கருவறையில் முந்தி
இடம் கொண்டாய்...
இருந்தும் தாயையே
நீ சுமந்தாய்...!
ஐந்து திரி கொண்ட
ஒளிரும் விளக்கு நாம்..
நூலிழைகள் பிரிந்த
நூல்கண்டு நாம்...
தீபத்தோடு திரியை
திசைக்கொன்றாய்..
தனித் தனியே
பிரித்து வைத்தார்..!
நிழலாடும்
உருவங்களோடு நம்
நெஞ்சங்கள்
தனியாய் வாடும்..!
தலைவன் சிதறியதால்
தாயின் தைரியம்
சிதறியது ....ஆகையால்
நம் தலைகள் சிதறியது...!
வனக் குயிலாய்..
தொடர்பில்லாமல்
தொடராகத்
தொடரும் ஒலி.
யாருக்கும் கேட்காது..
நம் மனவலி..!
சூறைக் காற்று சூறையாடிடும்..
குடும்பத்தில் குதூகலம்..
தனிக் குயிலாய்..
கால அரக்கன்
விதியின் பிடியைத்
தளர்த்தி நமை
விடுவித்தான்..!
குழந்தை முகங்கள் ...
குமரி முகங்களை..
கண் சேர்த்த காலம்...
உண்டானது மனவலிமை..!
பிரிவால் இழந்த பாசத்தை...
அன்புத் தாங்கியாய்..!
ஒரு கூட்டுப் பறவை நாம்
பகர்கிறோம் அன்று முதல் ..
தந்தையை ஈடு செய்ய
நீ அணிந்த முகமூடி...
இன்றுவரை கழட்ட விடாமல்
முகத்தோடு உறவாடுது...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக