வியாழன், 26 ஏப்ரல், 2012

விதையின் அறுவடை...

 

கோயில் சேவல் கூவல் கேட்டு
இரவியின் புரவிகள் கால் மேவ.
புவியெங்கும் ஒளிமழை...!

வயல் வரப்பில் பாத்தி கட்டி
நீர் பாய்ச்சும் ஏணிகள்....!
சேற்றில் கால் புதைத்து
நடவு இடும் கருவைரங்கள்..!

ஏரின் பாரம் தோளில் 
சுமந்தாலும் நிமிர்ந்த 
இரும்பு மனிதன்..!

அவனது கலையந்தனில் கேழ்வரகு
நித்தமும் கஞ்சியாய்க் காத்திருக்க..
அறுவடை செய்வது அரிசியை..!

விதை நெல்லை விதைத்து
போகம் விளைய வேண்டுமென ..
வேண்டி நிற்கும் விவசாய் அவன்...!

ஏக்கர் ஏக்கராய் விளைந்த நிலம்...
வானம் பார்த்து ஏங்கும் போது...
நஞ்சையும் புஞ்சையும் கேலியாய்..!

நாகரிக மனிதனாய்....காரில் வந்து...
தன் கனவை... நிலத்தில் சுயநலமாய் .. 
திட்டமிட்டு.... பணத்தை  விதைக்க ..!

வெள்ளந்தி விவசாயி....ஏர் பிடித்த 
தோளின் பாரம் துறக்கும் இரும்புமனிதன்..
அடுக்குமாடி தீப்பெட்டி வீட்டுக்கு....!

குடிசையை அடகு வைத்து ஏரைத் துறந்து 
தேர் ஏறும் கனவோடு....சுயநலப்.. 
பிடிக்குள் தன்னையே... விதைக்கிறான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக