ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சுடர்க்கொடி கீதம்..!


ஆண்டாள் பாசுரம் அரங்கேறும் நேரம்..
மணமேடையில் ...என்றும் தேன் சிந்துமே...அவள்
இதயக்காவியம் இமையை ஈரமாக்குதே......
கோதை ஸ்ருதி மீட்டி போடும் ஒரு தூபம்..!
காதல் இந்த யாகம் சேர்ந்ததோ பாதம் .
கண்டதோ யோகம்....சுடர்க்கொடி கீதம்..!


பாசுர தாகம் மூடுதே மேகம்... நம்முள்
மார்கழி தனை புரட்டாசி எண்ணுமோ இனி..
மனம் போகும் காட்டு நதி வேகம் ..அதில்
தோழியின் துணை கூட சூடினாள் பாவை..!
வேகம் அவள் வேகம் மோகன ...ராகம் . !
அரங்கனைக் கண்ட போழ்தெலாம் தேடும்...


வாடுமே தேகம்...வான்மழை மேகம்..!
ஆண்டாள் அவள் மீது ரங்கன் ஒரு பாதி
கோதை வரும் போது வரமாய் வரும் மீதி..
பவழ மணித் தேராய்...அரங்கேற்ற வேளை
கிளி கொஞ்சும் கையும் கவி கொண்ட கண்ணும்..
கவி யாவும் இன்றும் மனம் உருகிப் பாட...!


திருப்பாவை என்றே தினம் அவளை நாட..
தொழுவோர்க்கு என்றும் அவள் கரங்கள் தாங்க...
மெழுகு திரி போல மனம் உருகிக் கரைய..
ஊறும் நதி போல கருணைக் கடலாய் பொழிய
பொழுது விலகாமல் பாடுவோம் சிந்து
வேண்டுவோம் என்றும் அவன் அருளை நம்பு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக