திங்கள், 7 மே, 2012

எங்கே....அவள்...?



காலைப்பனி படர்ந்து..
ஜன்னல் கண்ணாடியூடே 
எட்டிப்பார்த்தது.....
எங்கே...அவள்..?

சமையலறையும்....
திறக்காத குழாயும்...
குழப்பத்தோடு 
காத்திருந்தது...
எங்கே....அவள்..?

வாசற்படியும்..
வெறுமையாய்...
காத்திருந்தது...
கோலம்.....போட...
எங்கே...அவள்..?

அறைக்குள் 
சிக்கிய காற்று...
தனிமையில் 
தேடியது...
எங்கே...அவள்..?

நிசப்த வீடெங்கும்
நிம்மதி இழந்தது..
தவித்து கனத்தது..
எங்கே...அவள்..?

பால்கனியில்....
பழகிய காகம்.....
பசியோடு..கரைந்து 
கரகரத்தது...
எங்கே...அவள்..?

வாசற்படியில்... 
வாலாட்டியே...
தவமிருந்தது...தெருநாய்...
வருவாளா....உணவுவைக்க..
எங்கே...அவள்...?

சொல்லிவிட்டு  
போகலையே......
இரும்புப் பூட்டும்...மௌனமாய்....
மீண்டும்...வாடகைக்கு...
அவளே....வருவாளா?
காத்திருந்தது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக