சனி, 7 ஏப்ரல், 2012

தேடும் அலைகள்...!

கண்ணகி


பூம்புகாரின் நீலக்கடலின்...
ஆக்ரோஷ அலையின் ஆதங்கம்..
கரையோரக் கருங்கல் குவியலின்
விளிம்பில் மோதி மனதைப் பிசைய..
கண்ணகியும் கோவலனும் காதலர்களாய்..
ஈரமணலில் தடம் பதித்து நடந்த நாட்கள்..!

அவர்தம் பேசிய காதல் மொழியெல்லாம்
தென்றலுக்கும் பரிசாய்..!
பாண்டியனின் தவறி வந்த வார்த்தையாலே..
மணம் முடித்தும் தவறிழைத்த கோவலனின் 
தலை தரை உருண்டதால்...

ஓர் சிலம்புக்குத்  தம்மோடு....
சிலப்பதிகாரத்தையும் தந்து
தன் காதல் கணவன் அழிந்ததால்
கற்புக்கு உற்ற காதலாய்..
ஒற்றை சிலம்பும் விரித்த கூந்தலுமாய்
மன்னனிடம் நீதி கேட்க...!

கடம்பவன மதுரையைச்  சாம்பல் காடாக்கி 
சரித்திரம் படைத்த காதலுள் ஒன்றாய்
தலைகீழான கண்ணகியின் வாழ்க்கை ..
அது நிஜமென்றதாலே..
ஆண்டுகள் ஆயிரம் கடந்தும்...இன்னும்

பூம்புகாரில் கடலலைகள் 
கண்ணகியைத் தேடுதோ...?
கட்டிய காதலனைக் காணச் சென்று 
காவியமாய் மாறியது தெரியாமலேயே...!


ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக