எனது..ஆன்மாவின்
ஜீவ ஊற்று....!
என்னுயிர் இசைக்கும்
இன்னிசை கீதம்...!
நானும் வாழ்ந்ததன்..
ஒரே சாட்சி...!
உள்ளக் கடலின்...ஓயாத
உல்லாச அலைகள்...
என் கனவைத் துரத்தும்
வண்ணத்துப்பூச்சி...
என் அறிவின்...ஆக்கத்தின்
எதிரொலி...!
என் அறியாமையை..அகற்றும்...
பேனாமுனை...
இதய மேடையில்
அரைத்தெடுக்கும்..
சந்தனக் கட்டை...
என் நோய்தீர்க்கும்
அருமருந்து..!
என் கவிவானின் நம்பிக்கை
நட்சத்திரம் நீ...!
வாழ்ந்துவிடு..என்னோடு....
உள்ளிருக்கும் கவிதை நீ...!
நீ என்னை விடுவதும் இல்லை...
நீ இல்லாது விடிவதும் இல்லை...
எளிமை இனிமை
பதிலளிநீக்கு