ஆற்றங்கரைப் படித்துறை
ஓரத்தில் காத்திருந்தேன்...
மிதந்து வரும் தூதுச்
சருகுகளுள் விழிகள்
எனதானதைத் தேட...!
ஊரார் விழிகளில் ஏளனம்
என் மனதிலோ நூதனம்
தென்றல் தொட்டு விளையாட
மீன்கூட்டம் விரித்த வலையில்
என் மனம் சிக்கித் துடிக்க...!
நெஞ்சின் ஆழத்தில்
ஆயிரம் வார்த்தைகள்
காற்றோடு கீதங்களாக
ஆறுதல் சொன்ன அந்தியம்
சோகம் தாளாது மயங்கிச் சாய...!
வெள்ளி நிலா வெளிச்சம் போட
விழித்த மனம்...தேடிக் கிடைத்ததை
கிடைத்ததைத் தொலைத்ததை
ஆற்றாமைக் கேள்விக் கனியாய்...
நெஞ்சைத் துளைக்க...!
விழிகளில் ஆற்றை ஏற்றி
ஆற்றை விட்டுப் புறப்பட
வழியெங்கும் கூடவே
விடாது வருகிறாய்...
நீயும்...ஆறாக....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக