மனதுக்குள் ஒய்யார ஆட்சி...
ஓங்கிய வேலாக...சிம்ஹாசனத்தில்..
நன்மையையும்..தீமையும்...
உந்தன் குறிப்பேட்டில்..நித்தமும்
நானறியாமல் குறிப்பெடுக்கும்
விசித்திர குப்தன் நீ...
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும்
விதமாய்...மறைந்தே வாழ்கிறாய்..
நின் தூய ஒளியின் நிழலில்..நானா..?
எந்தன் தூய வாழ்வின் நிழலில் நீயா?
என்றோ..முடியும் எந்தன் கதைக்கு
குற்றப் பத்திரிகை உன் கரத்தில்...
புண்ணியத்தையும் கணக்கில்
வைத்துக்கொள்....தேவைக்கு..!
அக்கரை..எனை சேர்க்கும் அக்கறையில்..
தூதுவனாக மட்டும் நீ இரு...தொடராதே..
என்னுள் நெய்யாய் உருகி விடு..
என் பிறப்பின் ஒரே சாட்சியா...நீ
மனதின் மாயா மாயாவி...
பிரபஞ்ச ரகசியன்....உனதாட்சியில்
உறங்கும் காவலனாய் நானோ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக