வியாழன், 10 மே, 2012

அடிக்கரும்பு வாழ்க்கை.


பசுந்தோகை வாகை சூடி
வழி பிறக்கக் காத்து நிற்கும்..
பொங்கலோடு கூட நிற்கும்
மணமடந்தை..கரும்பு மகள்....!

தேன் சாரை ..கூட்டுக்குள் 
அடைத்திருந்துதும் தானறியாமல்..
உள்ளிருக்கும் சுவை புரியாமல்..
நிமிர்ந்து நிற்கும் கரும்பு...மகள்..!

தோகைவிரித்தாடிடும் .
சக்கரைக் கரும்புக்  காடுகள்...
உனைக் காப்பதன் பாடு...
நட்டவன் அறிவான்...உன்
காவலின் கெடுபிடி..!

இரவோடு இரவாக...வேரோடு 
உருவும் ஒரு கூட்டம்..
வெட்டிச் சாய்த்து கட்டிக் 
கொண்டுபோகும் ஒரு கூட்டம்...!

மதம் பிடித்த யானையாக.......
ஏறி மிதிக்கும் மிருகக் கூட்டம்..
ஒடித்து அழகு பார்க்கும் சில 
மனிதர் கூட்டம்...!

இனிமையாய் இருப்பதில் தான்
இவ்வளவு ஆபத்தும்...!
இருந்தும்...கண்டார் கைபடுமோ...?
மயிலின் தோகையல்ல...கரும்பே..
உனது வீரப் போர் வாள்கள்..!


தொட்டவனை ..வெட்டிவிடும் 
பச்சை ஆயுதம்.....கீறி அறுக்கும்...
இருப்பினும்......உன்னை 
கொள்ளையடிப்பார்..
ஆலையிட்டு..கொதியில் போட்டு 
அச்சுப் பதிப்பார்...!.

பல் சக்கரத்தில் பிழிந்தெடுத்து
சாராய்... குடிப்பார் !
வெறி பிடித்து கடித்து மென்று
ருசி உறிஞ்சுவார்.....!
.
வெட்டி வெட்டி இறுதியாய்...
கட்டையை....வீசிடுவார்....
குப்பைக் காட்டில்...காக்கும் தோகை 
கையாலாகாது...அடிகரும்பின் ருசி 
யாரும் அறியாது..
வீணாகத் தான் போகுமே...!

சக்கையூடே....இளம்பாகு..!
உள்ளிருக்கும் இனிமை
வழியாது தெரியாமல்
மூடும் உன் மர .முகமூடிக்கண்கள்.....!

பசுவுக்குப்.....கொம்பும் குளம்பும்..!
தந்த இறைவன்...
உனக்கு தோகையும்...தோலும்...!
தந்தானோ?
கரும்பு வாழ்வும் கசங்கிப் போவதோ..?
இருந்தும் நீ தான் இரும்புப் பெண்..!
=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக