ருசியான பாகாரே பைகன் செய்யும் முறை.
(Baghare Baigan Recipe)
தேவையானவைகள்:
அரை கிலோ குட்டி கத்திரிக்காய்கள்
சிறிய வெங்காயம் - 4
இஞ்சி - சின்னத் துண்டு
பூண்டு பல் - இரண்டு
தனியா விதை - 2 ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 5 ஸ்பூன்
நிலக்கடலைகள் - 8 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
கொப்பரைத் துருவல் - 4 ஸ்பூன் அளவு
மெந்தியம் - அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் அளவில்
வெல்லம் பொடித்தது - ஒரு ஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
கருவேப்பலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - இரண்டு கரண்டி அளவில்
செய்யும் முறை :
- புளியை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து கசக்கிச் சாறு எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- குட்டிக் கத்திரிக்காய்களை காம்பு நீக்கி அங்கிருந்து குறுக்கே இரண்டு இன்ச் அளவுக்கு + மாதிரி
வெட்டிக் கொள்ளவும். அடி வரை வெட்டக் கூடாது. (எண்ணைக் கத்திரிக்காய்க்கு வெட்டுவது போல வெட்டவும்) - வெங்காயத்தை சின்னதாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- மிதமான சூட்டில் : தனியா, எள்ளு, நிலக்கடலை, சீரகம், கசகசா, கொப்பரை துருவல், மெந்தியம் அனைத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- மேலே சொன்ன வறுத்து வைத்த மசாலாவுடன் , வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, வெல்லம் அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை பாதியாக்கி அதை புளித்தண்ணீரில் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- மீதி விழுதை ஸ்பூனால் எடுத்து குட்டி கத்திரிக்காய்களின் உள்ளே அடைக்கவும்.
- அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கருவேப்பளையைப் பொறித்து கொள்ளவும்
- மசாலா அடைத்த கத்திரிக்காய்களை எண்ணெயோடு சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்,அத்தோடு கூட
- புளித்தண்ணீரில் கரைத்த மசாலா விழுதையும் மெல்லக் கலந்து வேக வைக்கவும்.
- தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். மூடியைப் போட்டு மூடி விட்டு, அப்பப்போ சிறிது கரண்டியால் கிளறி விடவும்.
- கத்திரிக்காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வாணலி ஓரம் மிதந்து வரும் பதம் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
- கொத்தமல்லித் தழைகளை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
- சூடாகப் பரிமாற்ற ருசியான பகாரா பைகன்.
- சாதத்திற்கும், ரொட்டிக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக