கொத்தியது: ஜெயஸ்ரீ ஷங்கர்.
வழி காணாத் துருவமும்..
அருகில் சலசலக்கும் தூரமும்..
நீ..!
------------------------------ -------------------------
என்..
இதயம் இவ்வளவு தான்..!
என்றாவது....
உன் ஒற்றை வார்த்தை
கேட்டால் கூட..
போதும் என உதிர்ந்துவிடும்..!
என் துயரின் துளி...
உன் உயிர்த்துண்டில்
துளியாவது..
அறியாமல் போய்விடுமோ..?
------------------------------ ------------------------------ --
நீ மட்டும் சொல்லாதிருந்தால்
நான் வெறும்
பாலைவனத்துப் பூவாய்...
தொலைந்து போயிருப்பேன்...
இப்போதோ...
என்னை நானே தேடுகிறேன்...!
------------------------------ ------------------------------ ---------
குழந்தையின் கரங்களாய்
உன்னைத் தாவும் உணர்வு
அடர்வனத்தில் கருமரத்தின்
கடைசி இலையடியில் பதுங்கி
காத்திருககும் சிறு முட்டையாய்
என் ஆன்மா.....
எப்போது சிறகு முளைக்கும்..?
எங்கெல்லாம் பறக்கலாம்...!
------------------------------ ------------------------------ ----------
சேகரித்த தேனை
அடையோடு..
இழந்தேனே....
தேனீ....!..
---------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக