வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை பிறந்தாள் .

Image result for vishu kani images

ஹேவிளம்பி வந்ததே 
வாசல் தோறும் தென்றலாய் 
கோலமிட்ட கோதைகள் 
மனம் நிறைந்த ஆவலில் 
அவல் தேங்காய் பாயசம் 
அத்தோடு மாம்பழம் கூட்டவே 
மாங்காய் புளிப்பும் 
தேனின் இனிமையும் 
வேம்பின் பூ கசப்பும் கூட்டிட்ட 
அறுசுவை பச்சடி 
வளமைகள் சேர்ந்திடவே 
சுவையாகச் சமைத்திடுவாள் 
கொண்டவன் குழந்தைகள்
உறவினர் யாவர்க்கும் அன்புடன் 
பகிர்ந்தளிப்பாள் - ஆசைகள் 
தோன்றாத மனத்துள் 
பல்லாண்டு இப்படியே 
வாழ வைக்குமாறு 
மனதார ஆசையாக 
வேண்டிக் கொள்வாள் 
நிறைந்த கனிகள் 
குவிந்த பொற்காசுகள் 
மணம் மிக்க மலர்கள் 
முகம் காட்டும் கண்ணாடி 
கண் திறந்தால் சௌபாக்கியம் 
காலங்கள் கடந்தும் 
இது ஒன்றே சாஸ்வதம்...!

2 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

  கடவுள் கண் திறந்தால் சௌபாக்கியம் :)

  பதிலளிநீக்கு
 2. சித்திரை முடிவதற்குள் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்து விட்டேன். ஹி ஹி ஹி ஹி

  இறைவன் அருள் இருந்தால் என்றும் சௌபாக்கியம்.

  வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ

  பதிலளிநீக்கு