திங்கள், 7 மே, 2012

உறக்கம் இறந்துபோகும்....!



நீ....
என் கண்ணுக்குள் 
நுழைந்து தாளிட்டாய்...
வந்த வேகத்தில்..
என் மனம் ...
புகுந்ததும்...
புள்ளியாய் நிமிடத்தில் ..
மறைந்து சென்றாய்..!
கண்டதும்..
உகுத்தது தாரையாய்...
கண்ணீர் கோடுகள்..!
அது உனக்குத் தெரியுமா?
எதுவும்..... 
உனக்குத் தெரியாது.....!

நீ ...!
என் மனதைத்  
தீண்டிச் சென்றாய்..
அந்நொடியில
மனம் மண்டியிட்டது..!
மனத்தின்  எண்ணமும்  
தலைகீழானது..!
வருவாய் ....
என காத்து 
இன்னும்  வீட்டின்..
ஜன்னல் கதவோரம்
என் விழிகள் ...!
நீ மறைந்த 
திசை வழியே..!
அது உனக்குத் தெரியுமா...?
எதுவும் உனக்குத் தெரியாது....!

நீ...!
என் மௌனத்தை 
கலைக்கிறாய்..!
உள்ளம் முழுதும் 
உனக்கான பதிலாய்..நான்..!
எனக்குள் விடாது பேசுகிறேன்..!
உன்னிடம்....பதிலில்லை ..!
காத்துக்  காத்து..
ஊமையாகிறேன்...!
அது உனக்குத் தெரியுமா...?
எதுவும் உனக்குத் தெரியாது....!

எதுவுமே.....
தெரிந்து கொள்ளாமல்...
நீயும்....
சென்று விட்டாய்..!
எதையுமே....
தெரிவிக்காது.....
நானும்....
வந்துவிட்டேன்....!
இருந்தும்...
உயிருள்ள...எண்ணக்குவியல் 
என்றாவது....
ஒருநாள்...
தட்டி கேட்கும்.....!
அப்போது.....நம்...
உறக்கம் இறந்துபோகும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக