ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

.மனிதர்களை...மன்னியுங்கள்...!


வெண்ணிலவை எட்டிப் 
பிடிக்க ஏணிபோல்
உயர்ந்த தென்னைமரம்...!


தென்றலோடு கூடஆடிக்
களித்துக் கண்ணாமூச்சி
விளையாடும் தென்னங்கீற்று..!

குலை குலையாய்..
நீர் தாங்கி கைகளுக்கு
எட்டாது கவிஞர் மனதைத் திருடும்
தென்னத்தோப்பு மரங்கள்..!

புதிய மனிதா.....!
எவ்வளவு எளிமையாய்
என் உயரம் குறைத்தாய்..!

உயரத்தில் காய்த்த என்
தங்கங்களை..தரை நின்று தட்டி
வெட்டிப் பறித்தாய்...!

எனதுயரம் குறைத்து
உனதுள்ளம் சொன்னாய்...
வேதனையை தலை குனிந்தோம்..!

அன்று..தென்றலொடும் வான்
மதியோடும் விளையாடும்
எந்தன் முன் நீயே ...பாவமாய்..!

இன்றோ...உயரங்கள் காலாவதி
ஆகி காலாகிப் போன எங்கள்
முன்னே...நீயே ..பாவியாய்...!

எமை ஆட விடாது....அசைய விடாது..
தென்றலோடு கூட விடாது...குறுகிய
தென்னைகளே....
மனிதர்களை...மன்னியுங்கள்...!

2 கருத்துகள்:

  1. //எமை ஆட விடாது....அசைய விடாது..
    தென்றலோடு கூட விடாது...குறுகிய
    தென்னைகளே....
    மனிதர்களை...மன்னியுங்கள்...!//

    என்னை கவர்ந்த வரிகள்.. வாழ்த்துகள் ஜெயஸ்ரீ.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் பவள சங்கரி...
    தங்களின் வருகைக்கும்...
    பாராட்டுக்கும் மிக்க நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    பதிலளிநீக்கு