பசியைப் போன்றதொரு
நெருப்பும் உண்டோ...
பசியைத் விழுங்கும்
நெருப்பும் உண்டோ...?
சாம்பலாய் வாழும்
வித்தகனே...!
கண்ணீரைப் போன்றதொரு
கடலும் உண்டோ....?
மனதுள் கடலை
அடைத்தவனே....!
உள்ளுக்குள் ஊஞ்சலாடும்
காற்றும் உண்டோ..?
வெளியில்...
இறங்கி விட்டால்
உலகப் பற்றும் உண்டோ..?
நிறுத்தி வைத்த நாயகனே..!
ஆகாயத்தில்.. அறிவின்
சுவடு தெரிவதுண்டோ...?
ஆகாயத்தை அறிவில்
சுருட்டிப் ரசித்ததுண்டோ..?
ஆகாயத்தில்.. அறிவின்
சுவடு தெரிவதுண்டோ...?
ஆகாயத்தை அறிவில்
சுருட்டிப் ரசித்ததுண்டோ..?
மனிதருக்குள் மறைத்த
மாணிக்கமே...!
கலப்பையாய் அவன்
தன்னை நினைப்பதுண்டோ...?
மனமே...அறிவை...
உழுதிடுமா...?
கலப்பையாய் அவன்
தன்னை நினைப்பதுண்டோ...?
மனமே...அறிவை...
உழுதிடுமா...?
உள்ளத்தில் உறைபவனே...!
நானும் வழிப்போக்கன்..
தானே....!போகிற போக்கில் ....
பயிரிட்டுப் போறேன்...
ஒருநாள் என் எழுத்தும்..
பரண் ஏறும் பாரேன்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக