சனி, 21 ஜூலை, 2012

தெய்வப் புலவர் திருவள்ளுவர்..


காமதேனு சுரந்த அமுதெனக்
குறள் பால் ஈந்த வள்ளுவன்...
விண் வரை எட்டிய புகழை..
மண்ணிலே குறள் ஒலியாய்..
திருப்பித தந்த திருவள்ளுவர்..!

ஈரடிக்குள் எளிமையை சமைத்து
வாழும் கலையை அதற்குள் பொதித்து
முப்பாலும் மயங்கும் ஞானப்பாலாம்
முதுமைக்கும் கூடக் கைதடியாம்...!

எட்டுத் திக்கு விரிந்த தாமரையாம்...
மறைகள் போற்றும் நிறை புலவனவன்
ஏழே வார்த்தையில் ஈரேழுலகை
சுருக்கி மனத்துள் திணித்தவர்..

வரம் பெற்றுப் பிறந்தவர்....இறவா...
வரம் பெற்று வாழும்...இறைவனார்..
தேன் சுவை அறியா தேனீயாய்
பொற்கிழியை தானம் செய்தாயோ..

யுகங்கள் கடந்தாலும் உந்தன்
திருமுகம் குறளின் விலாசமே..
ஜென்மங்கள் பல கடந்து நிற்கும்
திருக்குறளுக்கு அதுவே ஆதாரமே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக