திங்கள், 3 ஆகஸ்ட், 2015

ஆனந்த வேளையிது….!,



மணமேடைப் பயணமது
தொலை தூரமில்லையென
நாணமுகத் தாமரையும்
சற்றே குனிந்து சிவந்திட
காற்றலைந்த கார்கூந்தல்
ஏதோ ரகசியம் சொல்லிட
மடியேந்திய மரகதத்தை
மோகனத் தளிர்விரல்கள்
மௌனத்தந்திகளைத் தழுவிடவே
வெண்கல மணியிசை
ஸ்வரத்துடன் நழுவிட
இசைமணத்தை ஓடிவந்த
தென்றலும் அள்ளிச்சென்றிட
அசைந்தமனம் கனவுகளுள்
இசைந்து கரைந்து
சிறகுகள் விரித்திட
கன்னியவள் மனமேடை
கண்ணிறைந்த சிருங்காரம்
காலமெனும் மணல்மேடையில்
உயிர்த்தந்திகள் மீட்டெடுக்கும்
கல்யாணராகங்கள் இசைத்திடும் 


ஏகாந்தப் பொழுதின் 
ஆனந்த வேளையிது….!,

1 கருத்து: