சனி, 21 ஜூலை, 2012

கொட்டித் தீர்த்தது மனவானம்..!

கிராமத்துப் பெண்..

வானம் போலே நிரந்தரமாய்..நீ..!
உச்சந்தலையில் உன்  உள்ளங்கை
ஸ்பரிசம் சிலிர்க்க..!
வானமே ஒன்றுமில்லாத பொய்..
எனப் புரிந்ததபோது..வானும் 
நீயும் பொய்யாகிப் போனது
எனக்குப் புரிந்தது..

நம்பவைக்க வார்த்தையோடு
நட்புக் கொண்ட நீ..
ஏமாற்றவும் அதே
வார்த்தைகளைத் தேடும் பொது
நான்.....பொறுத்துக் கொள்ள
மனமெங்கும் காயங்கள்..



உள்ளங்கை ஸ்பரிசம்..இன்று..
இடிபோல் இறங்க...!
கண்ணுக்குள் மின்னல்...
மனம் குமுறக் கொட்டித்
தீர்த்தது மனமேகம்..!
நான்கு சுவர்களுக்கும்
சிலிர்க்க கைகொட்டிச் சிரித்தது...
அன்றே சொன்னேனே...கேட்டியா..?




ஜெயஸ்ரீ ஷங்கர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக