இந்த
வருடம் பரிட்சையில் வெற்றி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்ல ஆவலோடு
இருக்கும் அத்தனை மாணவ, மாணவிகளுக்கும் எமது வாழ்த்துக்கள். அதே சமயத்தில்
ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது எந்தவித காரணமும் இல்லாமலோ தோல்வி என்ற முடிவை
பெற்றவர்களுக்கு இந்த எனது கட்டுரையை பகிர்ந்து கொள்கிறேன்.
எந்த ஒரு விஷயத்திலுமே வெற்றியும் தோல்வியும் ஒரே நேர்கோட்டின் இரு முனைகள்.ஒரு வெற்றியின் பாதை ஒரு தோல்வியில் முடியும் ஒரு தோல்வியின் பாதை ஒரு வெற்றியில் முடியும். இதை வாழ்க்கை முழுவது புரிந்து கொண்டு செயல் பட்டால் வெற்றியோ தோல்வியோ நம்மை ஒன்றும் பெரிதாகப் பாதித்து விடாது.
ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து சிறுவ சிறுமியாக, மாணவ மாணவியாக, அதற்க்கும் மேல் ஒவ்வொரு படியாய் கடக்கும் பொருட்டு ஒவ்வொரு மட்டத்திலும் வெற்றியையும் தொல்வியயுமே அவனோ அவளோ மாறி மாறி சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். இது தான் வாழ்வியல்.எதிலுமே ஆரம்பமும் இல்லை. எதுவுமே முடிவதும் இல்லை.
இந்தப் பரிட்சையின் முடிவு தோற்று விட்டால் அதனால் நாம் வாழவே தகுதி இல்லாதவர்களும் இல்லை.வெறும் பரீட்சை முடிவுகள் மட்டுமே நம்மை சமுதாயத்தில் ஒரு அங்கமாக அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ முடியாது . இதை உணர்ந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து செயல் பாட்டில் இறங்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், நம்மோடு கூட படித்த தோழர்கள் இவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எண்ணி மேலும் மனதை இறுக விடக் கூடாது.
ஒன்றே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எந்த ஒருவரும் தொடர்ந்து வெற்றியையே சந்தித்து வருபவர் இல்லை. ஏற்றமும் தாழ்வும் போல் வெற்றி தோல்வியும் சகஜமான ஒரு நிகழ்வு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.நமக்கு முன்னே ஒரு வெற்றிப் பாதை நிச்சயம் இருக்கு என்று நம்புங்கள்.நடப்பது அனைத்தும் நன்மைக்கே என நினைக்க ஆரம்பியுங்கள்.
உங்களுக்கான வெற்றி பாதை திறந்து கொள்ளும் அதிசயம் உணருங்கள்.இன்று தொல்வ்வியடைந்தவர் என்ற பட்டயம் பிடித்த நீங்களே நாளைக்கு சாதனையாளர் பட்டியலில் முதலாவதாக இடம் பெறும் நிலையும் உருவாகலாம் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் தோல்வியின் படி வெற்றிப்பாதை நோக்கி செல்லும் என மனம் உவந்து வாழ்த்துகிறேன்.

மேலும், சகோதர சகோதரிகளே, நண்பர்களே, உங்களுக்காக ஒரு வேண்டுகோள். என்னவென்றால்..உங்களில் சிலர் தேர்வு முடிவுகள் வெளியான இந்த தருணத்தில் தோல்வியை சந்திக்க முடியாமல் மனதுக்குள் தவித்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் உங்கள் அருகில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவாய் தோள் கொடுங்கள். வார்த்தைகளால் மட்டுமே மனதை ரணப்படுத்தவும் முடியும் குணப்படுத்தவும் முடியும் என்பதை புரிந்து கொண்டு அதாரவாய் இருங்கள்.
என்றென்றும் மாணவ சேவையில்,
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக