...
பத்து மலையானே..
அங்கிருந்தே எமை .
இங்கு பார்க்கவா..!
அறுபதடி உயரத்தில்
திருக்கண்கள்..!

உன் காலடியில்
நித்தம்.. நிந்தன்
வேலடியில்
அண்ணாந்து சிலிர்த்து
மகிழும்
பக்தர் கூட்டம்...
சொர்கவாசல் உச்சிவீட்டின்
படிகள் என்று
ஏறுமோ
எந்தன் கால்கள்..
உந்தன் கோவில்...!

பொன் சிற்பம் நீ....
இங்கிருந்து காணும்
போழ்தே அங்கிருக்கும்
நினைவுகள்...!
குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன்
நீ இருக்க..
பத்துமலை பக்கம் .
உனைப் பத்திரமாய்
நிறுத்தி வைத்தார்...

எங்கிருந்தால் என்ன ...
நீ முருகா..!
நின் கருணைக்
கிரணங்கள்
புவிதனை சூழும்போது...!
உனக்கும் எனக்குமான

இடைவெளி.
மயில் கணக்கில்
நீளும்போது..
பூசலையாராய் நானும்...
தில்லையிலே
பூஜிக்கின்றேன் .....
அறிந்து கொண்டு..
அழைத்து செல்வாய்...
என்றாவது பத்துமலை..!
===============================

நிஜங்கள்.....


இடுக்கண்
வரும்வரையில்
நிமிர்ந்து நிற்கும்...
அகந்தை..!
-------------------------------
வாழ்ந்து வீழ்ந்த
பசுமைகள்....
சருகுகள்..
-----------------------------------
போகுமிடம்
அறியாமல் நாம்..!
வாழ்க்கைப் பயணம்..!
------------------------------------
 


இனிய இல்லறத்தை
நகலாய்க் காட்டும்..
ஆலமரம்..
------------------------------------
தள்ளாடும் மனதோடு
நிமிர்ந்து நிற்கின்றான்..
காவலன்...
------------------------------------
ஆயிரம் கவலைகள்..!
ஒரே வடிகால்..
கண்ணீர்..
--------------------------------
ஆயுதங்கள்
தேவையில்லை
வார்த்தைகள் போதும்..
---------------------------------------
அகமும் புறமும்
அடுத்தவர்க்கு காட்டிடும்
பூதக்கண்ணாடி ..!
முகம்..!
-----------------------------------------
உன் நினைவுகள்
மின்சாரம் இல்லாமல்
என் அறிவை நிரப்பிடும்
அச்சு எந்திரம் ..!
-----------------------------------------
பெண் மனம்..!
எப்போதும்
தூங்கும் எரிமலை..!
--------------------------------------------
ஊடல்..
அடிக்கடி எரியுது
சொக்கபனை..!

அவள் தேடுகிறாள்... 


 அலை கொண்டு தந்த
சிப்பிக் கடலுள்..!
அவளது முத்தை
சுமந்த சிப்பியை...!
தேடுகிறாள்....

கண்கள் பனிக்க
நெஞ்சம் பதைக்க
கால்கள் நடுங்க
கைகள் பதற..
தேடுகிறாள்...!
 
ஆயிரமாயிரமாய்....
கண் திறந்த சிப்பிக்காடு..
புதைந்தும்....மிதந்தும்...
கவிழ்ந்தும்..நிமிர்ந்தும்..
தேடுகிறாள்...

வெள்ளையாய் கருப்பாய்..
சிவப்பாய்...பழுப்பாய்..
பாசியுடை அணிந்தும்...
முழுதுமாய்...உடைந்தும்..
ஈரமணலில் கண் நிறைத்து...!
தேடுகிறாள்...!

தவற விட்டாளா?
தொலைத்து விட்டாளா?
எங்கு நழுவியதோ..! கருவிழி
தேடும் கண்ணாமூச்சி..!
தேடுகிறாள்...

அடுத்தொரு அலைவந்து..
கொண்டு போட்டதை
வாரிச் சென்றது,,,,!
கலைந்து காணாமல் போனது
சிப்பிக் கடல் மீண்டும் ...
முத்துக் குளிக்க...!
தேடுகிறாள்..!

இந்தமுறை....
கரையோரம்...வந்து
ஒதுங்கியது சங்கு ..!
சிப்பியென எடுத்தவளின்..
கைகளில் கம்பீரமாய்
சிரித்தது வலம்புரிசங்கு.!

விழிகளை உன்னில் தேடு...!வாழ்கையின் உயரம் காணும் வேட்கை உனது..!
வேங்கை மனது உயர்வுகளைத் தேடுது..!
தோழா... நீ வீணே தேடினால் கிட் டாது வெற்றி..
காணாது நீயும் துடிப்பாய், முயலாமல் நாளை..!

காணும் வெற்றி நாளை காலடியில் தட்டுமோ..!
உயர்வுகளைத் தேடினால் தோழா உனக்கு..
இரவல் தான் கிடைக்குமோ...அங்கங்கே..
இறைந்து தான் கிடக்குமோ...? காணாதே கனவு..!

உயர்வான மாற்றங்களைத் தேடி நீ தவிக்கின்றாய்..
உழைப்பின்றி கிட்டிடுமோ எதுவும் தான் இவ்விடம்..
விரும்பிடினும் மந்திரத்தால் மாங்காய் விழுவதில்ல
வான்வெளியில் கிட்டாதப்பா..உயர்வு மிகவும் உயரமப்பா..!

வெற்றி எனும் தொடுவானம் தூரத்தில்லில்லை..
மன ஆழம் உனக்கொரு எல்லை...! இலக்கோடு
வானத்தைப் பார்த்து வலையை வீசு..!
மேகத்தை சேர்த்து உன் ஏக்கத்தைப் போர்த்து..!

இலக்கு இல்லாத விழிகளில் விடிவு இல்லாது போகும்..
ஆசை இல்லாத மனதில் எழுச்சி இல்லாது போகும்..
வேட்டையாடு... உன்னுள் ஒதுங்கும் கறைகளை..!
கரையில் ஒதுங்கி எஞ்சிடாதே...மறைந்திடாதே..!

அறுந்த வலையை மீண்டும் பின்னி வாழும்
சிலந்தியிடம் கண்டுவிடு முயற்சி தனை..!
கூழாங்கல் இட்டு நிரப்பி தாகம் தணிந்த
காகத்திடம் கற்றுகொள் பொறுமை தனை..!

முயலிடம் ஆமை முதலிடம் கண்ட கதை
சொல்லுமே.. ஆமையின் மன இலக்கு..!
துகள் இனிப்பைத் தன் இருப்பிடம் கொண்டு
செல்லத் தயங்காது நடையிடும் எறும்புகளின் துணிவும்..!

முதல் உணவு தனக்கே என முடங்காமல்
சிறகு விரிக்கும் காலைப் பறவைகளின் தீர்க்கம்..!
காகிதம் தான் என்றாலும் .மெல்லிய நூலிழையில்
மேகம் தொடும் பட்டத்தில் காண் உன் இலக்கை...!

கண்ணி வைத்து கண்ணில் வைத்துக் காண்..!
உனக்கான வெற்றிப் பாதை மலர்விரியக் காண்..!
உனக்குள்ளே நிர்ணயமாய் நீ வகுத்தாய்..
வாராதது எதுவும் உண்டோ...? தேடிக் காண்..!

தோல்வி என்றும் தொடர்வதில்லை...துவள்வதில்லை..!
எட்டத் துடிக்கும் நெஞ்சுக்கு தோல்வி ஏற்றும் முதல் படி..
தொட்டிடும் தூரமே வாழ்க்கை வானத்தின்முதல் பிடி..!
முயன்றிடுவாய் தொடுவதற்கு...அடைந்திடுவாய் உன் இலக்கு..!

தொட்டதெல்லாம் பொன்னாக நீயொன்றும் மந்திரவாதியல்ல..!
உள்ளார்ந்த பயணம் தான் வெற்றிக்த் தாழ் திறந்து விடும்..!
மனதை அடக்கி முயற்சித்தால்...வாழும் போதே...
வானையும் தாண்டலாம்...வேண்டியதை நாடலாம்...!

நெஞ்சுக்குள் கனலும்...கண்ணுக்குள் அனலும் வேண்டும் தோழா..!
வேண்டியது கிட்டிவிட்டால் இறுதிவரை நிமிர்ந்திடலாம்...
சாதிக்கும் எண்ணத்திற்கே சோதனைகள் அலையலையாய்...!
எதிர்த்திடு..எழுந்திடு....சோர்ந்திடாமல் ..ஜெயித்திடு..!

எல்லை தாண்டி உன்னைத் தேடு...
உன்னுள் உந்தன் கண்ணைத் தேடு...
உச்சம் கரங்களுக்கு துச்சமாகும் வேளை..
உன்னால் உலகம் உருவாகும் நாளை..!

ராக மாலிகா....


ஆரோகணமாய் நின் மோகனங்கள்..
அவரோகணத்தில் . இறங்கி வந்து..
கைகுலுக்கி அழைத்ததே பூபாளம்..!


பல்லவி இல்லாத பாசுரங்கள்...முகாரியில் 
மயங்கிச் சிதறாமல் சரணமாய் 
தொடுத்தாய்..ஆனந்தம்...


மாயனுன் குழலின் கீதம் மோகனம்...
மீராவின் மனம் ஏந்தும் ஆனந்த பைரவி..!
தம்பூரா அழைக்குமோ தோடியில்....
ஓடிவா நொடியில். ஏந்துவாய்..கல்யாணி..


மத்தளங்கள் கொட்ட.வரி சங்கம் நின்றூத .
நாச்சியார் திருமொழி காம்போஜியைக் களவாட..
மதுசூதன் நீ இங்கு வரவேண்டும்..ஹிந்தோளமாய்
வேண்டுவன ..பொழியவே அமிர்தவர்ஷிணி..!


ஆண்டாளின் கண்ணனும் மீராவின் கண்ணனும்
மயங்கிய கீதங்கள் கௌரிமனோஹரி !.
பதினாறு ராகங்கள் சுகமான கீதங்கள்..
கண்ணனே..நின் செவியில் விழவில்லையோ..?

மறைந்து விட்டாள் ஆண்டாள் காலடியில்...
கரைந்து விட்டாள் மீரா....காமவர்த்தினியாய்...
கீரவாணி தொட்டு ஸ்ரீரஞ்சனியில் தவழ்ந்து..
மலைய மாருதமாய் கதறுகிறேன்...!


கார்மேகனே....தர்பாராய் நில்லாதே..!
வசந்தாவாய்...இறங்கி வா... குறிஞ்சியில்..
சரஸ்வதியாய் காத்திருக்கும் இவளும்..
மீராவும்...ஆண்டாளும் ஒன்றென..
நீலாம்பரியில் இதமாய்...இணைத்திடு..!


==========================================

கலங்கரைவிளக்கம்..

நீலக் கடல் அலையில்...
கம்பீரமாய்...தவழ்ந்து 
கப்பல்....பவனி வர..
அதனருகில்
துவண்டு எழும்
கட்டுமரம்..
துணை வர...இரண்டும்.....
சேரத் துடித்ததென்னவோ....
கரை...ஒன்றில் தான்..
பெருங்கடலில்...
பெரும்புயலாய்....
காற்று..சுழன்றடிக்கும்
நேரத்தில்..கப்பல் மட்டும்
செல்லும் வழி தவறி
திசை மாறிப்
போனதம்மா..

கலங்கரையும்.... 
கப்பலைக்
காப்பாற்ற இயலாது
கண்ணடித்து தன்
கடமையை புரிந்தது
என்றாலும்...
பெருங்காற்றும் சுழலும்
ஒன்று சேர்ந்து வந்தாலும் 
நேர்வழியில் பாதை மாறா
கட்டுமரம்...
கரை வந்து 
சேர்ந்ததுவே...தனிமையில்...!

தீக்குச்சிகள்..
சுமக்கும்
பயிற்சி
புத்தகப்பை...!
=====================

தாங்கும் பூமிக்கு...
மரத்தின் பரிசு
விதைகள்..!
=====================
பூவிதை...
தூவினேன்..
புதுமலருக்கு..!
=========================
எழுந்துவிட்ட பிறகும்..
இறங்க மறுக்கிறது..!
சோம்பல்.!
==========================
ஒருவர் நடக்கும் 
பாதையா..?
உன் மனது?
==========================
உன் முகத்தின் 
மூன்றாவது கண்..1
மூக்குத்தி..!
==========================
சொல்லிக் கொள்ளாமல் 
போகிறது...
நேரம்..!
===========================
நேற்று மானத்தைக் காத்தது
இன்று காற்றில் பறக்குது....
உலரும் உடைகள்..!
==============================
மனதின் 
குழந்தை
சிரிப்பு..!
================================
நெஞ்சுக்குள்ளே 
சுரங்கம்...!
அந்தரங்கம்..!
===============================
எவருக்கோ..?
சுற்றுகிறது..
செக்குமாடு..!
================================
உழவனிடம்
இல்லை
நிலம்..!
===================================
புள்ளுக்கும்
தாய்வீடு..!
வேடந்தாங்கல்..!
====================================
சுட்டால் 
தான்
செங்கல்...!
====================================
சுண்டலோடு...கோலாட்டம்..!
கொண்டாட்டம்...
கொலுபொமமைகள் ..!
=======================================சோகங்கள்...


 

இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப்  பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================
இதயத்தின்...இரு அறைகள்..!
சுகமும்..
சோகமும்...!
========================
சுக  அறை மூடினால்
திறந்து கொள்ளும்..
சோகம்....!
============================
ஆன்மா நசுங்கும்போது
பொங்கிடும்  வேகத்தோடு...
படைக்கும் காவியங்கள்...
============================
நடுக்கடலில்
ஓடம் கவிழ 
பயணம் பாதியில் ...!
==================================
அக்கக்கூ....
மரக்கிளையில் தனிப் பறவை,,,
மனமே.... நீயா?.. அங்கே..!!
=====================================
அப்புறம்...!!
ஒற்றை வார்த்தை போதும் 
அன்பை அப்புறப் படுத்த..!
====================================
பாலை மண்ணில்..
எங்கெங்கும் என் 
சுவடுகள்....!
============================
கதவருகே காது வைத்து
காத்திருந்தேன்..
காலடி சப்தம் 
கேட்கவே இல்லை...!
================================
வருகிறேன்...
என்று தானே
சென்றாய்....?
இன்னுமா...!
===============================
அழுதழுது
கன்னங்களில் 
நிரந்தரக் தழும்புகள்...
==============================
சித்திரகுப்தா..!
நான் மட்டுமா..?
உன் ஏட்டின்  விசித்திரம்...!
===============================
பொன் மாங்கல்யம்
கழுத்தில் பூட்டி..
இதயத்தை..
இரும்பு விலங்கிட்டுப் பூட்டுமோ..?
திருமணம்...!
=================================
எதிர்பார்ப்பெல்லாம் 
ஏமாற்றமாகும்போது
சாபத்தின் நிழல் 
தெரிகிறது..!
==================================
கனவுகளே..
கலைந்திடுங்கள்...
இந்த இதயம்
விற்பனைக்கு அல்ல..!
==================================
நேற்றுவரை 
நன்றாகத்தான் 
இருந்தேன்.....யார்...
கண் பட்டது.?
இதயம் நொறுங்கியது..!
===================================

காதல்...குயில்கள்
வாழ்க்கை வண்டியின்
ஓடும் சக்கரம்
காதல்..

வாய் திறந்த சிப்பிக்குள்
வந்து விழும் நீர் துளி
காதல்..

ஊமையின் 
குரல்
காதல்..

ஏழேழு ஜென்மத்தையும்
இணைத்துவிடும்
காதல்..


பூர்வ ஜென்மத்தை
உணர்த்திவிடும் 
காதல்...!

நிறங்கள்  
காணாது
காதல்...!

குகை மனதுள்
கோடி தீபம்
காதல்..!

புத்தகங்கள்
தேடாது...
காதல்..!

அறிவை 
ஆட்கொள்ளும் 
காதல்..!

இருப்பதையும்
இல்லாததையும்
இணையாக்கிடும்..
காதல்.!

பிரிந்து சென்றாலும்
பிரிவதில்லைக் 
காதல்..!

தொலைக்கும்
தேடும்..
கண்டெடுக்கும்
காதல்..!

இறைவன் விரித்த
மாயவலை..
காதல்..!

அறிவும்..
அறியாமையும்..
காதல்..!

இல்லாத இதயத்தை 
நோய் கொண்டாட வைக்கும்
காதல்.!

பொருளும்..போகமும்
அறியாது
காதல்..

சித்திரம் (பொய்)
பேசும்
காதல்..!

விசித்திரப் 
பேய்..
காதல்..!

ஔவியம் 
காணாது
காதல்..!

நாணலாய்
மாறும்
காதல்..!

காற்றோடு 
வைரஸ் 
காதல்..!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும்
காதல்...!

கோபத்தைக் 
கொன்றுபோடும்
காதல்..

எதிர்காற்றை 
தூசியாக்கும் 
காதல்..

மனதை
கண்ணாடியாக்கும்
காதல்..!

ஆரம்பமும்
முடிவுமற்றது
காதல்..!

இறப்பில்லை
கொல்லப்படுவதில்லை..
காதல்..

ஒரே வாசல் 
ஓர் உணர்வு..
காதல்..!

ஆன்ம ஞானத்தை 
மாயத்திரையிட்டு
மறைத்திடும் 
காதல்..!

பஞ்சிகரணத்தை 
இணைக்கும்
காதல்...!

நெல்லோடு...
உமியிது
காதல்..!

அஞ்ஞானம் 
விஞ்ஞானம் 
அறியாது 
காதல்..!

அறியாமையின்
தோழன் 
காதல்..

ஆத்மஞானியின்
பரம எதிரி
காதல்..!

சித்தம் 
அடக்கும்
காதல்..!

உருவில்லாமல்
உருவம்  அழித்திடும்
காதல்...!

ஞானக்கண்..
ஊனக்கண்..
வேறில்லை..
காதல்...!
இதயத்தின் 
ஊக்கபானம் 
காதல்..

உள்ளத்தின் 
அருமருந்து
காதல்..

தள்ளியிருந்தாலும்
உள்ளிருந்து பார்க்கும்
காதல்..

சொல்லாததை 
மனதால் தொட்டுணரும்
காதல்

அறிவை
பூட்டிவிடும் 
காதல்

முகத்தில் 
ஓவியம் தீட்டும்
காதல்

அறியாதவர்க்கு
தெரியாத நட்சத்திரம் 
காதல்

இதயமே...
தேன்கூடு..!
காதல்...!

இயற்கையோடு 
பேசும் 
காதல் !

இசையோடு 
சங்கமிக்கும்
காதல்..

உணர்வுகளை
குழந்தையாக்கிடும்
மாயாவி
காதல்...

கண்களில் 
நிழலாய்க்
காதல்.

காலடியில் 
சொர்க்கம்
காதல்...!

புதிதாய் 
பிறவி...
காதல்...!

தனி உலகம்...
இரு(இரு)-தய சங்கமம்
காதல்...!

வெட்டவெளியில்
இரட்டைப் பறவை..
காதல்..!

நுழைந்ததும் 
குருடாக்கும் 
காதல்....!

உலகத்தை 
பந்தாய் தூர வீசும் 
காதல்...!

கண் நுழைந்தால் 
நிஜமில்லை
காதல்...!

சிந்தையைத் 
துளைப்பது 
காதல்..!

அண்டத்தின் 
அச்சாணி 
காதல்..!

இதயத்தின்
துடிப்பு
காதல்..!

உள்ளிருந்தாலும்
உரக்கப் பேசும்
காதல்..!

மதத்தையும் 
மிதிதிடும் 
காதல்..!

புல்லையும் 
புல்லாங்குழலாக்கிடும் 
காதல்..!

இரும்பை தீயின்றி 
மெழுகாய் உருக்கிடும்
காதல்..!

மருந்திடாமல் 
மயங்கடிக்கும்
காதல்..!

வெற்றுப் பேனாவிலும்
கவி எழுதிடும் 
காதல்..!

காலத்தை 
கடந்தும்  பேசும்
காதல்..!

காமதேனுவின்
அற்புத மடி
காதல்..!

உயிரோடு 
கொன்றுவிடும்
காதல்...!