சாசனம் எழுதாத
அடிமைகள்..அன்று..
பெண் தனி முத்திரை..!
சுமைகள் .தந்துவிட்டு...
சுமைதாங்கி என்று
பெயரிட்டால்....!
அடுப்போடு ஊதுகுழலாய்..
கரிபடிந்த புடவையில்
உருக்குலைந்த தாய்மை....!
அரை டஜன் குழந்தைகளும்..
கால்வயிறு உண்டு..
வீழ்ந்தவர் சென்ற இடம்..!
அடங்கிக் கிடந்த அடிமைகள்..!
சட்டத்துக்குள் அடங்கிவிட்டு...
புனர்ஜென்மம் ஏகி வந்தவர்கள்!
இவர்களின் வாரிசுகள் நாங்கள்..!
சாசனத்தை மாற்றி எழுத ..
சொல்லிவிட்டு சென்றவர்கள்..!
உலகை உருவாக்கும் உலைகள்..!
விண் வரை முட்டும் புயல்..!
அடிமை எண்ணம் அகன்றவர்கள்..!
நாணயத்தின் இரண்டு பக்கமாய்
புலியும்...பூனையும்...உறங்கும்
பெண்ணெனும் இதயக் கூண்டு..!
பாரதியின் அச்சுக் கனவுகளை
இச்சை துறந்து காக்க வந்த
மீசை மறைத்த புதுமை பெண்கள்..!
அறிவுக்குத் தாழ் போடாமல்..
அன்புக்கு வேலி இடாமல்...
கருணை கொண்ட இளம்பெண்..!
தோற்றங்கள் வெளியில்..பலாவாய்..!
மனதுள் கனிந்திடும் அன்புச் சுளைகள்..!
நெருப்பு வளையங்கள் அவளுக்குள்..!
முண்டாசும்.. மீசையும்... கனல்கண்ணும்..
முகத்திரையாய்..வேலிகள் நெருங்காமல்..
தன்னையே காக்கும் பெண் கவசங்கள்...!
தாயாய்..தமக்கையாய்....தோழியாய் ..
பகிர்ந்திட்டால்..தென்றல் பெண்கள்...!
வானத்து நிலவு சிறையிருக்காது..!
மண்ணும் பொன்னும் பெண்ணும்...
தவறாய் அழைத்தால் அழிவுப்பாதை.!.
சரியாய் கடந்தால் ஆக்கப்பாதை...!
------------------------------ ------------------------------ -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக