புதன், 11 ஏப்ரல், 2012

காந்தக்கூடு..!எனக்கெதற்கு...இத்தனை கூடுகள்...?
சலிப்புத் தட்டி விட்டது...
கண்டத்தையே கண்டு...
உண்டதையே உண்டு....

விரைவில் வந்து விடுகிறேன்...!சொல்லிவிட்டுதான்.... வந்தேன்......
திக்குத்தெரியாத காடு..இது...!
வந்த பாதை மறக்க செய்தது..

மின்சாரக் காட்டினில் காந்தக்கூடு..!
பிரபஞ்சமே....மின்னிணைப்பில்....
சிக்கித் தவிக்க...
நான் மட்டும் என்ன...?
வழி வழியாய்.....
வந்த வழி மறந்து....
மாட்டிக் கொண்டேன்..!

இந்த முறையேனும்.....என்
சொந்த முகவரி அறிந்து...
என்னை அனுப்பிவைப்பாயா.....
ஜெயா..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக