பிறந்ததன்
பேர் சொல்லுமோ
வங்கம்...!
தாகூர்...
வாழ்ந்ததன்
நிழல் தாங்குமோ..!
எங்கும்..!
------------------------------ -----
எண்ணத்தை
எழுதி வைத்தாய்..
எங்கிருந்தோ....
வந்த காற்று...
ஊரெங்கும் உன்னைப்
பரப்ப....
கவிதைகளை
காகிதங்களாக...
வாரிச் சென்றதே..!
------------------------------ ---------
நீ..!
கீதாஞ்சலி பாடிவிட்டு
உறங்கிவிட்டாய்...!
நான்...!
படித்துப் படித்து
உறக்கம் தொலைத்து
உருகுகின்றேன்...!
------------------------------ ----------------
ஒரே...புத்தகம்....
உந்தன் வாழ்க்கையைப்
படித்தது...!.
அதே புத்தகம்...
என் வாழ்க்கையைப்
பகிர்ந்தது..!
==========================
ஏனோ....
கண்களில் சோகம்...
ஏனோ....
எண்ணத்தில் சோகம்..
ஏனோ...
பாதை இறுதி
வரை வெறுமை...!
------------------------------ ------------------
ஆழ்கடலுள் கைவிட்டு
அள்ளிய முத்துக் குவியல்..!
ஊர்கோல மேகங்களை
ஒன்றாகக் கோர்த்து
அடுக்கிய கவிப்பொதி...!
காலங்களை நகரவிடாது
பிடித்திழுக்கும் சங்கிலியாய்...
எதிரொலிக்கும்...கீதாஞ்சலி..!
கண்களோடு ஆன்மாவைக்
கட்டி அணைத்து..
நெஞ்சோடு பறவைகள்..
ஓயாமல் சிறகடிக்க....
முத்துக் குளிக்கும்...
கதிரவனை கைதூக்கி
நிறுத்தும்...
வெண்தாடி வேந்தரே...!
இசைக்க மறப்பதில்லை...
இன்றும் உமது நிழல்கள்..!
=============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக