புதன், 25 ஜூலை, 2012

பாலா திரிபுரசுந்தரி...

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=b53b4d0fe5&view=att&th=138bf04a5c06d2b3&attid=0.1&disp=inline&realattid=f_h52n4yz10&safe=1&zw&saduie=AG9B_P9tYrnQP8YFRqF0o8EVSLi-&sadet=1343234587851&sads=dZIYwLozDVDNG4t_T4gwcgOzpk8&sadssc=1

(பாலா இதை நான் எழுதவில்லை....நீயே என்னுள் வந்து எழுதிக் கொடேன்....
என் பாவை விளக்கில் உந்தன் பதிவும் இருக்க வேண்டாமா....? வா....என் தங்கமே..!)

முத்து மகள் நின் பாதம்
பவழப் பட்டைத் தொட்டதும்...
மங்கலங்கள் யாவும் உந்தன்
பட்டுப் பாதம் கண்டதென்ன..!

வெள்ளைக் கமலம் நிந்தன்
பொற்பாதம் தாங்கி மகிழ..
மகிழம்பூ விரல்களில்...மருதாணி சிரிக்க..
பொற் சிலம்பும் ....தண்டையும்..

நீ வந்திறங்கும் நேரம் சொல்லி
கலீர்...கலீர் என அழைக்க...
தொழுதழுது 
நிற்கின்றேன் 
குஞ்சலமே...கோமளமே...


தாமரைத் தளிர் விரல்கள்..
ஞானம் சொல்லுதம்மா...
நிலை உயரும் போதெல்லாம்....
தலை தாழ்ந்திடல் வேண்டுமென்று.

மரகதமே....மேனி தனில்
வைரங்கள் கொண்டருள்வாய்..
கௌஸ்துபம்  சுவடி கொண்டு
ஞானம் தந்தருள் நீலமணியே..!

பாலா உந்தன் மதி முகத்தில்..
சுந்தரம்  ஒளிரக் கண்டோம்...
காந்தக் கடல் விழிக்குள்
காருண்யம்
மையகலக் கரையாய்..

ஆடும் ஜிமிக்கியில் புவனம் சுழல
ஏகாந்த மௌனம் பூரணி மனதில்
இருள் வானில் சந்திர சூரியனும்
மதி ஒளி மயங்க விழி ஒளி ஒளிர

கன்னிச் செல்வமே எங்களைக்
காத்திடம்மா பவானி...நித்ய
கல்யாணியாய் நெஞ்சினில்
துஞ்சுவாய் சர்வ மனோகரி...!


நானல்ல...நீயம்மா..!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக