ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கருங்கல்..கண்ணீர்....


நானும் ...நீயும்...
ஒரே.....
வெட்டவெளியில்
கரும்பாறைக் குன்றுகளாய்
பலகாலம் 
காத்திருந்தோம்...!
நமை செதுக்கும் நாளுக்காக..!
வந்தான் சிற்பி..
எனைத் தட்டி 
செதுக்கி...
கல்லறையின் 
நினைவுச் சின்னமாய்
நிறுத்தி வைத்தான்...!
காத்திருந்தேன்.
உன் வரவுக்காக..!

உன்னை மட்டும்
தெய்வ சிலையாய் 
அழகாய் வடித்து
கோவிலுக்குள் எடுத்துச்
செல்ல்வதைக் கண்டதும்
அழுகிறேன் நான்...
நான் செய்த 
பாவம் தான் என்ன?
நீ செய்த
புண்ணியம் தான் என்ன?
=================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக