இரவும் பகலும் ஒன்றாய்...அணைக்க
நிறங்கள் ஏதும் பாராமலே வண்ணங்களை
வாஞ்சையோடு சொல்லி மகிழ
வானாவில்லாய் மனம் வளைய
தேடிடுமே கைகளும் அதை இழுக்க..!
என் உரு நானே அறியாத போது
விழிகளுக்கேது வெட்கமும் கோபமும்....?
உணர்வுகள் உயிர் கொண்டு எழுப்ப
புலப்படாத உருவங்களுக்கு
நான் யாரென்ற உறவு சொல்ல ?..
சிவனும் சக்தியும் எனக்குகுள்ளேயே
படைத்த அசதியில் உறங்கிப் போக...
கண்கள் எனககிருப்பதை மறந்தனரோ..?
திறந்திருக்கும்.. விழிகளிலே..
ஒளி விழுந்தும் ஒளிரவில்லை..!
காவியமோ.. ஓவியமோ..கண்கள் தாண்டி
கண்ணாடி மனதில் முகம் பதித்து பறக்கிறது...
மனக்கண்ணோ படித்துப் பார்த்து வியக்கிறது..!!
இரு வேறு உலகம் உண்டென்ற விந்தை
எனக்கு மட்டுமே தெரிகிறது.. !
பார்வை புள்ளினம் ..பழம் தின்னப் போனதோ ?
வழி மாறிப் பறந்தாயோ .? எனையும் மறந்தாயோ?...
தட்டி எழுப்பிடுவாய்.... வானத்தின் கருநிலவை....
கண் எட்டும் தூரம் வரை...இருளடைந்த பூமி....
காலடியில் பாரமாய் அழுத்தினாலும்
இதயம் இணையத்தில் சிறகடித்துப் பறக்கிறதே..!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக