சூரியன் நான்.....
சுண்டக்காய் நீ...!
சின்ன சுக்கிரன்...
சும்மா வால் பிடி
பின்னாடி....!
ஏளனமாய் எனை
அழைத்தாய்...!
யுக யுகமாய்..
வாலாக நானும்
தலைசுற்ற உந்தன்
பின்னால்...சுற்றிச்
சுற்றி அலுத்துப்
போனது எனக்கு...!
நீயோ வெள்ளை...!
நானோ வெள்ளி....!
வெள்ளிக் கெதற்கு
வேலி...வெட்டவெளிப்
பிரபஞ்சத்தில்..!
தங்கச் சூரியனே...
உனைத் தடுத்து
மறைக்கிறேன் பார்...
ஏழு தோழருக்கும்
எழாத தைரியம்..இன்று..
துடிப்புடன் கிளம்பி
விட்டேன்...!
நீயோ வெள்ளை..
நானோ வெள்ளி...
உன்னை மறைக்க
என் முகத்தில்...
கரி அப்பிக் கொண்ட
கதை....சொல்லாதே...!
பிள்ளையார் பிடிக்க
குரங்கான கதையாய்...
சூரிய முகத்தில்..!
திருஷ்டி பொட்டு
வைத்து அழகு பார்த்த
நிறைவாவது இருந்து
விட்டுப் போகட்டும்...
நான் அடித்தால்..!
சுக்ரதசை.....! இது
போதும் எனக்கு...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக