திங்கள், 7 மே, 2012

அகல் விளக்கு...


பாவை எனக்காக  
ஏற்றினாய்...
அகல் விளக்கு....!
ஏற்றிய சுடர் விளக்கு...
நெஞ்ச மெல்லாம் ஒளிர...
ஒளியால் அழகு மிளிர...

தென்றலோ....கடும் புயலோ..
இடியோடு மழையோ...
வேண்டாதவர்....
திருஷ்டிக் கண்ணோ ..
வேண்டியவரின் ...
பொறாமை மனதோ...

இடைப்பட்டு ஊதி.....
சுடர் தவித்து அணையுமோ?
அணையாமல் காப்போம்...வா..!
அன்பு ஜோதியை..
திரி கருகாது...
நெய் குறையாது..
சுடர் சுருங்காது...!

ஒரு பக்கம் உமது.. கரம்..
மறு பக்கம் எனது கரம்...
அகலைக் காக்க....!
நீயும் ..நானுமாய்...
நம் விளக்கும்.. ஏற்றட்டும்...
ஆயுள் காப்பீடாய்...
ஆயிரம் விளக்குகளை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக