திங்கள், 7 மே, 2012

அவையகத்து அஞ்சா தவர்......!


வள்ளுவர்  படைத்த  காமதேனு...
உயர் சிந்தனை தோய்ந்த தூயமது...
முப்பாலை....பாலை.. மனத்துள் 
கொட்டிக் களித்தார்.... ஈரடியார்....!

ஈரடிக்குள் ஏழுலகைப் பொதிந்து 
ஓலைக்குள் ஒளித்து..ஒளிர்ந்தார்...!
மறை போற்றும்  தாமரையாய்....
புகழுக்குப் வளையாத  தென்னவன்...!.

அறிவுரை இல்லையது அறவுரை.....
குறள்நெறி கண்ட புலவனாம்....
கட்டுத்தறி  கொண்ட வள்ளுவர்...
எளிமையில் ஏற்றினார் இல்லறத்தை..!

ஏர்... பிடித்தெழும் வார்த்தைகள்..
கருத்தோடு.. போர்தொடுக்கும் .. அறிவு..
என்றென்றும்.. குறைவில்லா.. மகசூல்..
கலப்பையை தளர்த்திக் கையிலெடுத்தார்...!

அமுதுகடைந்த  பெருமானே...இல்லறத்தில் 
வாசுகியை நேசகியாய் இணைத்து..
இன்பக் குறளொளி போற்றினாய்...
நின்றன் வாக்கெங்கும் செல்வாக்கானது...!

கோடிப் புலர்வர்கள் கொடுத்திட்டாலும் 
பற்றுவதெல்லாம் நின் திருக்குறளே...
எத்துணைப் பட்டங்கள் பெற்றபோதிலும்
தெய்வப்புலவர் வள்ளுவர் போலாகுமோ..?

மன்னர்தலை மாறிக் கடந்திடினும்...
ஆட்சிமாறி ஆண்டுகள் உருண்டிடினும்..
அழியாப்புகழின் ஒரே  சாட்சியாய்..
உரைகல்லாய்....பொற்றாமரை....நிஜமென்கிறது...!
=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக