சனி, 9 ஜூன், 2012

பவழச்சிப்பி.....




ஆழ் கடலின் 
முடிவில் என்றோ,,,,,
மணல் துளிகள் 
அரித்தெடுக்க,
முத்துத்  தங்காத 
சிப்பியென 
அமிழ்ந்திடும் 
வேளையிலே..!

சுவாதித் திருநாள் 
வந்துவிட்ட 
உற்சாகத்தில் 
அலை ஒன்று....
சிப்பி இழுத்து 
கரை ஒதுக்க ..
மழைத் துளியும் 
இறங்கிடவே ...

பெரும் புயலும் 
அடித்திடவே....
போராடித் தோற்ற 
சிப்பி தன் நிலை 
தடுமாறி  அலைகளூடே 
மறைந்து ஆழ்கடல் 
மீண்டும் சேர......
பவழப் பாறைகள் 
கேட்டனவே.....

சென்றாயே....ஏன் 
வெறும் சிப்பியாய் 
வந்துவிட்டாய் ..?
உன்னுள்ளே.... முத்து 
இனியும் உதித்திடுமோ.?
வாடிய சிப்பியும் 
கடலோடு தன் 
கண்ணீரை கலந்து 

வாய் திறந்தது......
முத்து மட்டுமே 
சிப்பிக்குள்ளே..... என்று 
ஏதும் சட்டமா?

செம்பவழப் பாவையே......
இதயமாய்....  உனை...
சுமந்து  வலம் வருவேன்.....
கலி அழிவின் முடிவினிலே ...
நாமும் 
சேருவோம்...
அதிசயமாய்... புதுமையாய்
பவழச்சிப்பி...!





 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக