ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சிறகுகள் வேண்டும்......



சிறகுகள் வேண்டும்......
கவிதை : ஜெயஸ்ரீ ஷங்கர்.

பட்டு மேகத்தை உரசும் கண்கள்..
மனமோ...தொட்டுவர துடிக்கும்..
வழி பார்த்துக் காத்திருக்க...கிளி... 
வந்து மாட்டியதே...!

ஒரு நாள் ஒப்பந்தம் கிளியே...
உன் போல் நான் மாறவேண்டும்....
சரியென சிறகுகள் தந்தாய்...பிழைத்துப் 
போ என குரலும் தந்தாய்..!

வெட்டவெளி வானில் நானும்..
சுற்றி சுற்றிப் பறந்தேன்....
உந்தன் குரலில் எந்தன் கீதம்..
உயர.... உயர....இசைத்திடவே...!

மலைகளைக் கடந்தேன்..
அருவியைக் கடந்தேன்..
ஆற்றையும் கடந்தேன்...
கோபுரங்கள் கடந்தேன்...

வேடனில்லாக் காட்டையும்..
வீரத்தோடு நான் கடந்தேன்...
சுதந்திர வானில் சுற்றும்போது...
என் சுற்றத்தை நான் மறந்தேன் ..!

பொய்யில்லை புரட்டில்லை ..
புறம்பேச எவருமில்லை 
உடல் மாற்றும் புதுமை...  
இங்கில்லையோ !!

இன்னுமொரு ஒப்பந்தம்.... 
போடலாமா? 
சிறகுகளைக் கேட்காதே....
 பைங்கிளியே...!
===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக